தாம்பிரபத்திரம் முதல் - தாய்க்கிழங்கு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாம்பிரபத்திரம் செப்புப் பட்டயம் .
தாம்பிரபன்னி தாமிரபருணி ஆறு .
தாம்பிரம் செம்பு ; சிவப்பு .
தாம்பிரவன்னி காண்க : தாம்பிரபன்னி .
தாம்பு கயிறு ; தாமணிக் கயிறு ; ஊஞ்சல் ; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி .
தாம்புக்கயிறு கயிறு .
தாம்புந்தோண்டியுமாதல் மிக ஒற்றுமையாயிருத்தல் ; இறைக்கும் கயிறும் குடமும் போன்றிருத்தல் .
தாம்புலோவல்லி மஞ்சாடிமரம் .
தாம்பூரவல்லம் வாழை .
தாம்பூலங்கொடுத்தல் வெற்றிலைபாக்கு அளித்து முகமன்செய்தல் ; வெற்றிலைபாக்கு அளித்துக் கூட்டம் கலைத்தல் ; வேலையிலிருந்து நீக்க ஆணைதருதல் .
தாம்பூலதாரணம் வெற்றிலைபாக்குப் போடுகை .
தாம்பூலம் வெற்றிலைபாக்கு .
தாம்பூலம்வைத்தல் திருமணத்திற்கு வருமாறு வெற்றிலைபாக்கு வைத்து ஒவ்வொருவரையும் அழைத்தல் ; இரகசியத்தை வெளியாக்குதல் .
தாம்பூலமாற்றுதல் திருமணம் உறுதிசெய்தல் .
தாம்பூலவல்லி வெற்றிலைக்கொடி .
தாம்பூலவாககன் அடைப்பைக்காரன் .
தாம்பூலி காண்க : தாம்பூலவல்லி .
தாம்பூலிகன் வெற்றிலை வாணிகன் .
தாம்போகி ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி ; ஏரியில் மிகுதியான நீர் தானே வெளிச்செல்வதற்குக் கட்டியமதகு .
தாமசபதார்த்தம் தமோகுணத்தை அதிகரிக்கச் செய்யும் கள் , இறைச்சி முதலியன .
தாமசம் காண்க : தமோகுணம் ; தாமதம் .
தாமசாத்திரம் பகைவருடைய கண்ணும் மனமும் இருளடையச் செய்யும் அம்புவகை .
தாமசித்தல் காண்க : தாமதித்தல் .
தாமணி கயிறு ; மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடு கன்றுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு ; கப்பற்பாயின் பின்பக்கக் கயிறு .
தாமதம் காண்க : தமோகுணம் ; தாமசாத்திரம் ; மந்தகுணம் ; காலநீட்டம் .
தாமதவேளை தீயநாளின் கடைப்பகுதி .
தாமதித்தல் காலந்தாழ்த்தல் ; தடைப்படுதல் ; மனமின்றி இருத்தல் .
தாமநிதி ஒளியின் இருப்பிடமான சூரியன் .
தாமநூல் ஆயுள்வேதம் .
தாமம் பூமாலை ; கயிறு ; வடம் ; பரமபதம் ; நகரம் ; ஊர் ; மலை ; இடம் ; உடல் ; ஒழுங்கு ; பூ ; கொன்றைமரம் ; சந்தனம் ; ஒளி ; போர்க்களம் ; யானை ; புகழ் ; பிறப்பு ; பதினெட்டுக் கோவையுள்ள மாதர் இடையணி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று .
தாமரசம் காண்க : செந்தாமரை ; செம்பு .
தாமரை தாமரைக்கொடி ; ஒரு பேரெண் ; பதுமவியூகம் ; எச்சில் தழும்பு .
தாமரைக்கண்ணன் தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் .
தாமரைக்கண்ணான் தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் .
தாமரைக்கொட்டை பொகுட்டு ; மகளிர் தலையணிவகை .
தாமரைச்சிறகி நீர்வாழ் பறவைவகை .
தாமரைநண்பன் தாமரைக்குக் காதலனான சூரியன் .
தாமரைநாதன் தாமரைக்குக் காதலனான சூரியன் .
தாமரைநாயகன் தாமரைக்குக் காதலனான சூரியன் .
தாமரைநூல் தாமரைத்தண்டின் நூல் .
தாமரைப்பாசினி அரிதாரம் .
தாமரைப்பீடிகை புத்தரது திருவடிப்பீடம் .
தாமரைமணி தாமரை விதை ; தாமரை மணியாலாகிய மாலை .
தாமரைமுகை தாமரைமுகை வடிவான தேர் மொட்டு .
தாமரையாசனன் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் .
தாமரையாசனி திருமகள் ; அரிதாரம் .
தாமரையால் திருமகள் ; அரிதாரம் .
தாமரையாள் திருமகள் ; அரிதாரம் .
தாமரைவளையம் தாமரைத்தண்டு .
தாமரைவற்றல் வற்றலாகச் செய்த தாமரைக் கிழங்கு .
தாமரைவாசி காண்க : தாமரையால்(ள்) .
தாமலகி காண்க : கீழாநெல்லி .
தாமளை புன்னைமரம் .
தாமன் சூரியன் .
தாமான் கப்பலின் பின்பக்கத்துக் கயிறு .
தாமிச்சிரம் பேரிருள் ; மாயை ; ஒரு நரகவகை .
தாமிரக்கருணி மேற்றிசைப் பெண்யானை .
தாமிரசாசனம் நிலம் முதலியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கும் செப்பேடு .
தாமிரசிகி செந்நிறக் கொண்டையுடைய சேவல் .
தாமிரப்பட்டயம் செப்பேட்டுச் சாசனம் .
தாமிரப்பல்லவம் அசோகமரம் .
தாமிரபீசம் காண்க : கொள் .
தாமிரம் செம்பு .
தாமிரிகை குன்றிக்கொடி .
தாமிரை காண்க : தாமிரம் .
தாமீகன் பகட்டன் .
தாமை தாம்புக்கயிறு .
தாமோதரன் ஆய்ச்சியர் பிணித்த கயிற்றை இடுப்பிலுடையவன் , கண்ணன் .
தாய் அன்னை , ஐவகைத் தாயருள் ஒருத்தி ; தாயாகக் கருதப்படும் அரசன் தேவி , குருவின் தேவி , அண்ணன் தேவி , மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி .
தாய்க்கட்டுமனை வீட்டின் நடுப்பகுதி .
தாய்க்கண் தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண் .
தாய்க்கரும்பு விதையாக நட்ட முதற்கரும்பு .
தாய்க்காணி முதல்தர நிலம் .
தாய்க்கால்வழி காண்க : தாய்வழி .
தாய்க்கிழங்கு மூலமாயுள்ள முதற்கிழங்கு .