சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நீர்ச்சுரப்பு | நீரால் உண்டாகும் உடல்வீக்கம் ; காண்க : நீரிழிவு . |
நீர்ச்சுழல் | நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை . |
நீர்ச்சுழி | நீரிலுண்டாகுஞ் சுழி ; மாட்டு சுழிவகை . |
நீர்ச்சுனை | மலைமீதுள்ள நீர்நிலை . |
நீர்ச்சூலை | அண்டவாயு ; அண்டவீக்கம் . |
நீர்ச்செறுப்பு | காண்க : நீர்கட்டல் . |
நீர்ச்சோபை | உடல்வீக்கம் . |
நீர்ச்சோறு | நீர் கலந்த பழஞ்சோறு . |
நீர்செய்காந்தமணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
நீர்த்தல் | நீராதல் ; ஈரமாதல் . |
நீர்த்தலை | மூளையில் இரத்தம் குறைவாகும் நோய் . |
நீர்த்தாக்கு | நீர் அதிகமாகத் தேங்கி நிற்குமிடம் . |
நீர்த்தாரை | நீரோட்டம் ; ஆண்குறி ; மூத்திரப்பையிலிருந்து சிறுநீரைக் கொணரும் குழாய் ; மழைத்தாரை . |
நீர்த்தாரையடைப்பு | நீர்க்கடுப்பு . |
நீர்த்தாழ்வு | காண்க : நீர்நிலை . |
நீர்த்தானம் | பிறந்த இலக்கினத்திலிருந்து நாலாமிடம் . |
நீர்த்தித்திப்பு | மூத்திரம் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை . |
நீர்த்துப்போதல் | நீரின் தன்மையடைதல் . |
நீர்த்துறை | நீர்நிலையின் இறங்குமிடம் . |
நீர்த்தூம்பு | மதகு . |
நீர்த்தெளியான் | தரைக்கு நீர்தெளித்துத் துப்புரவு செய்யும் வேலைக்காரன் . |
நீர்தலைப்படுதல் | சந்திசெய்தல் . |
நீர்நாடு | நீர்வளமுள்ள சோழநாடு . |
நீர்நாய் | நீரில் வாழும் விலங்குவகை . |
நீர்நாள் | பூராடநாள் . |
நீர்காற்று | நீர்பாய்ச்சிய நிலத்தில் உண்டாகும் நாற்று . |
நீர்நிலம் | நன்செய் . |
நீர்நிலை | ஏரி குளம் முதலிய நீருள்ளவிடம் ; சதுப்புநிலம் ; ஆழம் ; முத்துக்குற்றம் . |
நீர்நிறக்காக்கை | காண்க : நீர்க்காக்கை . |
நீர்ப்பஞ்சு | கடற்காளான் . |
நீர்ப்படலம் | கண்நோய்வகை . |
நீர்ப்படை | நடுகல்லிற்கு நீராட்டித் தூய்மை செய்தலைக் கூறும் புறத்துறை . |
நீர்ப்பண்டமாதல் | உருகுதல் . |
நீர்ப்பயிர் | நன்செய்ப்பயிர் . |
நீர்ப்பரிசை | ஆமை . |
நீர்ப்பறவை | நீரில் வாழும் பறவை . |
நீர்ப்பனை | புல்லாமணக்கஞ்செடி . |
நீர்ப்பாக்கு | ஊறற்பாக்கு . |
நீர்ப்பாசி | தண்ணீரில் மிதக்கும் பாசிவகை . |
நீர்ப்பாடு | நீரிழிவு ; நீர்க்குறைவு ; விடக்கிராணி ; குழந்தைநோய்வகை . |
நீர்ப்பாம்பு | தண்ணீரில் வாழும் பாம்புவகை . |
நீர்ப்பாய்ச்சல் | ஆறு , கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம் ; சீழ்வடிகை ; நீர்நிலைக்கு எதிராக வீட்டுவாயில் அமைந்திருக்கும் நிலை . |
நீர்ப்பிடிப்பு | ஏரியில் நீர் பற்றுமிடம் ; நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை ; நீரளவு ; காய்கனிகளில் உள்ள சாறு ; நீர்த்தட்டு . |
நீர்ப்பீனசம் | சளிநோய்வகை . |
நீர்ப்புள் | காண்க : நீர்ப்பறவை . |
நீர்ப்புற்று | வெள்விழியிற் சதைவளரும் நோய் வகை . |
நீர்ப்பூ | நால்வகைப் பூவில் நீரில் உண்டாவது . |
நீர்ப்பெருக்கு | வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; நோய்வகை . |
நீர்ப்போர் | நீரின்கண்ணே போலிப் போர்புரியும் விளையாட்டு . |
நீர்பிரிதல் | சினத்தல் ; சிறுநீர் இறங்குகை . |
நீர்பெய்கலன் | கமண்டலம் . |
நீர்பெய்தல் | சிறுநீர்விடுதல் . |
நீர்போகி | மதகு . |
நீர்மட்டம் | சரிமட்டம் பார்க்கும் கருவி ; கடல் மட்டம் . |
நீர்மறிப்பு | நீரைத் தடுத்துத் திருப்புகை ; காண்க : நீரடைப்பு . |
நீர்மனிதன் | மக்கள் முகம்போல் முகமுடைய ஒரு கடல்வாழ் உயிரிவகை ; உலகானுபவம் இல்லாதவன் . |
நீர்மாங்காய் | நீரில் ஊறவைத்த வடுமாங்காய் . |
நீர்மாடம் | பள்ளியோடம் . |
நீர்மாலை | பிணத்தைக் குளிப்பாட்ட நீர் கொண்டுவரும் சடங்கு . |
நீர்மீட்டான் | காண்க : தண்ணீர்விட்டான் . |
நீர்முகம் | நீர்த்துறை ; ஆறு கடலொடு கூடுமிடம் . |
நீர்முட்டுதல் | நீர்நிரம்புதல் ; மூத்திரம் பெய்தல் . |
நீர்முழுகி | நீரில் முழுகுவோன் ; நீரடைப்பை நீக்குவோன் . |
நீர்முள்ளி | நீரில் வளரும் முள்ளுள்ள பூண்டு . |
நீர்மேல்நெருப்பு | கல்லுருவிச்செடி . |
நீர்மை | நீரின் தன்மை ; தன்மை ; சிறந்த குணம் ; எளிமை ; அழகு ; ஒளி ; நிலைமை ; ஒப்புரவு . |
நீர்மோர் | மோருடன் அதிக நீர் சேர்த்துத் தரும் ஒரு குடிநீர்வகை . |
நீர்யானை | நீரில் வாழும் விலங்குவகை . |
நீர்வரத்து | நீர்ப்பெருக்கு . |
நீர்வரைப்பு | கடலால் சூழப்பட்ட நிலவுலகம் . |
நீர்வல்லி | வெற்றிலை ; தண்ணீர்விட்டான் கிழங்கு . |
நீர்வலயம் | காண்க : நீர்வரைப்பு . |
நீர்வலி | மகப்பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி . |
நீர்வளம் | நீர்ச்சிறப்பு ; நீர் நிறைவு ; நேர்வாளமரம் . |
நீர்வற்றம் | நீர் இறக்கம் . |
![]() |
![]() |
![]() |