தண்டநீதி முதல் - தண்ணீர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தண்டநீதி அரசியல் நூல் .
தண்டப்படுதல் அபராதம் விதிக்கப்படுதல் .
தண்டப்பொருள் அபராதமாகக் கொள்ளும் பொருள் .
தண்டபாசிகன் கொலைகாரன் .
தண்டபாணி தண்டைக் கையிலுடைய முருகன் ; திருமால் ; யமன் ; வீமன் .
தண்டம் கோல் ; தண்டாயுதம் ; அபராதம் ; தண்டனை ; குடைக்காம்பு ; உலக்கை ; படகு துடுப்பு ; ஓர் அளவை ; உடம்பு ; படை ; படை வகுப்புவகை ; திரள் ; வரி ; கருவூலம் ; இழப்பு ; யானைகட்டும் இடம் ; யானை செல்லும் வழி ; ஒறுத்து அடக்குகை ; வணக்கம் ; ஒரு நாழிகை நேரம் ; செங்கோல் .
தண்டம்பண்ணுதல் அடியில் வீழ்ந்து வணங்குதல் .
தண்டம்பிடித்தல் அபராதம் வாங்குதல் .
தண்டம்போடுதல் அபராதமிடுதல் ; வணங்குதல் .
தண்டமானம் வால் முறுக்குதல் .
தண்டமிழ் தண்ணிய தமிழ் .
தண்டயமரம் கோக்காலி .
தண்டியமரம் கோக்காலி .
தண்டயாத்திரை படையெடுத்துச் செல்லுகை .
தண்டர் தண்டனை செய்வோர் .
தண்டல் வசூலித்தல் ; வசூலிக்கும் பொருள் ; தீர்வை வசூலிப்பவன் ; எதிர்த்தல் ; தண்டனை ; படகு தலைவன் .
தண்டலர் பகைவர் .
தண்டலாளன் தீர்வை வசூலிப்போன் .
தண்டலை சோலை ; பூந்தோட்டம் ; ஓர் ஊர் .
தண்டவாளம் புடைவைவகை ; இரும்புச்சட்டம் .
தண்டற்காரன் வரி முதலியன வசூலிப்போன் ; தீர்வை வசூல் செய்யும் ஊர்ப் பணியாளன் ; படகு தலைவன் .
தண்டன் கோல் ; வணக்கம் .
தண்டன்சமர்ப்பித்தல் மார்பு நிலத்துற விழுந்து வணங்குதல் .
தண்டனம் சிட்சை .
தண்டனிடுதல் கீழே விழுந்து வணங்குதல் .
தண்டனை ஒறுப்பு .
தண்டா தொந்தரவு ; சண்டை ; சிக்கல் ; கதவை அடைத்து இடும் இரும்புத்தடி ; உடற்பயிற்சி வகை .
தண்டாமை நீங்காமை .
தண்டாயம் பாரந்தாங்குந் தண்டு ; தவணைப் பகுதி .
தண்டாயுதபாணி தண்டாயுதத்தைக் கையிலுடைய முருகக்கடவுள் .
தண்டாயுதம் கதைப்படை ; பாரந்தாங்கும் தண்டு .
தண்டாயுதன் தண்டாயுதம் உடையவன் , முருகக்கடவுள் ; வைரவக்கடவுள் ; ஐயனார் ; வீமன் .
தண்டாரணியம் காண்க : தண்டகாரணியம் , ஓர் ஆரிய நாடு .
தண்டாரம் குயவன் சக்கரம் ; மதயானை ; வில் ; தோணி ; வண்டி .
தண்டான் கோரைவகை ; புடல்வகை .
தண்டி தண்டற்காரன் ; பருமன் ; மிகுதி ; தரம் ; ஓர் அணி இலக்கண நூலாசிரியர் ; யமன் ; செருக்குள்ளவர் ; சண்டேசுர நாயனார் ; எட்டு அடியுள்ள இசைப்பாட்டுவகை .
தண்டிகை ஒரு பல்லக்குவகை ; பெரிய வீடு .
தண்டித்தல் பருத்தல் ; ஒறுத்தல் ; வெட்டுதல் ; கட்டளையிடுதல் ; வருந்தி முயலுதல் .
தண்டிதரம் ஆற்றல் .
தண்டிப்பு தண்டனை ; வெட்டுகை .
தண்டியக்கொம்பு நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளுங் கழி ; கூரை தாங்குங் குறுக்குக் கட்டை ; மக்கள் நெருக்கி உட்புகாதபடி இடும் குறுக்குமரம் ; பல்லக்குக் கொம்பு .
தண்டியம் கச்சூர்க்கட்டை ; புறக்கூரையைத் தாங்கும் கட்டை ; நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளும் கழி ; வாயிற்படியின் மேற்கட்டை .
தண்டியல் பல்லக்குவகை .
தண்டியிற்புண் ஆண்குறியில் வரும் புண்வகை .
தண்டிலம் ஓமம் பண்ணுதற்கு அமைத்துக் கொண்ட இடம் ; சிவபூசைக்கு அமைத்துக் கொண்ட இடம் .
தண்டு கோல் ; மரக்கொம்பு ; திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம் ; தண்டாயுதம் ; வளைதடி ; உலக்கை ; விளக்குத்தண்டு ; வீணை ; செவித்தண்டு ; மூக்குத்தண்டு ; முதுகந்தண்டு ; ஆண்குறி ; வரம்பு ; பச்சோந்தி ; தொளையுடைய பொருள் ; மூங்கிற் குழாய் ; மூங்கில் ; பூவிதழ் ; சிவிகை ; செருக்கு ; மிதுனராசி ; சேனை ; சேகரித்த பணம் முதலியன .
தண்டுக்கீரை பருத்த தண்டுடன் வளரும் கீரை .
தண்டுக்கோல் படகு துடுப்பு ; படகு தள்ளுதற்குரிய சவளமரம் ; பிரமசாரிக்குரிய பலாசக்கோல் .
தண்டுதல் வசூலித்தல் ; வருத்துதல் ; இணைத்தல் ; நீங்குதல் ; விலகுதல் ; தணிதல் ; கெடுதல் ; தடைபடுதல் ; தொடுதல் ; மனம் அமைதல் ; விருப்பங்கொள்ளுதல் ; சினமூண்டெழுதல் ; விலகுதல் .
தண்டுபோடுதல் படகுதுடுப்புத் தள்ளுதல் ; வாகனஞ்சுமத்தல் .
தண்டுமாரி சிறு தெய்வங்களுள் ஒன்று ; அடக்க மற்ற பெண் .
தண்டுமிண்டு மூர்க்கத்தனம் .
தண்டுலபலை திப்பிலிச்செடி .
தண்டுலம் அரிசி ; காண்க : தண்டிலம் .
தண்டுலம்பு அரிசி கழுவும் நீர் .
தண்டுவலித்தல் காண்க : தண்டுபோடுதல் .
தண்டெடுத்தல் படையெடுத்தல் .
தண்டெலும்பு முதுகெலும்பு .
தண்டேறு எலும்பு .
தண்டேறுதல் பல்லக்கேறுதல் .
தண்டை மாதர் காலணியில் ஒன்று ; கேடகம் ; வால் ; காண்க : தண்டைமாலை .
தண்டைக்காரன் வஞ்சகன் ; தொந்தரவு செய்வோன் .
தண்டைநோய் நோய்வகை .
தண்டைமாலை பூமாலைவகை .
தண்டைமானம் வால் முறுக்குதல் .
தண்டொட்டி மாதரின் ஒரு காதணிவகை .
தண்டோரா பறைசாற்றல் .
தண்ண எளிமையுடைய .
தண்ணடை மருதநிலத்தூர் ; நாடு ; பச்சிலை ; காடு ; சிற்றூர் ; உடுக்கைவகை .
தண்ணம் ஒருகட்பறை ; மழுவாயுதம் ; குளிர்ச்சி ; காடு .
தண்ணவன் குளிர்ந்த சந்திரன் .
தண்ணளி குளிர்ந்த அருள் .
தண்ணாத்தல் தாழ்த்தல் .
தண்ணியசொல் இதப்படுத்துஞ்சொல் .
தண்ணீர் குளிர்ந்த நீர் ; நீர் .