சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஆசுவிகன் | காண்க : ஆசீவகன் . |
ஆசுவிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
ஆசுவினம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
ஆசுவீசம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
ஆசூ | நரக வாதை : அமஞ்சிவேலை . |
ஆசூசம் | தீட்டு . |
ஆசூரம் | காண்க : வெள்வெண்காயம் . |
ஆசெதுகை | ய் , ர் , ல் , ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது |
ஆசெறூண் | ஆசெல்தூண் , ஆதீண்டுகுற்றி . |
ஆசேகம் | நனைக்கை . |
ஆசேதம் | அரசன் ஆணையை மேற்கொண்டு தடைசெய்கை . |
ஆசை | வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம் ; விருப்பம் ; பொருளாசை ; காமவிச்சை ; அன்பு ; பேற்றில் நம்பிக்கை ; பொன் ; திசை ; பொன்னூமத்தை . |
ஆசைக்காரணர் | திக்குப் பாலகர் . |
ஆசைகாட்டுதல் | தன்வசமாகும் பொருட்டு இச்சை உண்டாக்குதல் . |
ஆசைநாயகி | அன்புக்குரியாள் ; வைப்பாட்டி . |
ஆசைப்படுதல் | விரும்புதல் . |
ஆசைப்பதம் | வசீகரப் பேச்சு . |
ஆசைப்பாடு | விருப்பம் . |
ஆசைப்பேச்சு | இச்சகம் ; வசமாக்கும் பேச்சு . |
ஆசைபிடித்தல் | இச்சை மிகுதல் . |
ஆசைபூட்டுதல் | ஆசையில் சிக்கச்செய்தல் . |
ஆசைமருந்து | தன்வசமாகக் கூட்டும் மருந்து . |
ஆசைவார்த்தை | நம்பிக்கை உண்டாகச் சொல்லும் சொல் . |
ஆசோதை | இளைப்பாறுகை ; வேலை முடிந்த பின் கொள்ளும் ஒய்வு . |
ஆசௌசம் | தீட்டு . |
ஆஞ்சனேயன் | அஞ்சனாதேவியின் மகனான அனுமான் . |
ஆஞ்சான் | மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு ; பாரந் தூக்கும் கயிறு ; இளமரத்தின் தண்டு ; தண்டனைக்குரிய கோதண்டம் . |
ஆஞ்சான்கயிறு | கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறு . |
ஆஞ்சான்பற்றி | மரக்கலக் கூம்பு . |
ஆஞ்சி | அச்சம் ; அலைவு ; கூத்து ; சோம்பு ; ஏலம் . |
ஆஞ்சிக்காஞ்சி | போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை ; போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை . |
ஆஞ்சித்தாழை | மஞ்சள் நிறமுள்ள தாழைவகை . |
ஆஞ்சிரணம் | காட்டுத்துளசி . |
ஆஞ்சில் | சங்கஞ்செடி . |
ஆஞ்சிறிகம் | சங்கஞ்செடி . |
ஆஞ்ஞாசக்கரம் | அரசாணையாகிய சக்கரம் . |
ஆஞ்ஞாபனம் | கட்டளையிடுதல் . |
ஆஞ்ஞாபித்தல் | கட்டளையிடுதல் . |
ஆஞ்ஞை | கட்டளை ; ஆறாதாரங்களுள் ஒன்று . |
ஆஞா | தந்தை . |
ஆஞான் | தந்தை . |
ஆட்கடியன் | பாம்புவகை ; முதலை . |
ஆட்காசு | ஆள் உருவம் பொறித்த பழங்காசு வகை . |
ஆட்காட்டி | சுட்டுவிரல் ; பறவைவகை ; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை . |
ஆட்கால் | சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை . |
ஆட்கூலி | ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி . |
ஆட்கொல்லி | கொலைஞன் ; பணம் ; தில்லை மரம் . |
ஆசீயம் | கருஞ்சீரகம் . |
ஆசீர்வசனம் | வாழ்த்துரை . |
ஆசீர்வதித்தல் | வாழ்த்துதல் . |
ஆசீர்வாதம் | வாழ்த்து . |
ஆசீல் | மதிப்பு . |
ஆசீல்கட்டுதல் | மதிப்பிடுதல் . |
ஆசீவகப்பள்ளி | ஆசீவகத் தவத்தோர் உறைவிடம் . |
ஆசீவகன் | சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி . |
ஆசு | குற்றம் ; ஆணவமலம் ; புல்லிது ; நுட்பம் ; ஐயம் ; துன்பம் ; பற்றுக்கோடு ; வாளின் கைப்பிடி ; கவசம் ; கைக்கவசம் ; பற்றாசு ; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை ; எதுகை இடையில் வரும் ய் , ர் , ல் , ழ் என்னும் ஒற்றுகள் ; நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று ; இலக்கு ; விரைவு ; ஆசுகவி ; இடைக்கார்நெல்வகை ; அச்சு . |
ஆசுக்காயம் | நரிவெங்காயம் . |
ஆசுகம் | காற்று ; அம்பு ; பறவை . |
ஆசுகவி | கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ; ஆசுகவி பாடும் புலவன் . |
ஆசுகன் | காற்று ; சூரியன் . |
ஆசுகி | பறவை . |
ஆசுசுக்கணி | நெருப்பு . |
ஆசுணம் | காண்க : அசோகம் ; அரசு . |
ஆசுபத்திராமரம் | மரவகை . |
ஆசுபொதுமக்கள் | சமணருள் ஒரு சாரார் . |
ஆசுமணை | நெய்தற் கருவிகளுள் ஒன்று . |
ஆசுரம் | அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் . |
ஆசுரவைத்தியம் | அறுவை மருத்துவம் . |
ஆசுராப்பண்டிகை | மொகரம் பண்டிகை . |
ஆசுரி | அசுரப்பெண் . |
ஆசுவடிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
ஆசுவம் | குதிரைக்கூட்டம் ; குதிரை இழுக்குந்தேர் ; குதிரை சம்பந்தமுடையது ; ஆசீவகர் உணவு . |
ஆசுவயம் | விரைவு ; வேதநுட்பம் . |
ஆசுவயுசி | ஒரு வேள்வி ; ஐப்பசி மாத முழுநிலா . |
ஆசுவாசம் | இளைப்பாறுகை . |
![]() |
![]() |
![]() |