சொல்
|
அருஞ்சொற்பொருள் |
துபாக்கி | காண்க : துப்பாக்கி . |
துபாசி | காண்க : துப்பாசி . |
தும் | தூசி ; இறப்பு எதிர்காலங்களைக் காட்டும் தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி . |
தும்சம் | அழிவு . |
தும்பகா | காண்க : தும்பை . |
தும்படைசி | நாடாவில் ஓர் உறுப்பு . |
தும்பரம் | அத்திமரம் . |
தும்பராட்டகம் | காண்க : பேரரத்தை . |
தும்பன் | தீயவன் . |
தும்பால் | இறையிலிநிலம் . |
தும்பாலை | சுரைக்கொடி . |
தும்பி | யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை . |
தும்பிக்கை | யானைத் துதிக்கை . |
தும்பிச்சி | கற்பில்லாதவள் ; பழைய நாணயவகை . |
தும்பிப்பதக்கம் | வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட அணிவகை . |
தும்பியூதுதல் | வண்டுபோல ஒலித்தல் ; ஓசையோடு வலிந்து மூச்சு வாங்குதல் ; எச்சில் , சவர்க்காரநீர் முதலியவற்றை ஊதிக் குமிழி உண்டாக்குதல் . |
தும்பிலி | ஒரு மரவகை ; கடல்மீன்வகை . |
தும்பினி | மின்மினிப்பூச்சி . |
தும்பு | கயிறு ; நார் ; சிம்பு ; தாலியுரு ; நெருஞ்சி ; கரும்பு ; வரம்பு ; தூசி ; குற்றம் ; அநாகரிகச் சொல் . |
தும்புக்கட்டு | தேங்காய் நாரால் செய்த துடைப்பம் . |
தும்புக்கயிறு | தென்னை , பனை முதலியவற்றின் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ; மாட்டுத்தும்பு . |
தும்புதட்டுதல் | நையப் புடைத்தல் . |
தும்புபோடுதல் | கயிறு திரித்தல் ; துருவியறிதல் . |
தும்புரு | யாழ்வகை ; ஒரு கந்தருவன் . |
தும்புவெட்டு | ஆடையின் ஓரத்தைக் கத்தரித்தல் . |
தும்பை | ஒரு செடிவகை ; போர் செய்வோர்அணியும் அடையாளமலை ; போர் ; தும்பைத்திணை ; கூட்டம் ; வெற்றிலை ; ஒரு மீன்வகை ; தானியவகை . |
தும்பைத்திணை | பெருவீரச் செயல் காட்டிப் பகைவரோடு போர் செய்தலைக் கூறும் பகுதி . |
தும்பைமாலை | தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் நூல்வகை . |
தும்மட்டி | சிறுகொம்மட்டி . |
தும்மல் | தும்முதல் ; மூச்சு . |
தும்மற்காதல் | தும்மலைக்கொண்டு குறி சொல்லுகை . |
தும்மு | தும்முதல் ; கொசு . |
தும்முட்டி | சிறுகொம்மட்டி . |
தும்முதல் | தும்மல் ; மூச்சுத் தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய்வழியாய் வெளிவருதல் ; விடுதல் ; மூச்சுவிடுதல் . |
துமாலா | இறையிலிநிலம் ; வெள்ளி அல்லது பொன்சரிகை யிழுக்கும் தொழிலின் கடைசிச் செயல் . |
துமானம் | அணிகலப்பெட்டி . |
துமி | வெட்டு ; தூறல் ; மழைத்துளி ; நீர்த்துளி . |
துமித்தல் | வெட்டுதல் ; அறுத்தல் ; விலக்குதல் ; துளித்தல் . |
துமிதம் | மழைத்துளி . |
துமிதல் | வெட்டுண்ணல் ; உமிதல் ; அழிதல் ; விலக்குதல் . |
துமுக்கி | துப்பாக்கி . |
துமிலம் | பேராரவாரம் . |
துமுலம் | குழப்பம் . |
துய் | உணவு ; பஞ்சு ; பஞ்சின் நுனி ; புளியம் பழத்தின் ஆர்க்கு ; மென்மை ; கதிர் ; பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி ; சிம்பு ; கூர்மை . |
துய்த்தல் | புலன்களால் நுகர்தல் ; உண்ணுதல் ; நூல்நூற்றல் ; நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது . |
துய்ப்பு | நுகர்ச்சி . |
துய்ய | தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான . |
துய்யம் | தூய்மை . |
துய்யமல்லி | நான்கு முதல் ஆறுமாதங்களில் விளையக்கூடிய சம்பாநெல்வகை . |
துய்யன் | தூயன் ; வெள்ளிமணல் . |
துய்யா | திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் ; நெசவுப் பின்னல் கயிறு . |
துய்யாள் | தூய்மையுடையாள் ; நாமகள் . |
துயக்கம் | சோர்வு ; தடை . |
துயக்கன் | மனத்திரிவை உண்டாக்குபவன் . |
துயக்கு | சோர்வு ; துயரம் ; மனமயக்கம் ; ஆசை ; பந்தம் ; தடை ; மனத்திரிவு . |
துயக்குதல் | தளரச் செய்தல் . |
துயங்குதல் | சோர்தல் . |
துயம் | இரண்டு ; திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்கள் உடையதுமான மந்திரம் ; கொடி . |
துயர் | துன்பம் ; அரசர்க்கு உரிய சூது முதலாகிய விதனம் . |
துயர்தல் | வருந்துதல் ; தொடர்தல் . |
துயரடி | துன்பம் ; சோர்வு . |
துயரம் | துன்பம் ; மனத்துக்கம் ; இரக்கம் ; மழை . |
துயரி | யாழ்நரம்பு . |
துயல்வருதல் | அசைதல் . |
துயல்தல் | அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் . |
துயலுதல் | அசைதல் ; தொங்குதல் ; பறத்தல் . |
துயவு | அறிவின் திரிபு . |
துயில் | உறக்கம் ; கனா ; தங்குகை ; இறப்பு ; புணர்ச்சி ; ஆடை . |
துயில்கூர்தல் | உறங்குதல் . |
துயில்மடிதல் | உறங்குதல் . |
துயில்வு | உறக்கம் . |
துயிலார் | உறக்கமில்லாத தேவர் . |
துயிலார்தல் | உறங்குதல் . |
துயிலி | ஒரு கீரைவகை ; ஓர் ஆடைவகை . |
துயிலிடம் | உறங்கும் இடம் ; மக்கட்படுக்கை . |
![]() |
![]() |
![]() |