மசக்குதல் முதல் - மஞ்சிபலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மசக்குதல் மயக்குதல் ; குழப்புதல் ; ஆடையைக் கஞ்சிப்பற்று நீங்கும்படி கசக்குதல் .
மசக்கை சூதகக்கட்டு ; கருக்கொண்ட பெண்ணுக்கு மயக்கம் முதலியவற்றை உண்டாக்கும் ஒரு நோய்வகை .
மசகம் கொசு ; நீர்த்துருத்தி ; மயிர் ; மயக்கம் .
மசகவரி சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை .
மசகாரி சித்திரப்பணி எழுதியதும் கொசுக்களை விலக்குவதுமான அமளித்திரை .
மசகி அத்திமரம் .
மசகிற்புள் கடற்பறவைவகை .
மசகு நடுக்கடலில் திசைதெரியாது ஆழ்ந்து அகன்ற இடம் ; வைக்கோற் கரியோடு எண்ணெய் கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை ; திகைப்பு .
மசகுதல் சுணங்கிநிற்றல் ; மனந்தடுமாறுதல் .
மசங்கல் மயக்கம் ; அந்திப்பொழுது .
மசங்குதல் மயங்குதல் ; ஒளிகுறைதல் ; கசங்குதல் .
மசடன் குணங்கெட்டவன் .
மசண்டை அந்திநேரம் .
மசம் கொசு .
மசமசத்தல் தினவெடுத்தல் ; செயலை முடியாது தாழ்த்தல் .
மசமசெனல் தினவு எடுத்தற்குறிப்பு ; பேச்சு முதலியவற்றில் தீர்மானமின்றி இழுத்தற் குறிப்பு .
மசரதம் கானல்நீர் , பேய்த்தேர் .
மசனம் வருத்தல் .
மசாலை கறிச்சரக்கு ; குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து .
மசானக்கொள்ளை பகற்கொள்ளை .
மசானம் சுடுகாடு .
மசி எழுதும் மை ; வண்டியின் அச்சிலிடும் மசகு .
மசிக்கூடு எழுதும் மைவைக்குங் குப்பி .
மசிகம் புற்று .
மசித்தல் கடைதல் முதலியவற்றால் குழையச் செய்தல் ; குழப்புதல் .
மசிதல் வழுவழுப்பாயிருத்தல் ; விட்டுக் கொடுத்தல் .
மசிபதம் இறகுபேனா .
மசிமையிலி நாணமில்லாதவன் .
மசியல் கடைந்து செய்த உணவு முதலியன .
மசிர் அறுகம்புல் : மயிர் .
மசுக்கரம் மூங்கில்மரம் .
மசுரம் கடலை .
மசூதி பள்ளிவாயில் .
மசூரம் மூட்டுப்பூச்சி ; தானியவகையுள் ஒன்று .
மசோதா சட்ட முன்வடிவு , சட்டமாவதற்கு முன் சட்டப் பேரவைக்குக் கொணரப்படும் சட்ட நகலின் குறிப்பு ; மூலப்பத்திரத்துக்கு முன் குறிக்கப்படும் நகல் .
மஞ்சகம் கட்டில் ; கொக்குவகை .
மஞ்சட்காப்பு காப்பாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு ; கோயிலில் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சட் குழம்பு ; ஓலைக்கு மஞ்சற் பூசுதல் .
மஞ்சட்காமாலை ஒரு கண்நோய்வகை .
மஞ்சட்குருவி ஒரு குருவிவகை .
மஞ்சட்குளி மஞ்சள் தேய்த்துக் குளிக்கை ; மஞ்சள் நீர் விளையாட்டு .
மஞ்சட்கொத்து கிழங்குடன் கூடிய மஞ்சட்செடி .
மஞ்சட்பால்கொடுத்தல் தத்தெடுத்தல் .
மஞ்சட்பாவாடை ஊர்த்தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சள் நீரில் தோய்த்த புத்தாடை .
மஞ்சட்பூ காண்க : பவழமல்லிகை .
மஞ்சட்பூச்சு மகளிர் குளிக்கும்போது மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்கை .
மஞ்சணம் பற்பொடி .
மஞ்சணீர் நல்ல காலத்தில் பயன்படுத்தும் மஞ்சட் கரைத்த நீர் ; கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சள்நீர் தெளிக்கும் சடங்கு .
மஞ்சணீர்ச்சீட்டு வளர்ப்புப் பிள்ளையை எடுத்தற்கு உரித்தாக்குஞ் சீட்டு .
மஞ்சணீர்நதி காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு .
மஞ்சணீர்ப்பிள்ளை வளர்ப்புப்பிள்ளை .
மஞ்சணை சில சாதி மகளிர் கழுத்திலும் சிறுதேவதைகளின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமக்குழம்பு ; மரவகை .
மஞ்சத்தலம் அரியணை .
மஞ்சம் கட்டில் ; இருக்கையிடுதற்குரிய மேடை ; சப்பரம் ; காண்க : கொம்மட்டிமாதுளை .
மஞ்சரி தளிர் ; பூங்கொத்து ; பூமாலை ; மலர்க்காம்பு ; ஒழுக்கம் ; ஒரு நூல்வகை ; மருந்துவகை ; முத்து ; நாயுருவிச்செடி ; பண்வகை .
மஞ்சரிப்பா நூல்வகை .
மஞ்சள் செடிவகை ; மஞ்சள்நிறம் ; எலுமிச்சை ; காண்க : மஞ்சட்குருவி .
மஞ்சள்வெயில் மாலைநேர வெயில் .
மஞ்சளாலாத்தி கண்ணேறு போக்க மஞ்சள் நீரால் எடுக்கும் ஆராத்தி .
மஞ்சன் ஆண்மகன் ; மஞ்சள்நிறமுடையவன் .
மஞ்சனசாலை குளியலறை .
மஞ்சனநீர் முழுக்குநீர் .
மஞ்சனம் நீராட்டம் ; காண்க : மஞ்சனநீர் .
மஞ்சனமாடுதல் நீராடுதல் .
மஞ்சனி காண்க : வேலிப்பருத்தி ; பெண் .
மஞ்சா காண்க : இலைக்கள்ளி .
மஞ்சாடி ஒரு மரவகை ; காண்க : மஞ்சாளி ; செவ்வள்ளி ; நுணாப்பட்டை .
மஞ்சாடிமரம் ஒரு மரவகை .
மஞ்சாரி காண்க : கஞ்சாங்கோரை .
மஞ்சாளி இரண்டு குன்றிமணி எடைகொண்ட மஞ்சாடி வித்து .
மஞ்சி சிறுவரம்பு ; படகு ; சணல்நார் ; காண்க : சணல் ; குறுமாடி ; மூடுபனி ; சுங்கம்வாங்கி ; புல்வகை .
மஞ்சிகம் பெட்டி ; தாளிக்கொடி .
மஞ்சிகன் நாவிதன் .
மஞ்சிகை பெட்டி ; கொட்டாரம் ; தொம்பை ; தாளிக்கொடி ; கையாந்தகரை ; காதணிவகை .
மஞ்சிட்டி ஒரு நீர்ப்பூடுவகை .
மஞ்சிபலை வாழை .