சொல்
|
அருஞ்சொற்பொருள் |
புதுமைகாட்டுதல் | வியத்தகு செயல் தோற்றுவித்தல் ; அறியாததுபோல் காட்டிக்கொள்ளுதல் . |
புதுமைசெய்தல் | வியத்தகு செயல் தோற்றுவித்தல் ; அறியாததுபோல் காட்டிக்கொள்ளுதல் . |
புதுமொழிதல் | புதிய செய்தி கூறுதல் . |
புதுவது | புதிது . |
புதுவை | புதுச்சேரி , சீவில்லிபுத்தூர் , புதுக்கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களின் மரூஉச்சொல் . |
புதுவோர் | புதிய மாந்தர் ; அனுபவமற்றவர் . |
புதை | மறைவு ; காட்டில் மரமடர்ந்த இடம் ; மறைபொருள் ; புதைபொருள் ; மறைவிடம் ; உடல் ; அம்புக்கட்டு ; புதுமை ; உட்டுளை ; ஆயிரம் . |
புதை | (வி) மறைத்து வை ; சேமி . |
புதைகுழி | பிணத்தைப் புதைக்கத் தோண்டப்படும் குழி . |
புதைத்தல் | அடக்கம்பண்ணுதல் ; ஒளித்து வைத்தல் ; வாய் முதலியவற்றைப் பொத்துதல் ; போர்த்தல் ; மறைத்துப் பேசுதல் ; மணி பதித்தல் ; வலிமையைக் குறைத்தல் ; அமிழ்த்துதல் . |
புதைதல் | மறைதல் ; அமிழ்தல் ; உள்ளடங்கி இருத்தல் . |
புதைபொருள் | பூமியிற் புதைந்து கிடக்கும் பொருள் ; ஆழ்ந்த கருத்துடையது . |
புதைமணல் | சொரிமணல் . |
புதையல் | பூமியில் மறைந்துகிடந்த நிதி ; ஆழ்ந்த கருத்துடையது ; மறைகை ; அம்புக்கட்டு ; கேடயம் . |
புதையிருள் | மிகுந்த இருள் . |
புந்தி | அறிவு ; மனம் ; புதன் ; நெல்வகை . |
புந்தியர் | புலமையோர் . |
புப்புசம் | நுரையீரல் . |
பும் | ஆண் ; ஆண்குறி ; ஓர் ஒலிக்குறிப்பு . |
புமான் | ஆண்மகன் ; கணவன் ; ஆன்மா ; காண்க : அசுத்ததத்துவம் . |
புய்த்தல் | பறித்தல் ; பிடுங்கல் ; பயத்தல் . |
புய்தல் | பறிக்கப்படுதல் ; மறைதல் . |
புயக்கறுதல் | பசுமையறுதல் ; வெளியேறத்தொடங்குதல் . |
புயக்கு | மனக்கவர்ச்சி ; விட்டுநீங்குதல் . |
புயகம் | பாம்பு . |
புயகாசனன் | பாம்பை உணவாகக் கொள்ளும் கருடன் . |
புயகோடரம் | கைக்குழி , கைப்பொருத்து . |
புயங்கநிருத்தம் | ஒரு நடனவகை . |
புயங்கம் | பாம்பு ; ஒரு நடனவகை . |
புயங்கமலை | ஆதிசேடனது வடிவமாகக் கருதப்படும் திருவேங்கடமலை . |
புயங்கன் | பாம்பு ; பாம்பணியுடைய சிவபிரான் . |
புயங்கொட்டுதல் | வீரத்தின் குறியாகத் தோள் தட்டுதல் . |
புயத்தல் | பறித்தல் ; வெளியேறுதல் ; பெயர்த்தல் . |
புயத்துணை | தகுந்த துணைவன் . |
புயம் | தோள் ; புடை ; கோணத்தின் பக்கக்கோடு . |
புயமுட்டி | வில்லைத் தோள்மேல் பிடித்து மேல் நோக்கி அம்பெய்யும்வகை . |
புயல் | மேகம் ; மழைபெய்கை ; நீர் ; கொடுங்காற்று ; சுக்கிரன் . |
புயல்வண்ணன் | திருமால் . |
புயலேறு | இடி . |
புயவகுப்பு | பாட்டுடைத்தலைவனது தோள்வலியை மிகுத்துக் கூறுவதான கலம்பகத்துள் ஓர் உறுப்பு . |
புயவலி | தோள்வலிமை . |
புயாந்தரம் | மார்பு . |
புரகரன் | காண்க : புரதகனன் . |
புரசல் | காண்க : புரைசல் . |
புரசு | பூவரசுமரம் ; சிறு பெண்குழந்தை ; ஒரு மரவகை . |
புரசை | யானைக் கழுத்திலிடுங் கயிறு . |
புரட்சி | மாறுதல் ; பிறழ்வு ; அரசியல் கெட்ட நிலைமை ; ஒழுங்கின்மை . |
புரட்டன் | மாறாட்டுக்காரன் . |
புரட்டாசி | தமிழ் மாதங்களுள் ஆறாவது ; பூரட்டாதிநாள் . |
புரட்டியடித்தல் | மாறாட்டமாய்ப் பேசுதல் ; உண்மையை மறுத்தல் ; நன்றாக அடித்தல் . |
புரட்டு | கீழ்மேலாகத் திருப்புதல் ; மாறுபட்ட பேச்சு ; வஞ்சகம் ; வயிற்றுவலி ; கறிவகை ; வாந்திக்குணம் . |
புரட்டுதல் | உருட்டுதல் ; செய்துமுடித்தல் ; கீழ் மேலாகத் திருப்புதல் ; கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல் ; குமட்டுதல் ; வஞ்சித்தல் ; மாறுபடுத்துதல் ; தேய்த்தல் ; அழுக்காக்குதல் ; மறுத்தல் : புத்தக ஏடுகள் முதலியவற்றைத் திருப்புதல் . |
புரட்டுருட்டு | மாறாட்டமாகப் பேசுதல் ; தந்திரச் செயல் . |
புரட்டை | பூரட்டாதிநாள் . |
புரண்டை | பிரண்டைக்கொடி . |
புரணப்பொருள் | குறிப்பில் தோன்றும் பொருள் . |
புரணம் | நிறைவு ; அசைகை ; துடிக்கை ; தோன்றுகை ; மயக்கம் ; ஒளி . |
புரணி | ஊன் ; தோல் ; சாரமற்றது . |
புரத்தல் | காத்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; வணங்குதல் ; அருளுதல் . |
புரதகனன் | திரிபுரம் அழித்த சிவபிரான் . |
புரந்தரம் | தோள் . |
புரந்தரலோகம் | இந்திரலோகம் . |
புரந்தரன் | இந்திரன் |
புரந்தார் | புரவலர் ; அரசர் . |
புரப்பு | பாதுகாப்பு , ஓம்புகை . |
புரப்போர் | காப்பாற்றுபவர் ; அரசர் . |
புரம் | ஊர் ; நகரம் ; தலைநகரம் ; முப்புரம் ; கோயில் ; மேன்மாடம் ; வீடு ; உடல் ; தோல் ; முன் . |
புரமூன்றெரித்தோன் | காண்க : புரதகனன் . |
புரமெரித்தோன் | காண்க : புரதகனன் . |
புரவரியார் | அரசிறைக் கணக்கர் . |
புரவலன் | காத்துதவுவோன் ; அரசன் ; கொடையாளன் . |
புரவாசம் | நகரத்தில் வாழ்கை . |
புரவாயில் | கோபுரவாயில் . |
புரவி | குதிரை ; குதிரை , யானை இவற்றைத் கட்டுமிடம் ; அசுவினிநாள் ; சாதி . |
புரவிசயன் | திரிபுரம் வென்ற சிவபிரான் . |
![]() |
![]() |
![]() |