பகந்தரம் முதல் - பகுத்துவம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பகந்தரம் மலவாயில் புரைவைத்த புண் .
பகபகெனல் தீ எரியும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; பசியால் வயிறு எரிதற்குறிப்பு .
பகம் ஐசுவரியம் , வீரியம் , புகழ் , திரு , ஞானம் , வைராக்கியமென்னும் அறுகுணம் ; பெண்குறி ; கொக்கு ; குயில் ; காண்க : கொக்குமந்தாரை ; காக்கட்டான்கொடி .
பகர் ஒளி ; காண்க : பங்கம்பாளை .
பகர்ச்சி சொல் .
பகர்த்துதல் பெயர்த்து எழுதுதல் .
பகர்தல் சொல்லுதல் ; விற்றல் ; கொடுத்தல் ; உணர்த்துதல் ; ஒளிர்தல் ; பெயர்தல் .
பகர்நர் விற்குநர் .
பகரம் ஒளி ; அழகு ; பதிலாக .
பகரி காண்க : ஆவிரை .
பகரிப்பு பகட்டு ; ஒளி .
பகல் பகுக்கை ; நடு ; நடுவுநிலை ; நுகத்தாணி ; முகூர்த்தம் ; அரையாமம் ; மத்தியானம் ; பகற்போது ; பிறரோடு கூடாமை ; கட்சி ; இளவெயில ; அறுபது நாழிகைகொண்ட நாள் ; ஊழிக்காலம் ; சூரியன் ; ஒளி ; வெளி ; கமுக்கட்டு .
பகல்செய்வான் பகற்பொழுது செய்யும் சூரியன் .
பகல்மாறு பகற்பொழுதில் .
பகல்மானம் பகற்பொழுது .
பகல்வத்தி வாணவகை .
பகல்வாயில் பகலின் வாயிலான கிழக்குத்திசை .
பகல்விளக்கு பகலில் மரியாதைக்காக இடும் விளக்கு .
பகல்வினையாளன் நாவிதன் .
பகல்வெய்யோன் நடுநிலை விரும்புவோன் .
பகல்வெள்ளிகாட்டுதல் காணமுடியாததொன்றனைக் காட்ட முயலுதல் .
பகல்வெளிச்சம் பகலொளி ; போலிநடிப்பு .
பகல்வேடக்காரன் பகற்காலத்தில் பல வேடம்பூண்டு பிழைப்போன் ; வெளிவேடக்காரன் .
பகல்வேடம் பகற்காலத்து உருவமாற்றிக் கொள்கை ; பகட்டு நடிப்பு .
பகலங்காடி காண்க : நாளங்காடி .
பகலடி சிங்கியடித்தல் .
பகலவன் சூரியன் ; பரணிநாள் .
பகலாணி நுகத்தாணி .
பகலிருக்கை நாளோலக்க மண்டபம் ; தனிமை இடம் .
பகலோன் சூரியன் .
பகவதி அறக்கடவுள் ; துர்க்கை ; பார்வதி ; தாம்பிரவருணி ஆறு .
பகவதிநாள் பூரநாள் .
பகவன் பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; சிவன் ; திருமால் ; தேவன் ; பிரமன் ; புத்தன் ; அருகன் ; சூரியன் ; குரு ; திருமால் அடியாரான முனிவர் .
பகவான் பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; பன்னிருசூரியருள் ஒருவன் ;சிவன் ;
பகவிருக்கம் காண்க : நிலக்கடம்பு .
பகவு துண்டு ; பங்கு ; வெடிப்பு .
பகழி அம்பு ; அம்புக்குதை .
பகழித்திரள் அம்புத்திரள் .
பகற்கள்ளன் பகலிற் கொள்ளையிடுவோன் ; பிறர்பொருளை வஞ்சித்துக் கவர்பவன் .
பகற்குருடு பகலில் குருடான கூகை .
பகற்குறி களவொழுக்கத்தில் பகற்காலத்தே தலைவனுந் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம் .
பகற்கொள்ளை பட்டப்பகலிற் கொள்ளையடிக்கை .
பகற்பண் பகற்காலத்தில் பாடப்படும் பண்கள் .
பகற்பாடு பகற்காலம் ; பிழைப்பிற்காகப் பகலில் செய்யும் வேலை .
பகற்போது பகற்காலம் ; பகற்காலத்தில் மலரும் மலர் .
பகற்றீவேட்டல் பகலில் பகைவரூர்களை எரித்தல் .
பகன்றை கிலுகிலுப்பைச்செடி ; சிவதைக்கொடி ; சீந்திற்கொடி ; நறையால் என்னும் பூடுவகை .
பகா தூதுவளை .
பகாநிலை பிரிவுபடாத தன்மை .
பகாப்பதம் பகுக்கவியலாத சொல் .
பகாப்பொருள் பிரிக்கப்படாத கடவுள் .
பகாரம் அழகு .
பகாலம் மண்டையோடு .
பகாலி கபாலமுடைய சிவன் .
பகாவின்பம் வீட்டின்பம் .
பகிடி காண்க : பகடி .
பகிர் பங்கு ; துண்டம் ; வெடிப்பு ; வெளிப்புறம் .
பகிர் (வி) பங்கிடு .
பகிர்த்தேசம் ஊர்ப்புறம் ; மலங்கழித்தற்குரிய இடம் .
பகிர்தல் பங்கிடுதல் ; பிளத்தல் ; பிரிதல் .
பகிர்விடுதல் பிளத்தல் .
பகிரங்கம் வெளிப்படை .
பகிரண்டம் வெளி அண்டம் .
பகினி உடன்பிறந்தாள் .
பகீரதப்பிரயத்தனம் பெருமுயற்சி ; கங்கையைக் கொண்டுவருவதற்குப் பகீரதன் செய்த முயற்சி .
பகீரதி பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை .
பகீரெனல் அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .
பகீலெனல் அச்சக்குறிப்பு ; திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு .
பகு அதிகமான .
பகுத்தல் பங்கிடுதல் ; வகைப்படுத்தல் ; தெளிவாய்க் கூறுதல் ; கொடுத்தல் ; வெட்டுதல் ; பிடுங்குதல் ; கோது நீக்குதல் .
பகுத்தறிதல் பிரித்தறிதல் ; நன்மைதீமை அறிதல் ; பொருள்களை வகைப்படுத்தி உணர்தல் .
பகுத்தறிவு நன்மைதீமை அறியும் அறிவு .
பகுத்துண்ணுதல் ஏழைகள் முதலியோருக்குப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல் .
பகுத்துப்பார்த்தல் ஒரு பொருளைச் செவ்வையாக ஆராய்ந்து பார்த்தல் .
பகுத்துவம் மிகுதி ; இசையில் மிக்கிவரும் சுரம் .