சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தொறுவு | அடிமைத்தனம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; செய்தொழில் ; தொழு ; இடைச்சாதி ; மிகுதி ; அடிமையாள் . |
தொன்மம் | பழங்கதை , புராணம் . |
தொன்மரம் | பழைமையான மரமான ஆலமரம் . |
தொன்மை | பழைமை ; செய்யுள் வனப்பில் ஒன்று ; உரை விரவிப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது ; தன்மை . |
தொன்று | பழைமை ; பழையது ; ஊழ் . |
தொன்றுதொட்டு | அனாதிகாலமாய் , பழங்காலம் தொடங்கி . |
தொன்னீர் | கடல் . |
தொன்னூல் | தொன்மம் , புராணம் ; ஒர் இலக்கணநூல் . |
தொன்னை | இலைக்கலம் ; ஈனன் . |
தொனி | ஒலி ; காண்க : தொனியர்த்தம் . |
தொனித்தல் | ஒலித்தல் ; சொல்லுதல் ; குறிப்புப் பொருள் தோன்றுதல் . |
தொனியர்த்தம் | ஆற்றலாலன்றிக் குறிப்பால் அறியப்படும் பொருள் . |
தொனிவைத்தல் | குறிப்புப் பொருள் அமைத்தல் ; பேரொலிசெய்தல் . |
தொனு | உக்காரம் . |
தொனுப்புதல் | அலப்புதல் . |
![]() |
![]() |