சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தீவட்டித்தடியன் | பயனற்ற அறிவிலி . |
தீவண்ணன் | நெருப்பு நிறத்தவனான சிவன் . |
தீவத்தி | காண்க : தீவட்டி . |
தீவம் | விளக்கு ; தீவு . |
தீவர்த்தி | காண்க : தீவட்டி . |
தீவலஞ்செய்தல் | திருமணம் ; திருமணச் சடங்கு முதலியவற்றில் ஓமத்தீயை வலமாகச் சுற்றி வருகை . |
தீவளர்த்தல் | உடன்கட்டையேறல் முதலியவற்றிற்கு நெருப்பு வளர்த்தல் ; வேள்வித்தீயைப் பெருக்குதல் . |
தீவளர்ப்போர் | முத்தீயைப் பேணுவோராகிய அந்தணர் ; முனிவர் . |
தீவளி | கடுங்காற்று . |
தீவறை | பெருநெருப்பெரிக்கும் குழியடுப்பு . |
தீவனம் | பசி ; கால்நடைகளின் உணவு . |
தீவாணம் | அரசாட்சி ; அறங்கூறவையம் . |
தீவாந்தரம் | தூரத்தீவு . |
தீவாளி | காண்க : தீபாவலி(ளி) . |
தீவாளிகுளித்தல் | வீண்செலவு செய்து வறியவனாதல் . |
தீவாளியாதல் | கடனால் நிலைகுலைதல் . |
தீவான் | காண்க : திவான் ; தீவில் வாழ்பவன் ; எரிக்கப்படத்தக்க புல்லன் . |
தீவானம் | பைத்தியம் . |
தீவி | புலி ; பறவைவகை . |
தீவிகை | விளக்கு . |
தீவிதிராட்சம் | வெளிநாட்டுக் கொடிமுந்திரிகை . |
தீவிய | இனிமையான . |
தீவிரகந்தம் | துளசி . |
தீவிரம் | விரைவு ; கடுமை ; கொடுமை : சூரியக்கதிர் ; உறைப்பு ; ஒரு நரகம் ; பெருங்கோபம் . |
தீவிரித்தல் | விரைவுபடுத்துதல் ; கொடுமையாதல் . |
தீவிழித்தல் | சினத்துடன் பார்த்தல் . |
தீவிளி | காயாமரம் ; பசுங்காய் ; கொடுஞ்சொல் , கடுங்காற்று ; தீபாவளி . |
தீவினை | பாவம் ; கொடுஞ்செயல் ; அக்கினி காரியம் ; தீ வழிபாடு . |
தீவினையச்சம் | தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் . |
தீவு | நாற்புறமும் நீர் சூழ்ந்த நிலம் ; தொலை நாடு ; பயிர் கரிந்துபோதல் ; இனிமை . |
தீவுக்குருவி | அயல்நாட்டுப் பறவை . |
தீவுச்சரக்கு | வெளிநாட்டுச் சரக்கு . |
தீவேட்டல் | திருமணஞ்செய்தல் ; வேள்வி செய்தல் . |
தீவேள்வி | தீச்சான்றாகச் செய்யும் மணவினை . |
தீழ்ப்பு | கீழ்மை ; தீட்டு . |
தீற்றுதல் | சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ; ஊட்டுதல் ; பூசுதல் ; மெழுகுதல் ; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் ; கயிற்றின் முறுக்காற்றுதல் ; பல்விளக்குதல் . |
தீன் | மதம் ; உணவு . |
தீன்பண்டம் | காண்க : தின்பண்டம் . |
தீனக்காரன் | நோயாளி . |
தீனபந்து | எளியார்க்கு அன்பன் ; கடவுள் . |
தீனம் | வறுமை ; நோய் ; கொடுமை ; நட்பு . |
தீனரட்சகன் | எளியவரைக் காப்பவன் ; கடவுள் . |
தீனன் | வறியவன் ; இரப்போன் ; தீம்பன் ; பெருந்தீனி தீன்பவன் . |
தீனி | கொழுத்த உணவு ; சிற்றுண்டி ; விலங்குணவு . |
தீனிப்பை | இரைப்பை . |
![]() |
![]() |