பெருங்களன்செய்தல் முதல் - பெருநாளிருக்கை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பெருங்களன்செய்தல் தெய்வ வழிபாட்டுக்குரிய இடமாகத் தயார்செய்தல் .
பெருங்காஞ்சி ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறைவகை ; வீரர் படை முகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை .
பெருங்காடு பெரிய வனம் ; சுடுகாடு .
பெருங்காப்பியம் நூல் இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறக்கொண்ட தொடர்நிலைச் செய்யுள்வகை .
பெருங்காயம் ஒரு மருந்துவகை ; கறிப்பெருங்காயம் ; ஒரு மரவகை ; ஒரு மரப்பிசின்வகை ; காண்க : பெருஞ்சீரகம் .
பெருங்கால் பெரிய வாய்க்கால் ; யானைக்கால் ; புயல்காற்று .
பெருங்காற்று புயல்காற்று .
பெருங்கிராமம் ஐந்நூறு குடிகளுடைய ஊர் .
பெருங்கிழங்கு காண்க : பெருமருந்து .
பெருங்கிழமை முழு உரிமை ; மிகுநேயம் .
பெருங்குடல் குடற்பிரிவு .
பெருங்குடி உயர்குடி ; வணிகருள் ஒரு பிரிவினர் ; நிலக்கிழார் .
பெருங்குடியர் காண்க : பெருங்குடிவாணிகர் .
பெருங்குடியாட்டம் நாட்டாண்மை .
பெருங்குடிவாணிகர் வணிகருள் ஒரு பிரிவினர் .
பெருங்குமிழ் ஒரு மரவகை .
பெருங்குயம் குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர் .
பெருங்குருகு யானையுண்குருகு ; தலைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைத்தமிழ் நூல் .
பெருங்குழி பெரிய பள்ளம் ; கடல் ; சதுர அளவை ; முக்கால் ஏக்கர்கொண்ட நில அளவு .
பெருங்குழுவைந்து காண்க : ஐம்பெருங்குழு .
பெருங்குறட்டை காண்க : பெருமருந்து ; காக்கணங்கொவ்வை ; உறக்கத்தில் விடும் உரத்த மூச்சினொலி .
பெருங்குறடு விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை .
பெருங்குறி ஊர்ப்பேரவை .
பெருங்குறிச்சபை ஊர்ப்பேரவை .
பெருங்குறிஞ்சி கொடிவகை ; பூண்டுவகை ; குறிஞ்சிப்பாடீடு .
பெருங்கை காண்க : பெரியகை ; யானை .
பெருங்கொடை எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுக்கை .
பெருங்கோடணை ஒரு முரசுவகை .
பெருங்கோநங்கை பட்டத்தரசி .
பெருங்கோப்பெண்டு பட்டத்தரசி .
பெருச்சாளி எலிவகை .
பெருஞ்சவளம் குந்தாயுதவகை .
பெருஞ்சாந்தி கோயிற் பெரிய திருவிழா முடிவில் நடக்கும் நீர்முழுக்கு .
பெருஞ்சாய் பேராற்றல் .
பெருஞ்சிறப்பு பெரிய மரியாதை ; உயர்ந்த கொண்டாட்டச் சூழல் .
பெருஞ்சீரகம் ஒரு செடிவகை .
பெருஞ்சுட்டு பெரும்புகழ் .
பெருஞ்செய் மேம்பாடுள்ள செயல் .
பெருஞ்செய்யாளன் பெரிய வீரச் செயலுள்ளவன் .
பெருஞ்சொல் பலரறிசொல் .
பெருஞ்சோற்றுநிலை போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை .
பெருஞ்சோற்றுவஞ்சி போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை .
பெருஞ்சோறு அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு ; பரணிநாள் .
பெருத்தல் அதிகப்படல் ; பருமையாதல் ; மிகுதல் .
பெருந்தகவு பெருமை ; பெருந்தன்மை .
பெருந்தகளி பல முகங்களை உடைய விளக்கு .
பெருந்தகை மிக்க பெருமையுடையவர் ; காண்க : பெருந்தன்மை ; மிக்க அழகு .
பெருந்தன்மை மேம்பாடு ; அகந்தை .
பெருந்தனம் கணிகையருள் ஒரு பிரிவினர் ; சோழரது அரசாங்க உத்தியோகங்களில் ஒன்று .
பெருந்தாதை காண்க : பெரியப்பன் .
பெருந்தாய் காண்க : பெரிய தாய் .
பெருந்தானம் நெஞ்சு , மிடறு , நாக்கு , மூக்கு , அண்ணம் , உதடு , பல் , தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள் .
பெருந்திசை வடக்கு முதலிய முதன்மைத் திசை ; நீண்ட நிலப்பரப்புள்ள திக்கு .
பெருந்திணை பொருந்தாக் காமம் , மனம் ஒவ்வாத காதல் .
பெருந்திருவமிர்து கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம் .
பெருந்திருவி பெருஞ்செல்வமுள்ளவள் .
பெருந்தில்லை ஒரு மரவகை .
பெருந்துத்தி துத்திச்செடிவகை .
பெருந்துருத்தி நீர்வீசுங் கருவிவகை .
பெருந்துறை பெரிய துறைமுகம் ; திருப்பெருந்துறை என்னும் ஊர் .
பெருந்தூறு பெரும்புதர் .
பெருந்தெரு நகரின் தலைமை வீதி .
பெருந்தேவபாணி இசைப்பாவகையுள் ஒன்று ; ஓர் இலக்கியம் .
பெருந்தேவி காண்க : பெருங்கோப்பெண்டு .
பெருந்தேன் தேனீக்கள் கூட்டுகின்ற தேன் ; பெரிய தேனீவகை .
பெருநகரத்தார் வணிகர் .
பெருநகை பெருஞ்சிரிப்பு ; பேரிகழ்ச்சி .
பெருநடை உயர்ந்த நடை ; விரைந்த செலவு ; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று ; உயர்ந்த ஒழுக்கம் .
பெருநம்பி இளவரசருக்குரிய பட்டப்பெயர் ; மந்திரியின் பட்டம் .
பெருநயப்புரைத்தல் பெருவிருப்பைக் கூறுதல் .
பெருநறளை நீண்ட கொடிவகை .
பெருநறுவிலி ஒரு மரவகை .
பெருநாரை நாரைவகை ; தலைச்சங்கத்து வழங்கிய இசைநூலுள் ஒன்று .
பெருநாள் திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் .
பெருநாளிருக்கை அரசனது சிறப்பு நாளோலக்கம் .