சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நவபுண்ணியம் | எதிர்கொள்ளல் , பணிதல் , உட்காருவித்தல் , கால்கழுவல் , அருச்சித்தல் , நறும்புகை காட்டல் , விளக்குக் காட்டல் , அறுசுவையுணவு படைத்தல் , புகழ்தல் என ஒன்பது வகைப்பட்ட போற்றுகைகள் . |
நவம் | புதுமை ; நட்பு ; பூமி ; ஒன்பது ; கார்காலம் ; காண்க : சாரணை . |
நவமணி | கோமேதகம் , நீலம் , பவளம் , புருடராகம் , மரகதம் , மாணிக்கம் , முத்து , வயிரம் , வைடூரியம் என்னும் ஒன்பது மணிவகைகள் . |
நவமி | ஒன்பதாந் திதி . |
நவமுகில் | ஆவர்த்தம் , சம்வர்த்தம் , புட்கலம் , துரோணம் , காளம் , நீலம் , வாருணம் , வாயுவம் , தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள் . |
நவமேகம் | ஆவர்த்தம் , சம்வர்த்தம் , புட்கலம் , துரோணம் , காளம் , நீலம் , வாருணம் , வாயுவம் , தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள் . |
நவரசம் | நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்னும் ஒன்பான் சுவைகள் . |
நவரத்தினம் | காண்க : நவமணி . |
நவரதம் | காண்க : நவரசம் . |
நவராத்திரி | புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் கொற்றவை , திருமகள் , கலைமகள் ஆகிய சத்திகளைப் பூசிக்கும் ஒன்பது நாள் . |
நவரோசு | ஒரு பண்வகை . |
நவலோகம் | பொன் , இரும்பு , செம்பு , ஈயம் , வெள்ளி , பித்தளை , தரா , துத்தநாகம் , வெண்கலம் ஆகிய ஒன்பது உலோகங்கள் . |
நவவருடம் | குரு , இரணிய இரமிய , இளாவிருத , கேதுமால , பத்திர , அரி , கிம்புருட , பாரத என்னும் பூமியின் ஒன்பது பெரும் பிரிவுகள் . |
நவாக்கரி | ஒன்பது எழுத்துகளுள்ள மந்திர வகை . |
நவாங்கிசம் | இராசியை ஒன்பதாகப் பகிர்தல் . |
நவாடா | தோணி . |
நவாது | வெண்மையான சருக்கரைவகை . |
நவாமிசம் | காண்க : நவாங்கிசம் . |
நவி | கோடரி . |
நவித்தல் | அவித்தல் . |
நவியம் | காண்க : நவி ; மழுப்படை ; புதுமை ; புதியது . |
நவிர் | ஆண்மயிர் ; முள்முருக்கமரம் ; துரும்பு ; மருதயாழ்த்திறம் ; வாள் ; புன்மை . |
நவிரம் | ஆண்மயிர் ; உச்சி ; தலை ; மயில் ; மலை ; நன்னன்மலை ; மருதயாழ்த்திறவகை ; புன்மை ; வாள் . |
நவிரல் | ஒரு மரவகை . |
நவிலுதல் | சொல்லுதல் ; கற்றல் ; பெரிதொலித்தல் ; பாடுதல் ; செய்தல் ; பழகுதல் ; தாங்குதல் ; விரும்புதல் ; குறித்தல் ; மிகுதல் . |
நவிழ்த்தல் | அவித்தல் . |
நவிற்றுதல் | சொல்லுதல் ; ஆராய்தல் ; அதிகாரத்தோடு உரைத்தல் . |
நவின்றோர்க்கினிமை | நூலின் பத்தழகினுள் ஒன்று . |
நவீனம் | புதிய முறையில் எழுதப்பட்ட கதை . |
நவுதல் | நெகிழ்தல் ; மட்கிப்போதல் . |
நவுரி | எக்காளவகை . |
நவை | குற்றம் ; இழிவு ; தண்டனை . |
நவைத்தல் | கொல்லுதல் . |
நழுக்கம் | ஆழமின்மை ; மழுங்குதல் . |
நழுக்குதல் | வருத்துதல் ; அரிசியை ஒன்றிரண்டாகக் குற்றுதல் ; மழுங்கச்செய்தல் ; தந்திரமாய் விட்டுவிலகுதல் ; கீறுதல் ; சிறிதுசிறிதாக மலம்போதல் . |
நழுங்குதல் | மழுங்குதல் ; கீறப்பெறுதல் ; வழுவுதல் . |
நழுநழுத்தல் | பிடிகொடாது பேசுதல் . |
நழுப்புதல் | மயங்கச்செய்தல் ; வேலை செய்ய மறுகுதல் . |
நழுவமுது | கூழ் . |
நழுவல் | பிடிகொடாது பேசுகை ; மறைந்து சொல்லுகை ; ஓர் அபசுரம் . |
நழுவுதல் | வழுவுதல் ; தந்திரமாய் நீங்குதல் ; பிடிகொடாது பேசுதல் . |
நள் | நடு ; இரவு ; உச்சிப்பொழுது ; திருவோணநாள் ; செறிவு . |
நள்ளலர் | பகைவர் . |
நள்ளார் | பகைவர் . |
நள்ளி | நண்டு ; கற்கடகராசி ; உறவு ; கடையெழு வள்ளலுள் ஒருவன் . |
நள்ளிடை | நடுஇடம் . |
நள்ளிருணாறி | இரவில் மணக்கும் இருவாட்சிப்பூ . |
நள்ளிருள் | செறிந்த இருள் . |
நள்ளு | மருங்கு ; காண்க : நள்ளுதல் . |
நள்ளுதல் | நட்புக்கொள்ளுதல் ; விரும்புதல் ; அடைதல் . |
நள்ளுநர் | நண்பர் . |
நள்ளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
நள | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு . |
நளத்தம் | சடாமாஞ்சில் பூண்டு . |
நளபாகம் | நளன்செய்த சமையல் போன்றதான உயர்ந்த சமையல் ; நன்றாய்ச் சமைத்த உணவு . |
நளம் | அகலம் , காண்க : தாமரை ; சிற்ப நூல்களுள் ஒன்று ; நளவசாதி . |
நளி | அகலம் ; பெருமை ; செறிவு ; குளிர்ச்சி ; கூட்டம் ; செருக்கு ; நிந்தை ; எள்ளல் ; தேள் ; காண்க : வெண்சாரணை . |
நளிதல் | செறிதல் ; பரத்தல் ; ஒத்தல் . |
நளிப்பு | காண்க : நளிவு . |
நளிய | ஓர் உவம உருபு . |
நளிர் | குளிர்ச்சி ; குளிர்காய்ச்சல் ; பகை ; செறிவு ; பெருமை ; நண்டு . |
நளிர்வித்தல் | நடுங்கச்செய்தல் . |
நளிவிடம் | தேள் . |
நளிவு | செறிவு . |
நளினக்காரன் | நயப்பேச்சுள்ளவன் ; விகடன் ; எள்ளிநகையாடுவோன் . |
நளினம் | தாமரை ; தண்ணீர் ; நயச்சொல் ; இங்கிதம் ; நிந்தை ; ஏளனம் . |
நளினாட்சமாலை | தாமரைமணிமாலை . |
நளினி | திருமகள் ; தாமரைப் பொய்கை ; ஒரு பண்வகை . |
நளினை | திருமகள் . |
நளுக்கல் | நெல்லின் இரண்டாம் குற்று . |
நளுக்குதல் | நடுக்குதல் . |
நளுங்கு | ஒரு கிளிஞ்சில்வகை ; காண்க : அழுங்கு . |
நளுத்தை | ஒரு பண்வகை . |
நளை | ஏலத்தோல் . |
நற்கதி | துறக்கம் முதலிய நற்பதவி . |
![]() |
![]() |
![]() |