தாலிமணிவடம் முதல் - தாழிசை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாலிமணிவடம் தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக்கொடி .
தாலியம் காண்க : பாதிரி .
தாலியறுத்தல் கணவனை இழந்து கைம்பெண்ணாதல் ; துன்பத்துக்குள்ளாதல் .
தால¦புலாகநியாயம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வழக்குப்போல ஒன்றன் ஒருபுடைத் தன்மையிலிருந்து அதன் முழு நிலையையும் அறியும் முறை .
தாலு நா ; அண்ணம் .
தாலுக்கா மாவட்டத்தின் உட்பிரிவு .
தாலுக்கண்ணி காண்க : வெள்ளைக்காக்கணம் .
தாலுகா காண்க : தாலுக்கா .
தாலுகை மேனாப்பல்லக்கு .
தாலுவுறுத்துதல் தாலாட்டுதல் .
தாலூரம் சுழல்காற்று ; நீர்ச்சுழல் ; குங்குலிய வகை .
தாவகம் வனம் ; காட்டுத்தீ .
தாவசி தவமுடையவன் .
தாவட்டம் சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஒரு கல்வகை .
தாவடம் கழுத்தணிமாலை ; உருத்திராக்க மாலை ; பூணூலை மாலையாகத் தரிக்குமுறை ; இருப்பிடம் .
தாவடி பயணம் ; போர் ; தாண்டுகால் .
தாவடித்தோணி கரைவரையில் சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி .
தாவடிபோதல் படையெடுத்தல் .
தாவடியிடுதல் தாவி அடியிட்டு அளத்தல் .
தாவணி மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடுகளைக் கூட்டமாகக் கட்டுமிடம் ; சிறு பெண்களின் மேலாடை ; குதிரையின் மேலாடை ; காண்க : கண்டங்கத்திரி .
தாவணியடித்தல் காரியமின்றி ஒருவன் வீட்டில் தங்குகை .
தாவந்தம் சங்கடம் ; இரக்கம் ; வறுமை ; ஆத்திரம் ; நரகம் .
தாவம் காடு ; தீ ; காட்டுத்தீ ; வெப்பம் ; மரப்புழு ; துன்பம் .
தாவரசங்கமம் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் ; வீட்டுப்பண்டங்களான அசையும் பொருளும் நிலம் , வீடு முதலிய அசையாப்பொருள்களும் ; சிவபெருமானது திருமேனிகளாகக் கருதப்படும் இலிங்கமும் அடியார்களும் .
தாவரம் நிலைத்திணைப் பொருள் ; ஆதாரம் ; உறுதி ; மரப்பொது ; இடம் ; உடல் ; இலிங்கம் .
தாவரலிங்கம் திருக்கோயிலிலுள்ள சிவலிங்கம் .
தாவரன் கடவுள் .
தாவரித்தல் தாங்குதல் ; காப்பாற்றுதல் .
தாவல் தாண்டல் ; பரப்பு ; வருத்தம் .
தாவழக்கட்டு கால்நடைகளின் முன்னங்காலிற்கும் கழுத்திற்கும் கட்டும் கயிறு .
தாவளக்காரர் தேசாந்தர வணிகர் ; பொதிமாட்டுக்கார வணிகர் .
தாவளம் தங்குமிடம் ; மருதநிலத்தூர் ; பற்றுக்கோடு .
தாவளம்போடுதல் காண்க : தாவணியடித்தல் .
தாவளி கம்பளம் ; வெண்மை ; காண்க : கண்டங்கத்திரி .
தாவளியம் வெண்மை .
தாவளை நோய் தணிந்திருக்கை ; ஒன்றைவிட மேலாயிருக்கை .
தாவனம் தூய்மைசெய்கை ; தோற்றுவித்தல் .
தாவா வழக்கு ; தடை .
தாவாரம் காண்க : தாழ்வாரம் .
தாவானலம் காட்டுத்தீ .
தாவு பாய்கை ; செலவு ; குதிரைநடை ; எதிர்ப்பு ; கேடு ; வலிமை ; பற்றுக்கோடு ; துறைமுகம் ; உறைவிடம் ; பள்ளம் .
தாவுதல் தாண்டுதல் ; தழைத்தல் ; பறத்தல் ; சாய்தல் ; குதித்தல் ; கடத்தல் ; பரத்தல் ; ஊடுசெல்லுதல் ; பாய்ந்து எதிர்த்தல் ; அகங்கரித்தல் ; கெடுதல் ; ஒழிதல் .
தாவுவண்ணம் தாஅவண்ணம் ; இடையிட்டு வரும் எதுகையுடைய சந்தம் .
தாழ் தாழ்ப்பாள் ; சீப்பு ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; தாழக்கோல் , திறவுகோல் ; முலைக்கச்சு ; நீளம் ; வணக்கம் .
தாழ்க்கோல் தாழக்கோல் ; தாழைத் திறக்குங்கோல் , திறவுகோல் .
தாழ்ச்சி கீழ்மை ; தாழ்வு ; தாழ்மை ; குறைவு ; பணிவை வெளிப்படுத்தும் சொல் ; வணக்கம் ; ஆழம் ; இகழ்ச்சி ; ஏலாமை ; காலநீட்டிப்பு ; தவறு ; நிலைகெடுதல் ; விழுதல் .
தாழ்ச்சிஉயர்ச்சி சிறுமை பெருமை .
தாழ்த்துதல் அமிழ்த்துதல் ; கீழ்ப்படுத்துதல் ; குறைத்தல் ; சாய்த்தல் ; தாமதித்தல் ; தங்கச்செய்தல் .
தாழ்தல் அமிழ்ந்துதல் ; சாய்தல் ; குறைதல் ; சரிதல் ; நிலைகெடுதல் ; தாமதித்தல் ; தங்குதல் ; தொங்குதல் ; ஈடுபடுதல் ; விரும்புதல் ; ஆசைப்பெருக்கம் ; வணங்குதல் .
தாழ்ந்தார் பணியுள்ளவர் ; இழிந்தோர் .
தாழ்ந்துகொடுத்தல் இணங்கிப்போதல் .
தாழ்ந்துபடுதல் ஓரிடத்தே சேர்ந்து தங்குதல் .
தாழ்ந்துபோதல் ஒப்புமையில் குறைந்து போதல் ; இழிந்த நிலையடைதல் ; தாழ்ந்து கொடுத்தல் .
தாழ்ப்பம் ஆழம் .
தாழ்ப்பாள் கதவடைக்குந் தாழ் .
தாழ்ப்பாளர் உரிய காலத்தை எதிர்பார்த்திருப்பவர் .
தாழ்ப்பு இறக்குகை ; நீரில் அமிழ்த்துகை ; புதைக்கை ; தாமதம் .
தாழ்புயல் காலிறங்கின மேகம் .
தாழ்மை பணிவு ; இழிவு ; தாமதம் ; வறுமை ; கீழ்மை .
தாழ்வடம் கழுத்தணி ; உருத்திராக்கமாலை .
தாழ்வர் மலையடிவாரம் .
தாழ்வரை மலையடிவாரம் .
தாழ்வறை நிலவறை .
தாழ்வாய் மோவாய் .
தாழ்வாய்க்கட்டை மோவாய் .
தாழ்வாரம் வீட்டிறப்பு , தாழ்ந்த இறப்பு ; வீட்டைச் சாரப் புறத்தே சாய்வாக இறக்கப் பட்ட இடம் .
தாழ்வு பள்ளம் ; குறுமை ; அவமானம் ; குற்றம் ; தொங்கல் ; மலையடிவாரம் ; தங்குமிடம் ; அடக்கம் ; வணக்கம் ; துன்பம் .
தாழக்கோல் தாழ்ப்பாள் ; திறவுகோல் .
தாழங்காய் தாழைக்காய் ; பயனற்றவன் .
தாழஞ்சங்கு வாயகன்ற சங்கு ; இளங்குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சங்கு .
தாழம் ஓசை முதலியவற்றின் தாழ்வு ; அமைதி ; தாமதம் .
தாழம்படுதல் ஓசை தாழ்ந்துவருதல் .
தாழறை சிறிய அறை .
தாழி வாயகன்ற சால் ; இறந்தோரைப் புதைக்க உதவும் பாண்டம் ; வைகுண்டம் ; சாடி ; பரணிநாள் ; அரிதாரம் ; சிவதை ; கடல் .
தாழிசை தரவினின்றும் சுருங்கியதாய் வருவது பாவினங்களுள் ஒன்று .