பச்சோலை முதல் - பசுபட்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பச்சோலை காயாத ஓலை .
பசகன் சமையற்காரன் .
பசண்டை பசுமை ; ஈரம் ; நன்னிலை .
பசத்தல் பசுமையாதல் ; காமத்தால் மேனிபசலைநிறமாதல் ; ஒளிமங்குதல் ; மங்கிப்போதல் ; பொன்னிறங்கொள்ளுதல் .
பசதன் சூரியன் ; இந்திரன் ; அக்கினி .
பசந்தம் நேரம் .
பசப்பு பசுமைநிறம் ; பாசாங்கு ; நிறவேறுபாடு ; ஈரப்பற்று ; சுகநிலை ; வளம் .
பசப்புதல் இன்முகங்காட்டி ஏய்த்தல் ; அலப்புதல் .
பசபசத்தல் தினவெடுத்தல் ; முறுமுறுத்தல் .
பசபசப்பு தினவு ; அலப்புகை ; கோள் .
பசபசெனல் தினவெடுத்தற்குறிப்பு ; அலப்புதற் குறிப்பு ; மழைதூறற்குறிப்பு ; மருண்டு பார்த்தற்குறிப்பு .
பசமந்திரம் காண்க : மரமஞ்சள் .
பசல் சிறுவன் ; காண்க : பசலி .
பசலி கி . பி . 591 முதல் தொடங்கப்பட்டதும் அக்பர் பேரரசரால் நடைமுறைப்படுத்தப் பட்டதுமான ஒர் ஆண்டு .
பசலை அழகுதேமல் ; பொன்னிறம் ; காமநிற வேறுபாடு ; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம் ; வருத்தம் ; மனவருத்தம் ; இளமை ; கவலையின்மை ; கீரைவகை .
பசளி ஒரு கீரைவகை ; கோழிக்கீரை ; பப்பாளி ; உரம் ; குழந்தை .
பசளை ஒரு கீரைவகை ; கோழிக்கீரை ; பப்பாளி ; உரம் ;குழந்தை .
பசளைக்கதை வீண்கதை .
பசளைக்கலம் பச்சைப்பானை .
பசளைமண் உரமுள்ள மண் .
பசற்றனம் இளமைக்குணம் .
பசறு பச்சிலைச் சாறு .
பசனம் சமையல் ; வழிபாடு .
பசனை கடவுளைத் துதித்துப் பாடுதல் .
பசாசம் பேய் ; இரும்பு ; ஓர் இணையா வினைக்கைவகை .
பசாசரதம் பேய்த்தேர் .
பசாசு பேய் .
பசாடு மாசு .
பசாரி விபசாரி .
பசானம் ஒரு நெல்வகை ; பசானநெல்லின் அறுவடைக்காலம் .
பசி உணவுவேட்கை ; வறுமை ; தீ .
பசித்தல் பசியெடுத்தல் .
பசித்தீபனம் உணவுவேட்கை .
பசிதகனி சோறு .
பசிதம் சாம்பல் ; திருநீறு .
பசிப்பிணி பசியாகிய நோய் .
பசிபட்டினி உண்ணாது வருந்துகை .
பசியம் கயிறு .
பசியாட்டி பசித்திருப்பவள் .
பசியாற்றுதல் உண்டு பசியைத் தணித்தல் ; உண்பித்தல் .
பசியாறுதல் உண்டு பசியைத் தணித்தல் ; உண்பித்தல் .
பசியான் பசுமைநிறத்தவன் .
பசியெடுத்தல் பசியுண்டாதல் .
பசியேப்பம் பசிமிகுதியால் உண்டாகும் தேக்கெறிவு .
பசிரி பசளைக்கொடி .
பசு ஆ ; காளை ; இடபராசி ; விலங்கு ; சிற்றுயிர் , சீவான்மா ; சாது ; வேள்விக்குரிய ஆடு ; பல்லாங்குழி ஆட்டத்தில் குழியில் விழுந்து ஒருங்குசேரும் ஆறு விதை .
பசுக்கல் பலகைகளை இணைக்கை .
பசுக்கற்கதவு பலகைகளால் இணைக்கப்பட்ட கதவு .
பசுக்கற்சன்னல் மரத்தால் இழைத்துச் செய்த கதவுகளையுடைய சன்னல் .
பசுக்காவலர் இடையர் ; காண்க : கோவைசியர் .
பசுக்கோட்டம் காண்க : பசுமந்தை .
பசுகரணம் உயிர்களின் செயல் .
பசுகாதம் மிருகபலி .
பசுங்கதிர் பசுங்கதிரையுடைய சந்திரன் .
பசுங்கதிர்க்கடவுள் பசுங்கதிரையுடைய சந்திரன் .
பசுங்கர்ப்பூரம் காண்க : பச்சைக்கருப்பூரம் .
பசுங்கருப்பூரம் காண்க : பச்சைக்கருப்பூரம் .
பசுங்கல் சந்தனம் அரைக்குங் கல் .
பசுங்காய் முற்றாத தானியம் ; இளங்காய் ; பாக்குவகை .
பசுங்கிளி பச்சைக்கிளி .
பசுங்குடி மேன்மையான குடி ; உழவன் .
பசுங்குழவி இளங்குழந்தை .
பசுங்கூட்டு மணக்கலவை .
பசுங்கொடி அறுகம்புல் .
பசுஞானம் ஆன்மசொரூப ஞானம் ; சிற்றறிவு ; ஆன்மநிலை .
பசுத்துவம் சீவத்தன்மை .
பசுத்தொழு மாட்டுக்கொட்டில் .
பசுதருமம் காண்க : பசுபுண்ணியம் ; புணர்ச்சி ; இம்மை இன்பத்துக்காகச் செய்யும் செயல் .
பசுதை விலங்குத்தனம் .
பசுந்தமிழ் செந்தமிழ் .
பசுந்தரை புல்தரை .
பசுநரம்பு பெரும்பாலும் கெட்ட இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் , சிரை .
பசுநாகு கடாரிக்கன்று .
பசுநிலை பசுக்கொட்டில் .
பசுபட்டி பசுமந்தை .