ஆகாமியம் முதல் - ஆச்சன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆகிருதி உருவம் ; உடல் ; அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் .
ஆகிருநந்தனம் காண்க : ஆகிரந்தம் .
ஆகிருநனந்தம் காண்க : ஆகிரந்தம் .
ஆகிலியர் ஆகாதொழிக .
ஆகிவருதல் நன்றாகக் கூடிவருதல் .
ஆகின்று ஆகாநின்றது , அமைந்தது ; ஆயிற்று .
ஆகு கவரி ; கொப்பூழ் ; எலி ; பெருச்சாளி ; பன்றி ; கள்ளன் ; சாமரம் .
ஆகுகன் பெருச்சாளி ஊர்தியனாகிய விநாயகன் .
ஆகுஞ்சனம் சுருக்குகை .
ஆகுதல் ஆதல் .
ஆகுதி அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
ஆவுதி அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
ஆகுபுக்கு பூனை .
ஆகுபெயர் ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் .
ஆகுயர்த்தோன் பெருச்சாளி உருப்பொறித்த கொடியுடையவனான கணபதி .
ஆகுரதன் காண்க : ஆகுகன் .
ஆகுலச்சொல் ஆரவாரப்பேச்சு .
ஆகுலம் மனக்கலக்கம் ; ஆரவாரம் .
ஆகுலி காண்க : சிற்றரத்தை ; ஆவிரைவகை .
ஆகுலித்தல் துன்புறுதல் .
ஆகுவாகனன் காண்க : ஆகுகன் .
ஆகுளி ஒருவகைச் சிறுபறை .
ஆகுனி வாதநோய்வகை .
ஆகூழ் நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை .
ஆகேடகம் வேட்டை .
ஆகேடம் வேட்டை .
ஆகேருகம் தண்ணீர்விட்டான் கொடி .
ஆகேவகமுள்ளி காட்டுமுள்ளி .
ஆகேறு காண்க : சரக்கொன்றை .
ஆகை ஆதல் ; உயருதல் ; நிகழுகை .
ஆகைச்சுட்டி ஆகையால் .
ஆகையர் முடிவு ; கூட்டிவந்த மொத்தத் தொகை .
ஆகையால் ஆதலால் .
ஆகோசனம் கோரோசனை .
ஆகோள் போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை .
ஆங்க அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை ; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று .
ஆங்கண் அவ்விடத்து .
ஆங்கனம் அவ்விதம் .
ஆங்காங்கு அங்கங்கு .
ஆங்காரம் பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் .
ஆங்காரி அகங்காரம் உள்ளவன்(ள்) .
ஆங்காரித்தல் காண்க : அகங்கரித்தல் .
ஆங்காலம் நற்காலம் .
ஆங்கிலம் ஆங்கிலமொழி .
ஆங்கீரச அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு .
ஆங்கு அவ்விடம் ; அக்காலத்தில் ; அப்படி ; ஓர் உவம உருபு ; ஏழன் உருபு ; ஓர் அசைநிலை .
ஆங்குதல் போதியதாதல் .
ஆங்ஙனம் காண்க : அங்ஙனம் .
ஆச்சமரம் சங்கஞ்செடி .
ஆச்சமாதிகம் மலைவெற்றிலை .
ஆச்சரியம் வியப்பு .
ஆச்சல் பாய்ச்சல் ; வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் .
ஆச்சன் காண்க : அச்சன் .
ஆகாமியம் அதிக்கிரமம் ; மூவகைக் கன்மங்களுள் ஒன்று ; இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் .
ஆகாயக்கக்கரி கக்கரிவகை .
ஆகாயகங்கை மந்தாகினி .
ஆகாயகணம் செய்யுள் கணத்துள் ஒன்று ; கருவிளங்காய்ச் சீராய் அமைவது .
ஆகாயகமனம் அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை .
ஆகாயச்சக்கரம் சித்திரகவிவகை .
ஆகாயச்சொல் எதிரில் இல்லாதான் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பேச்சு .
ஆகாயசாரிகள் வானத்தில் திரிவோர் , சாரணர் .
ஆகாயசூலை குதிரை நோய்வகை .
ஆகாயத்தாமரை பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி .
ஆகாயப்பிரவேசம் காண்க : ஆகாயகமனம் .
ஆகாயப்பூ காண்க : ஆகாயத்தாமரை .
ஆகாயப்பூரிதம் பேய்முசுட்டை .
ஆகாயமாஞ்சி காண்க : சிறுசடாமாஞ்சில் .
ஆகாயவாசிகள் பதினெண் கணத்துள் ஒரு சாரார் .
ஆகாரசமிதை வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி .
ஆகாரசன்னை நால்வகை முரசுகளுள் ஒன்று .
ஆகாரம் உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு .
ஆகாரி உயிர் ; பூனை .
ஆகிய பண்புருபு .
ஆகிரந்தம் புன்கமரம் .
ஆகிரிநாட்டை பண்வகை ; காண்க : ஆகரி .