பாண்டுநாகம் முதல் - பாதகாணிக்கை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாண்டுநாகம் வெள்ளையானையாகிய ஐராவதம் .
பாண்டுரம் காண்க : பாண்டுகம் .
பாண்டுராகம் வெண்மை .
பாண்டுரை பாதிரிமரம் .
பாண்டுரோகம் நோய்வகை .
பாண்டை தீநாற்றம் .
பாண்டைநாறி கெட்ட நாற்றம் வீசுகிற பெண் ; முன்கோபி .
பாண்மகள் பாடுபவள் , பாடினி .
பாண்மகன் பாணன் .
பாண்மை பாணன் தன்மை ; தாழ்ச்சி .
பாணக்கலப்பை இராமபாணமென வழங்கப்படும் பூச்சியாகிய கலப்பை .
பாணச்சி காண்க : பாணிச்சி .
பாணத்தி காண்க : பாணிச்சி .
பாணந்தொடுத்தல் அம்பெய்தல் ; கெடுக்க வழி தேடுதல் ; வசைமாரி பொழிதல் .
பாணம் அம்பு ; ஆகாசவாணம் ; காண்க : திப்பிலி ; செடிவகை ; ஓரங்க நாடகவகை ; பட்டாடை ; காண்க : இராமபாணம் .
பாணன் பாடுங்குலத்தான் ; தையற்காரன் ; வீணன் ; காண்க : காட்டாமணக்கு ; சிவபக்தனான ஓரசுரன் .
பாணா வயிறுபருத்த பானை ; பருத்த பீசம் ; மண்சட்டி ; சிலம்பக்கழி .
பாணாத்தடி சிலம்பக்கழி .
பாணாலு சூதிலோர் தாயம் .
பாணாற்றுப்படை வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுவரும் பாணன் ஒருவன் , மற்றொரு பாணனை அவ் வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச்செலுத்துவதைக் கூறும் புறத்துறை .
பாணான் தையற்காரன் .
பாணி காலம் ; தாமதம் ; நீண்டகாலம் ; இசைப்பாட்டு ; இசை ; ஒலி ;இசையுறுப்பாகிய தாளம் ; அழகு ; அன்பு ; முல்லை யாழ்த்திறத்துள் ஒன்று ; பறைப்பொது ;கூத்து ; கை ; பக்கம் ; சொல் ; சருக்கரைக் குழம்பு ; கள் ; பழச்சாறு ; இலைச்சாறு ; மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை ; நீர் ; ஊர் ; நாடு ; ஊர்சூழ் சோலை ; காடு ; பூம்பந்தர் ; பலபண்டம் ; கடைத்தெரு ; நடை ; சரகாண்டபாடாணம் ; பாடினி .
பாணிக்கிரகணம் கையைப் பற்றுதல் ; திருமணம் .
பாணிகை அகப்பை .
பாணிச்சாய் கள்போன்ற முத்துநிறம் .
பாணிச்சி பாணர்சாதிப் பெண் .
பாணிச்சீர் கைத்தாளம் .
பாணிசம் கைந்நகம் .
பாணிசரியை கயிறு .
பாணித்தல் தாமதஞ்செய்தல் ; பின்வாங்குதல் ; பாவித்தல் ; மதிப்பிடுதல் ; நிறைவேற்றுதல் ; கொடுத்தல் .
பாணிதம் கருப்பஞ்சாறு ; கற்கண்டு .
பாணிதூங்குதல் தாளத்திற்கேற்றவாறு ஆடுதல் .
பாணிநடை தாளத்திற்கு ஏற்ற குதிரைநடை .
பாணிப்பதம் பாகு இருக்கவேண்டிய நிலை ; தைலங்காய்ச்சி இறக்கும் பக்குவம் .
பாணிப்பிடிப்பு பூ முதலியவற்றின் சாறுள்ள நிலை .
பாணிப்பு பாவிப்பு ; சூழ்ச்சி ; தாமதம் ; மதிப்பு .
பாணிப்பூ உலர்ந்து எண்ணெய்க்கசிவு கண்ட இலுப்பைப் பூ .
பாணிபாத்திரம் கமண்டலம் .
பாணிமுகம் உடலைவிட்டு உயிர் நீங்கும் முறைகளுள் ஒன்று .
பாணியாதல் வெல்லம் முதலியன கரைதல் .
பாணியொத்துதல் தாளம்போடுதல் .
பாணு பாட்டு .
பாத்தம் செய்தி ; தரம் ; மருதமரம் .
பாத்தருதல் பரவுதல் ; உருகியோடுதல் .
பாத்தல் பங்கிடுதல் .
பாத்தி பகுதி ; சிறுசெய் ; பங்கு ; வீடு .
பாத்திகட்டுதல் கீரைவிதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் .
பாத்திகோலுதல் கீரைவிதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் .
பாத்திபம் பூமி ; புறாமுட்டிப்பூண்டு .
பாத்தியதை உரிமை ; உறவு .
பாத்தியப்படுதல் உரிமைப்படுதல் .
பாத்தியம் உரிமை ; பிணை ; பங்கு ; தொடர்பு ; காலலம்பக் கொடுக்கும் நீர் .
பாத்தியன் சுற்றத்தான் ; உரிமையாளன் ; பிணையாளி ; கடவுளின் அடியான் .
பாத்திரப்பிரவேசம் நடிப்போர் நாடகமேடையில் வருகை .
பாத்திரபண்டம் பலவகைப் பாண்டங்கள் .
பாத்திரபதம் புரட்டாசி மாதம் ; பூரட்டாதி ; உத்தரட்டாதி இரேவதி நாள்கள் .
பாத்திரம் கொள்கலம் ; பாண்டம் ; இரப்போர் கலம் ; உண்கலம் ; தகுதியுள்ளவன் ; நாடகத்தில் வேடம் பூண்டு நடிப்போர் ; இலை ; உடல் ; எட்டுச்சேர் கொண்டது ; கட்டளை ; மந்திரி ; வாய்க்கால் ; வரகுபாத்தி ; புரட்டாசிமாதம் .
பாத்திரவாளி தக்கோன் .
பாத்திரவான் தக்கோன் .
பாத்திரன் தக்கோன் .
பாத்திரை இரப்போர் கலம் .
பாத்தில் வீடு .
பாத்திலார் விலைமகளிர் .
பாத்து பகுக்கை ; பங்கு ; பாதி ; இணை ; நீக்கம் ; சோறு ; கஞ்சி ; ஐம்புலவின்பம் ; விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரித் தள்ளுபடி ; நான்கு என்னும் பொருள்கொண்ட குழூஉக்குறி .
பாத்துதல் பகுத்தல் .
பாத்துப்புலு நாற்பது என்னும் பொருள் கொண்ட குழுஉக்குறி .
பாத்தூண் பகுத்துக் கொடுத்து உண்ணும் உணவு ; பிச்சை .
பாதக்கமலம் காண்க : பாதகமலம் .
பாதக்காப்பு காண்க : பாதகாப்பு .
பாதக்குறடு குமிழ்கொண்ட மிதியடி .
பாதகடகம் பாடகம் என்னும் மகளிர் காலணி .
பாதகம் பெரும்பாவம் ; தடை .
பாதகமலம் திருவடித்தாமரை .
பாதகன் பெரும்பாவஞ் செய்தோன் .
பாதகாணிக்கை குருதட்சிணை .