நன்கனம் முதல் - நனைவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நன்கனம் நன்றாக .
நன்காடு சுடுகாடு ; இடுகாடு .
நன்கு அழகு ; மிகுதி ; நல்லது ; நலம் ; நிலைபேறு ; நன்னிமித்தம் ; மகிழ்ச்சி ; மிகவும் ; இதம் .
நன்குமதித்தல் சிறப்பித்தல் .
நன்கொடை பரிசில் ; உதவிப்பொருள் ; தருமம் .
நன்செய் நெல்லும் கரும்பும் விளையும் வயல் .
நன்சொல் இன்சொல் ; நற்போதனை .
நன்பகல் உச்சிக்காலம் .
நன்பகலந்தி உச்சிக்காலம் .
நன்பால் நல்லொழுக்கம் .
நன்பு நன்மை ; செவ்வையாய் .
நன்பொருள் மெய்ப்பொருள் ; மகன் .
நன்மக்கள் நல்ல பிள்ளைகள் ; சான்றோர் .
நன்மார்க்கம் நன்னெறி , நல்வழி .
நன்முகம் அழகிய முகம் ; இன்முகம் ; தாராளம் .
நன்முத்து சிப்பியிலிருந்து எடுக்கும் முத்து .
நன்மை நலம் ; பயன் ; உதவி ; சிறப்பு ; நன்னெறி ; நற்குணம் ; ஆக்கம் ; நற்செயல் ; நல்வினை ; வாழ்த்துமொழி ; மிகுதி ; மேம்பாடு ; புதுமை ; அழகு ; நல்லருள் ; காண்க : நன்மையாதல் .
நன்மைப்பகுதி நல்வினைப்பயன் .
நன்மைப்பேறு நல்வினைப்பயன் .
நன்மையாதல் பூப்படைதல் .
நன்மொழி இன்மொழி ; உறுதிமொழி ; தேவபாணி .
நன்மொழிபுணர்த்தல் நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை .
நன்றாக செம்மையாக ; ஒரு வாழ்த்துத் தொடர் .
நன்றாய் தாராளமாய் ; காண்க : நன்றாக .
நன்றாயிருத்தல் நல்ல நிலைமையிலிருத்தல் ; நல்வாழ்வோடிருத்தல் .
நன்றி நன்மை ; உதவி ; செய்ந்நன்றி ; அறம் .
நன்றிகெட்டவன் செய்ந்நன்றியை மறந்தவன் .
நன்றிகேடு செய்ந்நன்றி மறக்கை .
நன்றிகொல்லுதல் செய்ந்நன்றி மறக்கை .
நன்றிகோறல் செய்ந்நன்றி மறக்கை .
நன்றிசொல்லுதல் செய்ந்நன்றியறிவித்தல் .
நன்றிமறத்தல் செய்ந்நன்றி மறந்துவிடுதல் .
நன்றியற்றவன் செய்ந்நன்றி மறந்தவன் .
நன்றியறிதல் செய்ந்நன்றியுணர்தல் .
நன்றியில்செல்வம் பயன்படாச் செல்வம் .
நன்றியீனம் காண்க : நன்றிகேடு .
நன்று நல்லது ; சிறப்பு ; பெரிது ; அறம் ; இன்பம் ; நல்வினை ; உதவி ; வாழ்வின் நோக்கம் ; துறக்கம் ; ஏற்கைக்குறிப்பு .
நன்னடத்தை நல்லொழுக்கம் .
நன்னடை நல்லொழுக்கம் .
நன்னயம் இன்சொற் செயல்கள் ; நல்ல உதவிகள் ; உபசாரம் ; நன்மை ; நினைவு .
நன்னர் நன்மை .
நன்னாட்கொள்ளுதல் மங்கலமான நாளைக் குறிப்பிடுதல் .
நன்னாரி கொடிவகை .
நன்னாள் நல்ல நாள் ; விழாநாள் .
நன்னி சிறியது .
நன்னிக்கல் மருந்தரைக்கும் அம்மி .
நன்னிலம் நன்செய் .
நன்னிலமிதித்தல் மணமகனான அரசன் தன் மனைவியைவிட்டு முதன்முதல் அத்தாணி மண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு .
நன்னிலை நல்ல நிலைமை ; நல்லொழுக்க்ம் ; தவம் ; உலகம் .
நன்னிறம் வெண்ணிறம் .
நன்னீர் தூயநீர் ; பனிநீர் ; நல்ல இயற்கை .
நன்னுதல் பல்லாற் கடித்தல் ; நறுக்குதல் .
நன்னெறி நல்ல வழி ; ஒரு நீதிநூல் .
நனந்தலை அகன்ற இடம் ; மண்டலம் ; நடு ; உச்சந்தலை ; உச்சி ; திசை .
நனம் அகற்சி ; அகலம் .
நனவு மெய்ம்மை ; விழிப்பு ; நினைவு ; களன் ; போர்க்களம் ; தேற்றம் ; அகலம் .
நனா நனவுநிலையான விழிப்பு .
நனி மிகுதியாய் .
நனை பூவரும்பு ; தேன் ; கள் ; யானைமதம் .
நனைத்தல் ஈரமாக்குதல் .
நனைதல் ஈரமாதல் ; அரும்புதல் ; தோன்றுதல் .
நனைவு ஈரம் .