நித்தியவிநோதம் முதல் - நிபுடம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நித்தியவிநோதம் காண்க : நித்தவிநோதம் .
நித்தியவிபூதி திருமாலின் பரமபதம் .
நித்தியன் கடவுள் .
நித்தியாநித்தியம் காண்க : நித்தாநித்தம்
நித்தியானந்தம் நிலைத்த மகிழ்ச்சி ; வீடுபேறு .
நித்தியானந்தன் காண்க : நித்தியன் .
நித்திராதேவி தூக்கத்துக்குரிய மூதேவி .
நித்திராபங்கம் தூக்கத்தடை ; தூக்கம்பிடியாநோய் .
நித்திராவிருட்சம் மரவகை ; இருள் .
நித்திரித்தல் உறங்குதல் .
நித்திரை உறக்கம் .
நித்திரைதெளிதல் உறக்கத்தினின்று நீங்குதல் .
நித்திரைரோகம் தூக்கநோய் .
நித்தில் காண்க : நொச்சி ; மின்மினி .
நித்திலக்கோவை முத்துமாலை ; அகநானூற்றின் மூன்றாம் பகுதி .
நித்திலம் முத்து .
நித்திலவட்டம் முத்துமாலை .
நித்திலவடம் முத்துமாலை .
நித்திலவூர்தி முத்துப்பல்லக்கு .
நித்தை உமை ; தூக்கம் .
நிதகம் நீர்முள்ளிப் பூண்டு .
நிதம் தினமும் .
நிதம்பம் மலைப்பக்கம் ; அல்குல் ; பிருட்டம் ; நிருத்தக்கவகை ; தோள் ; கரை ; கற்பரிபாடாணம் .
நிதரிசனம் எடுத்துக்காட்டு ; திருட்டாந்தம் ; உவமை அணி .
நிதலம் கீழேழுலகத்துள் ஒன்று .
நிதனம் அழிவு ; சாவு ; வறுமை ; பிறந்த நாளுக்கு ஏழாநாள் .
நிதாககரன் சூரியன் .
நிதாகம் முதுவேனிற்காலம் ; வெப்பம் ; வியர்வை .
நிதாந்தன் மேன்மையுள்ளவன் .
நிதார்த்தம் உறுதி ; நேர்மை ; உண்மை ; சமன் செய்கை .
நிதானக்காரன் யோசனையுள்ளவன் .
நிதானம் ஆதிகாரணம் ; நோய்க்காரணம் ; இரத்தினம் ; பொன் ; படை ; தீர்மானம் ; உத்தேசம் ; நோக்கம் ; நேர்மை ; சமம் ; பிரமாணம் ; சாவதானம் ; முடிவு ; பௌத்தர் கூரும் பேதைமை , செய்கை , உணர்வு , அருவுரு , வாயில் , ஊறு , நுகர்வு , வேட்கை , பற்று , பவம் , தோற்றம் , வினைப்பயன் என்னும் பன்னிரண்டு நிதானங்கள் .
நிதானவான் நேராளி , அறிவாளி .
நிதானன் ஆதிகாரணனான கடவுள் .
நிதானி முன்யோசனையுள்ளவன் .
நிதானித்தல் உறுதிசெய்தல் , அளவு திட்டப் படுத்துதல் , அனுமானித்தல் .
நிதி பொன் , பொருட்குவை , ஐக்கிய நாணயச் சங்கம் .
நிதிக்கிழவன் குபேரன் .
நிதிக்கோன் குபேரன் .
நிதித்தியாசனம் இடைவிடாத் தியானம் .
நிதிநிட்சேபம் பூமியின் கீழுள்ள புதையல் .
நிதிப்பலகை பொற்பலகை .
நிதிப்பொதி பொற்கிழி .
நிதிபதி காண்க : நிதியின்கிழவன் .
நிதியம் பொருள்திரள் ; பொன் ; கடவுண்மணி வகை .
நிதியின்கிழவன் குபேரன் ; தலைச்சங்கப் புலவருள் ஒருவர் .
நிதியோன் குபேரன் .
நிதீசன் குபேரன் .
நிதுவனம் கலப்பு ; புணர்ச்சி ; மகிழ்ச்சி ; விளையாட்டு .
நிதேசம் கட்டளை ; சொல் ; அண்மை .
நிந்தகன் இழிவாகப் பேசுவோன் .
நிந்தம் தனியுரிமை .
நிந்தனை இகழ்ச்சி .
நிந்தாத்துதி இகழ்தல்போலப் புகழ்தல் .
நிந்தித்தல் இகழ்தல் ; பொருட்படுத்தாதிருத்தல் .
நிந்திதம் பரிகாசம் , ஏளனம் , தடை , இகழப்பட்டது .
நிந்திப்பு காண்க : நிந்தனை .
நிந்து வயிற்றில் இறந்த பிள்ளையைப் பெற்றவள் .
நிந்தை காண்க : நிந்தனை
நிந்தையுவமை உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமை அணி .
நிப்பரம் பாரமின்மை , அசைவின்மை .
நிப்பாட்டுதல் நிறுத்துதல் ; தாமதித்தல் ; நேராக நடுதல் .
நிபத்தி உண்மை ; தோன்றுமிடம் ; உதவி .
நிபத்தியை போர்க்களம் .
நிபதனம் விழுகை ; கீழ்இறக்குகை .
நிபந்தம் கோயிற்கட்டளைக்கு விடப்பட்ட சொத்து ; தாவரப்பொருள் ; தவணையாகச் செலுத்துவது ; அணை ; கடமை ; யாப்பு .
நிபந்தனம் தொகுப்பு .
நிபந்தனை கட்டுப்பாடு ; ஏற்பாடு ; தண்டனை ; பொதுவிதி .
நிபம் காரணம் ; உவமை ; வஞ்சனை ; கோள் .
நிபாதம் இறங்குகை ; செயலொழிகை ; இறப்பு ; காண்க : உடம்பொடுபுணர்த்தல் .
நிபாதனம் கொல்லுகை .
நிபானம் கிணறு ; நீர்த்தொட்டி ; பாற்குடம் .
நிபிடம் காண்க : நிபுடம் .
நிபீடனம் மல்வித்தை .
நிபுடம் நெருக்கம் .