அங்கிடுதொடுப்பி முதல் - அச்சுதன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அச்சியர் ஆரியாங்கனைகள் ; சமணசமயத் தவப்பெண்டிர் .
அச்சிரம் முன்பனிக்காலம் .
அச்சு அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம் .
அச்சுக்கட்டி ஆடையில் அச்சு வேலை செய்வோன் .
அச்சுக்கட்டு நெசவுக் கருவிவகை ; அச்சடித்தற்காகத் துணியை மடித்தல் ; வரம்பு கட்டிய வயல் .
அச்சுக்கட்டை அச்சுமரம் .
அச்சுக் கம்பி துப்பாக்கி மருந்து இடிக்கும் இருப்புக் கருவி ; துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு .
அச்சுக்கூடம் காண்க : அச்சகம் .
அச்சுத்தாலி காசுமாலை ; வார்ப்புத் தாலி .
அச்சுத்திரட்டுதல் வண்டியச்சுச் செப்பஞ் செய்தல் .
அச்சுதம் கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .
அச்சுதன் அழிவில்லாதவன் , கடவுள் ; திருமால் ; அருகன் ; சிவன் ; முருகன் .
அங்கிநாள் கார்த்திகை நாள் ; அத்த நாள் .
அங்கிரி கால் ; மரவேர் ; மரம் .
அங்கீகரணம் காண்க : அங்கி(கீ)காரம் .
அங்கு அவ்விடம் .
அங்குசதாரி விநாயகன் .
அங்குசபாசதரன் விநாயகன் .
அங்குசபாசமேந்தி விநாயகன் .
அங்குசபாணி விநாயகன் ; காளி .
அங்குசம் யானையை அடக்கும் கருவியாகிய தோட்டி ; வாழை .
அங்குசரோசனம் கூகைக்கிழங்கின் மாவு .
அங்குசோலி அறுகம்புல் .
அங்குட்டம் பெருவிரல் ; பெருவிரலளவு ; குறளுரு .
அங்குடம் தாழக்கோல் , திறவுகோல் .
அங்குத்தை அவ்விடம் ; தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் .
அங்குமிங்கும் பாடி இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன் , நம்ப இயலாதவன் .
அங்குரகம் கூடு ; பறவைகள் தங்குமிடம் .
அங்குரம் முளை ; தளிர் ; இரத்தம் ; மயிர் ; குப்பைமேனி ; நீர் ; நங்கூரம் .
அங்குரார்ப்பணம் பாலிகை தெளிக்கை , முளையிடுதல் ; தொடங்குகை .
அங்குரி விரல் .
அங்குரித்தல் முளைத்தல் ; வெளிப்படுதல் .
அங்குலம் கைவிரல் ; விரலகலம் , ஒரு விரற்கணு அளவு ; ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு , 2.5 சென்டிமீட்டர் .
அங்குலி விரல் ; யானைத்துதிக்கை நுனி ; மோதிரம் ; யானைக்குக் கட்டும் மணி ; ஐவிரலிச்செடி .
அங்குலிகம் விரலணி , மோதிரம் .
அங்குலியம் விரலணி , மோதிரம் .
அங்குஸ்தான் தையற்காரர் விரலிலே அணியும் கூடு , விரலுறை .
அங்கூடம் அம்பு ; கீரி ; அழகிய கூடம் .
அங்கூரம் காண்க : அங்குரம் .
அங்கே அங்கு .
அங்கை அகங்கை , உள்ளங்கை .
அங்கையில்வட்டு அடைதற்கு எளியது .
அங்கோலம் அழிஞ்சில்மரம் .
அங்ஙன் அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
அங்ஙனம் அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
அச்சகம் நூல்களை அச்சிடும் இடம் . அச்சுக்கூடம் .
அச்சகாரம் அச்சாரம் , ஆயத்தப் பணம் , முன்பணம் .
அச்சடி ஓலை முத்திரையிட்ட ஓலையாவணம் .
அச்சடித்தல் காகிதத்திலோ , துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல் .
அச்சடியன் சாயப்புடைவை .
அச்சடையாளம் உடலுறுப்பு ஒப்புமை ; முத்திரையச்சு .
அச்சணம் அக்கணம் , அந்த நேரம் .
அச்சத்தி கத்தரிச்செடி .
அச்சத்திரி கத்தரிச்செடி .
அச்சந்தெளித்தல் அறுகும் அரிசியும் இடல் .
அச்சபரம் நாணல் .
அச்சபல்லம் கரடி .
அச்சம் பயம் ; மகளிர் நாற்குணத்துள் ஒன்று ; தகடு ; இலேசு ; அகத்திமரம் ; சரிசமானம் ; பளிங்கு .
அச்சமம் ஒருவகைப் புல் முயிற்றுப்புல் .
அச்சமாடல் அச்சமுண்டாகப பேசுதல் .
அச்சயன் அழிவில்லாதவன் , கடவுள் .
அச்சரம் நாக்கில் தோன்றும் ஒரு நோய் ; எழுத்து .
அச்சன் தந்தை ; கடவுள் .
அச்சனம் நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி .
அச்சாணி கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .
அச்சாப்பொங்கா அச்சோ பெண்காள் என்பதன் மரூஉ ; மகளிர் ஆட்டவகை .
அச்சாரம் காண்க : அச்சகாரம் .
அச்சாறு ஊறுகாய் .
அச்சானம் அறியாமை .
அச்சானியம் தீக்குறி முதலியவற்றால் நேரும் மனக்கலக்கம் ; அமங்கல நினைவு .
அச்சி நாயர்குலப் பெண் ; தாசி ; ஒரு பெண்பால் விகுதி .
அச்சிநறுவிலி நறுவிலிமரம் .
அச்சியந்திரசாலை காண்க : அச்சகம் .
அங்கிடுதொடுப்பி கோள் சொல்பவன் .
அங்கிதம் உடல்மேலுள்ள தழும்பு ; அடையாளம் ; கணக்கிடப்பட்டது ; பாட்டுடைத்தலைவன் .