தென்காற்று முதல் - தெனாது வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தென்காற்று தென்றல் .
தென்கிழக்கு தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை .
தென்கீழ்த்திசை தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை .
தென்கீழ்த்திசைப்பாலன் தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் .
தென்கீழ்த்திசையிறை தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் .
தென்கீழ்த்திசையோன் தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் .
தென்கோடு தென்முனை ; பிறைச்சந்திரனின் தென்முனை .
தென்படுதல் புலப்படுதல் ; பயிற்சி அடைதல் .
தென்பல்லி புல்லகம் என்னும் தலையணியின் உறுப்பு இரண்டனுள் ஒன்று .
தென்பாண்டி நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி .
தென்பாண்டிநாடு நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி .
தென்பார் தென்னாடு ; பூமியின் தென்பாகமாகிய பாண்டிநாடு .
தென்பு காண்க : தெம்பு .
தென்புலக்கோன் தென்திசைக்குத் தலைவனாகிய யமன் .
தென்புலத்தார் தென்திசையிலுள்ள பிதிரர் ; யமபடர் .
தென்புலத்தார்வேள்வி இறந்தோர்பொருட்டுச் செய்யும் நீர்க்கடன் .
தென்புலம் தென்னாடு ; பாண்டிநாடு ; யமனுலகம் ; பிதிரர்கள் வாழுமிடம் .
தென்புலர் யமபடர் .
தென்மலை பொதியமலை ; சோலைமலை .
தென்முனி தெற்கில் வாழும் முனிவராகிய அகத்தியன் .
தென்மொழி தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ் .
தென்றமிழ் தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ் .
தென்றல் தென்காற்று .
தென்றல்வருமலை பொதியமலை .
தென்றற்கோன் தென்றலையுடைய அரசனாகிய பாண்டிய மன்னன் .
தென்றற்றேரான் தென்றலைத் தேராகவுடைய மன்மதன் .
தென்றி தெற்கு ; காண்க : தென்றல் .
தென்றிசைக்கிழவன் தென்திசையின் தலைவனாகிய யமன் .
தென்றிசைக்கோன் தென்திசையின் தலைவனாகிய யமன் .
தென்றிசைப்பாலன் தென்திசையின் தலைவனாகிய யமன் .
தென்றிசைமுதல்வன் தென்திசையின் தலைவனாகிய யமன் .
தென்றிசையங்கி காண்க : தக்கணாக்கினி .
தென்றுதல் சிதறுதல் ; இனம்பிரிதல் .
தென்னகர் தெற்கிலுள்ள நகரமாகிய யமபுரம் .
தென்னங்கிடுகு தென்னங்கீற்றால் முடைந்ததட்டி ; விரியிலைத்தட்டி .
தென்னங்குரும்பை இளநீர் பிடியாத இளங்காய் .
தென்னம்பாளை தென்னம்பூ உள்ளடஙகிய உறை ; தென்னம்பூவின் உறை .
தென்னம்பிள்ளை தென்னங்கன்று ; தென்னைமரம் .
தென்னம்பொருப்பு தெற்கின்கண் உள்ள பொதியமலை .
தென்னமட்டை தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை ; தேங்காயின் கூந்தல் .
தென்னமரம் தெங்கு .
தென்னர் தெற்கு ; தென்னாட்டவர் ; பாண்டிய அரசர் ; பகைவர் .
தென்னல் காண்க : தென்றல் .
தென்னவன் தென்னாட்டு அரசனாகிய பாண்டியன் ; யமன் ; இராவணன் .
தென்னவெல்லம் தென்னஞ்சாற்றிலிருந்து செய்யும் இனிய கட்டி .
தென்னவெனல் இசைக்குறிப்பு .
தென்னன் காண்க : தென்னவன் .
தென்னாசாரியர் தென்கலை வைணவ ஆசாரியர் .
தென்னாதெனாவெனல் தளாச் சொற்கட்டு .
தென்னி வாழை .
தென்னிலை காண்க : தென்னோலை .
தென்னுதல் கிளம்புதல் ; நெம்புதல் .
தென்னுரை காண்க : தென்மொழி .
தென்னுலகு பிதிரர் உலகம் .
தென்னை தெங்கு .
தென்னோலை தென்னையோலை .
தெனாது தெற்கில் உள்ளது ; தெற்கு .