சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பாதேயம் | கட்டுச்சோறு . |
பாதை | வழி ; ஒற்றையடி வழி ; முறை ; மிதவை ; துன்பம் . |
பாதோதகம் | பெரியோரின் திருவடிகளைக் கழுவிய நீர் . |
பாந்தம் | உறவுமுறை ; சாதிக்கட்டு ; இணக்கம் ; ஒழுங்கு ; பகரவிறுதி . |
பாந்தல் | பதுங்கல் ; துன்பம் . |
பாந்தவம் | உறவுமுறை . |
பாந்தவியம் | உறவுமுறை . |
பாந்தள் | பாம்பு ; மலைப்பாம்பு . |
பாந்தன் | வழிச்செல்வோன் . |
பாந்து | பொந்து ; சுவர்க்கற்களின் இடையிலுள்ள சந்து ; மேற்கட்டடத்தில் கட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம் ; எருதுகள் ; வளைவுக்கும் சுவருக்குமிடையிலுள்ள பாகம் . |
பாந்துக்கிணறு | பக்கங்களில் பொந்துவிழுந்த கிணறு . |
பாந்துதல் | பதுங்குதல் ; பிறாண்டுதல் . |
பாந்தை | பொந்து . |
பாப்படுத்தல் | பரப்பி விரித்தல் . |
பாப்பம் | சோறு . |
பாப்பா | பாவை ; சிறுகுழந்தை ; கண்ணின் கருவிழி . |
பாப்பாச்சி | பாவை ; ஒரு மிதியடிவகை . |
பாப்பாத்தி | காண்க : பார்ப்பனி ; வண்ணத்துப் பூச்சி ; கழுகுவகை . |
பாப்பான் | காண்க : பார்ப்பான் . |
பாப்பு | காண்க : பார்ப்பான் ; ரோமன் கத்தோலிக்க மதகுரு . |
பாப்புப்பகை | பாம்பின் பகையான கருடன் . |
பாப்புரி | காண்க : பாம்புரி . |
பாபக்கிரகம் | இராகு , சனி , செவ்வாய் என்னும் தீக்கோள்கள் . |
பாபசங்கீர்த்தனம் | பாவம் நீங்க அவற்றைக் குருவிடம் தெரிவித்தல் . |
பாபத்தி | வேட்டை . |
பாபதத்தம் | தீவினைகளிற் செலவழிக்கப்படும் பொருள் ; கள்வர் முதலியோரால் கவரப்படும் பொருள் . |
பாபம் | காண்க : பாவம் . |
பாபமூர்த்தி | வேடன் . |
பாபி | காண்க : பாவி . |
பாபு | மேன்மைப்பொருளில் வரும் ஒரு பட்டப்பெயர் ; தலைவன் ; கதவு ; பகுதி ; கணக்கின் தலைப்பு . |
பாம்பணை | ஆதிசேடனாகிய படுக்கை . |
பாம்பாட்டி | பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன் ; பாம்பாட்டிச்சித்தர் ; வரிக்கூத்துவகை . |
பாம்பாடி | காளிங்கன் என்னும் பாம்பின்மீது ஆடிய கண்ணன் . |
பாம்பு | ஊரும் உயிர்வகை ; இராகு அல்லது கேது ; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை ; ஆயிலியநாள் ; நீர்க்கரை ; தாளக்கருவிவகை . |
பாம்புக்கண்ணி | காண்க : சங்கங்குப்பி . |
பாம்புக்குத்தச்சன் | பாம்புக்கு மனைகட்டும் தச்சனாகிய கறையான் . |
பாம்புத்தச்சன் | பாம்புக்கு மனைகட்டும் தச்சனாகிய கறையான் |
பாம்புகண்டசித்தன் | கறையானை உண்ணப்புற்றில் வாய்வைத்து உறிஞ்சும்போது பாம்பைக் காணும் சித்தனாகிய கரடி . |
பாம்புச்செவி | கூர்மையான செவியுணர்வு . |
பாம்புண்பறவை | பாம்பை உண்ணும் கருடன் . |
பாம்புணிக்கருங்கல் | ஒரு கல்வகை . |
பாம்புத்திசை | மேற்கு . |
பாம்புப்புற்று | பாம்பின் வளை . |
பாம்புரி | பாம்புத்தோல் ; அகழி ; மதிலுறுப்பு ; அகழில் இறங்க உதவும் படிக்கட்டு . |
பாம்புவயிறு | நீண்டு ஒட்டிய வயிறு . |
பாம்புவிரல் | நடுவிரல் . |
பாமகள் | கலைமகள் . |
பாமடந்தை | கலைமகள் . |
பாமம் | பரப்பு ; சிரங்கு ; புண் ; கோபம் ; ஒளி . |
பாமரம் | மூடத்தனம் ; மூடன் . |
பாமரன் | அறிவிலான் ; இழிந்தோன் ; அரசற்குத் துணைவன் . |
பாமன் | சூரியன் ; மைத்துனன் . |
பாமாரி | கந்தகம் . |
பாமாலை | பாக்களால் தொடுக்கப்பெற்ற மாலை . |
பாமினி | பெண் . |
பாமை | சிரங்கு ; சத்தியபாமை . |
பாய் | கோரை முதலியவற்றால் முடைந்த விரிப்புவகை ; கப்பற்பாய் ; வேலைக்காரன் ; பரவுதல் ; பரப்பு . |
பாய் | (வி) தாவு ; தாண்டு ; குதி ; பரவு . |
பாய்க்கிடை | நோயால் படுத்தபடுக்கையாய் இருக்கும் நிலை . |
பாய்கலைப்பாவை | பாயும் கலைமானை ஊர்தியாக உடைய கொற்றவை . |
பாய்ச்சல் | தாவுகை ; குதிப்பு ; எழுச்சி ; நீரோட்டம் ; சொரிகை ; பெருகுகை ; முட்டுகை ; பாசனம் ; கீழ்ப்படியாமை ; குத்துகை ; செருகுகை ; வெடுவெடுப்பு . |
பாய்ச்சல்காட்டுதல் | எதிர்த்துப் பாயச்செய்தல் ; ஏய்த்தல் . |
பாய்ச்சல்மாடு | பாயுங் காளை ; காளைகளை நீண்ட கயிற்றால் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்டவகை . |
பாய்ச்சல்விடுதல் | தாவிச்செல்லுதல் ; வேகமாய் வெருட்டுதல் . |
பாய்ச்சி | கவறு ; மீன்வலை . |
பாய்ச்சிகை | கவறு . |
பாய்ச்சு | பாய்கை ; உருட்டுகை ; கவறு ; குத்துகை ; வரிச்சல் . |
பாய்ச்சுத்தேள் | பொய்த்தேளிட்டுப் பிறரைக் கலங்கப்பண்ணுதல்போல உண்டாக்கும் திகில் . |
பாய்ச்சுதல் | நீரை வெளிச்செலுத்துதல் ; தள்ளுதல் ; குத்துதல் ; உட்செலுத்துதல் . |
பாய்ச்சை | தத்துப்பூச்சி ; சிள்வண்டு . |
பாய்த்து | பாய்ச்சல் ; எழுச்சி . |
பாய்த்துதல் | காண்க : பாய்ச்சுதல் . |
பாய்தல் | தாவுதல் ; நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல் ; மேல்நின்று குதித்தல் ; நீருள் மூழ்குதல் ; எதிர்செல்லுதல் ; பரவுதல் ; வரைந்துபடிதல் ; விரைந்தோடுதல் ; தாக்குதல் ; விரைவுபடுதல் ; அகங்கரித்தல் ; மடிப்பு விரிதல் ; கூத்தாடுதல் ; ஓடிப்போதல் ; தாக்கிப்பேசுதல் ; குத்துதல் ; வெட்டுதல் ; முட்டுதல் . |
பாய்மரக்கூம்பு | பாய்மரத்தின் உச்சி . |
பாய்மரம் | கப்பல் முதலியவற்றின் பாய்தூக்கும் நடுமரம் . |
![]() |
![]() |
![]() |