பிரகிருதி முதல் - பிரதாபம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பிரகிருதி பகுதி ; இயல்பு ; மூலம் ; மூலப்பகுதி ; குடி .
பிரச்சினை கேள்வி ; சிக்கல் .
பிரசங்கம் வெளிப்படுத்துகை ; சொற்பொழிவு .
பிரசங்கி சொற்பொழிவாளர் .
பிரசங்கித்தல் விரித்துப் பொருளுரைத்தல் ; விளம்பரப்படுத்துதல் ; குறிப்பிட்டுச் சொல்லுதல் .
பிரசண்டம் வேகம் ; வீரம் ; கடுமை .
பிரசண்டன் வலியன் ; வீரன் ; கடுமையானவன் .
பிரசத்தி தக்க சமயம் ; சாசனம் .
பிரசம் பூந்தாது ; தேன் ; தேனிறால் ; கள் ; தேனீ ; வண்டு .
பிரசம்சை புகழ்ச்சி .
பிரசலை மனக்கலக்கம் .
பிரசவசன்னி மகப்பேற்றுக்குப்பின் காணுஞ் சன்னிநோய்வகை ; ஈன்ற பிறகு பசுவுக்கு உண்டாகும் நோய்வகை .
பிரசவப்பெரும்பாடு மகப்பேற்றின் பின்னர்ச் சூதகம் மிகுதியாய் வெளிப்படுகை .
பிரசவம் மகப்பேறு .
பிரசவமாதல் மகப்பெறுதல் .
பிரசவவலி காண்க : பிரசவவேதனை ; பிரசவசன்னி .
பிரசவவேதனை மகப்பேறு நிகழ்வதற்கு உண்டாகும் நோவு .
பிரசவித்தல் பிள்ளைபெறுதல் , ஈனுதல் .
பிரசன்னம் தெளிவு ; கடவுள் , பெரியோர் முதலியோரின் காட்சி ; மகிழ்ச்சி .
பிரசன்னமுகம் மலர்ந்த முகம் .
பிரசன்னன் காட்சியருளுபவன் .
பிரசாதப்படுதல் உண்ணுதல் ; திருவாணை ஏற்றல் .
பிரசாதம் தெளிவு ; திருவருள் ; கடவுளுக்குப் படைக்கப்படும் உணவு ; சோறு .
பிரசாதித்தல் திருவருள் புரிந்து உதவுதல் .
பிரசாதிபத்தியம் மக்களாட்சி .
பிரசாபத்தியம் எண்வகை மணத்துள் ஒன்று , மகள் கொள்ளுதற்குரிய குலத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம் மகட்கு ஈந்து கொடுக்கும் மணவகை ; மக்களாட்சி .
பிரசாபதி பிரமன் ; துணைப்பிரமன் ; அரசன் ; ஆண்குறி ; காண்க : பிரசோற்பத்தி .
பிரசாரம் பரவுகை ; பரவச்செய்கை ; வேங்கை மரம் .
பிரசித்தம் அறிவிப்பு ; வெளிப்படை ; புகழ் ; நன்கு அறியப்பட்ட நிலை .
பிரசித்தி புகழ் .
பிரசினம் கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று .
பிரசினை கேள்வி ; சிக்கல் ; உபநிடதத்துள் ஒன்று .
பிரசுரம் அறிவிப்பு ; நூற்பதிப்பு ; மிகுதி .
பிரசுரன் மிக்கவன் ; சுக்கிரன் .
பிரசூதம் காண்க ; பிரசவமாதல் .
பிரசூதவாயு கருப்பவாயு .
பிரசூனம் பூ .
பிரசை குடி ; சந்ததி ; வெருகன்கிழங்கு .
பிரசோற்பத்தி அறுபதாண்டுக்கணக்கில் ஐந்தாம் ஆண்டு ; மக்கட்பெருக்கம் .
பிரஞ்ஞன் அறிஞன் .
பிரஞ்ஞாபங்கம் அறிவுக்கேடு .
பிரஞ்ஞானம் அறிவு .
பிரஞ்ஞை அறிவு ; நிறையறிவு ; முன் நிகழ்ந்ததை அறியும் அறிவு .
பிரட்சாளனம் நீரால் கழுவுதல் .
பிரட்டம் முதன்மையானது ; தள்ளுண்டது ; பொரித்தது .
பிரட்டன் நன்னெறியினின்று தவறியவன் ; வஞ்சகன் .
பிரட்டு காண்க : புரட்டு .
பிரடை யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; முறுக்காணி வில்லை .
பிரண்டை ஒரு கொடிவகை .
பிரணயகலகம் ஊடல் .
பிரணயம் அன்பு .
பிரணவம் ஓங்கார மந்திரம் .
பிரணாமம் கடவுள் அல்லது பெரியோர்முன் செய்யும் வணக்கம் .
பிரத்தம் பத்துப் பதார்த்தங்கொண்ட ஒரு நிறை ; அளவுநாழி ; பிரமாதம் .
பிரத்தல் எழுத்திலா ஒலி .
பிரத்தியக்கம் காண்க : பிரத்தியட்சம் .
பிரத்தியக்கவிருத்தம் காட்சிக்கு மாறுபட்டது .
பிரத்தியக்கு மேற்கு .
பிரத்தியட்சம் காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை .
பிரத்தியம் காட்சி ; அளவை ஆறனுள் காட்சியளவை .
பிரத்தியயம் விகுதி முதலிய இடைச்சொல் .
பிரத்தியருத்தம் எதிருரை , மறுமொழி .
பிரத்தியால¦டம் வில்லோர் நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுற வைக்கும் நிலை .
பிரத்தியேகம் தனிமை ; சிறப்பியல்பு .
பிரதக்கணம் வலம்வருதல் .
பிரதட்சிணம் வலம்வருதல் .
பிரதமகாலம் விடியற்காலம் .
பிரதமம் முதன்மை ; தொடக்கம் .
பிரதமர் தலைமை அமைச்சர் .
பிரதமவிசாரணை தொடக்கத்திற் செய்யும் விசாரணை .
பிரதமை முதல் திதி ; கடுக்காய் .
பிரதரம் பெரும்பாடு .
பிரதனம் படையிலொரு தொகை .
பிரதனை படையிலொரு தொகை .
பிரதாபம் வீரம் ; பெருமை ; புகழ் ; ஒளி .