சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மாரதந்தி | காமன் யானையான இருள் . |
மாரதன் | தான் ஒருவனே பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல தேர்வீரன் . |
மாரப்பற்று | கருப்பூரவகை . |
மாரபேரி | காமன் முரசான கடல் . |
மாரம் | செடிவகை . |
மாரவேள் | காமன் . |
மாரன் | மன்மதன் ; புத்தரை மயக்க முயன்று தோற்ற ஒரு தேவன் . |
மாரனாலயம் | மன்மதன் இருக்கை ; பெண்குறி . |
மாராட்டம் | துன்பம் ; ஆள்மாறாட்டம் ; மகாராட்டிரதேசம் ; ஊர் . |
மாராப்பு | பெண்கள் தம் மார்பின் குறுக்கேயிடும் சீலைப்பகுதி ; முதுகுடன் இணைத்து மூட்டை கட்டுங் கச்சை . |
மாராயஞ்சொல்லுதல் | நற்செய்தி கூறுதல் . |
மாராயம் | வேந்தனால் பெறும் சிறப்பு ; மகிழ்ச்சி ; நற்செய்தி ; பாராட்டுச்சொல் ; பெண் பூப்படைந்தமையைச் சுற்றத்தாருக்கு அறிவிக்கை . |
மாராயவஞ்சி | அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரனின் பெற்றிமை கூறும் புறத்துறை . |
மாராயன் | அரசன் ; அரசனாற் பெறும் பட்டப்பெயர் ; திருவிதாங்கூரில் உவச்சரையொத்த ஒரு சாதி . |
மாராழம் | மார்பளவுள்ள ஆழம் . |
மாரி | மழை ; நீர் ; மேகம் ; மழைக்காலம் ; பூராட நாள் ; புள்வகை ; சாவு ; அம்மைநோய் ; ஒரு தேவதை ; துர்க்கை . |
மாரிக்காலம் | மழைக்காலம் . |
மாரிநாள் | உத்தரநாள் . |
மாரிபம் | மூலம் . |
மாரிமழை | வேனிற்காலத்திற் பெய்யும் மழை . |
மாரிமறுத்தல் | மழை நின்றுவிடுகை ; மழையில்லாமை . |
மாரிமுத்து | அம்மைநோய் . |
மாரியம்மன் | அம்மைக்குரிய தேவதை . |
மாரீசம் | வஞ்சகம் ; மூர்ச்சை ; உபபுராணத்துள் ஒன்று ; மிளகுதைலம் . |
மாருதப்படை | வாயுதேவனின் அம்பு . |
மாருதம் | காற்று . |
மாருதன் | வாயுபகவான் . |
மாருதி | அனுமான் ; வீமன் . |
மாருதிநாதம் | வங்கமணல் . |
மாருதேயன் | அனுமான் . |
மாரெரிச்சல் | செரியாமையால் உண்டாகும் மார்பெரிச்சல் நோய் . |
மாரோடம் | செங்கருங்காலி . |
மால் | பெருமை ; பெருமையுடையவன் ; திருமால் ; அருகன் ; இந்திரன் ; காற்று ; புதன் ; சோழன் ; மலை ; வளமை ; செல்வம் ; பழைமை ; மேகம் ; கண்ணேணி ; மயக்கம் ; ஆசை ; காமம் ; கருமை ; விட்டுணுக்கரந்தை ; எழுதக்கருவி ; செங்கற்கட்டளை ; காளவாய் ; மாதிரி ; எல்லை ; வலைவகை ; இலாயம் ; அரசிறைவகை ; சொத்து ; அரண்மனை . |
மால்தங்கை | உமை ; பாடாணவகை . |
மால்தொடை | துளசி . |
மால்பு | கண்ணேணி . |
மால்முடிதல் | வலைபின்னுதல் . |
மால்முருகு | துளசி . |
மால்மைத்துனன் | சிவபிரான் ; துருசு . |
மால்வீடு | காண்க : சாளக்கிராமம் . |
மாலகம் | வேப்பமரம் ; செம்பரத்தைவகை . |
மாலதி | சிறுசண்பகம் ; மல்லிகை ; காட்டுமல்லிகை ; விளக்குத்தண்டு ; நிலவின்கதிர் ; நிருவாணம் . |
மாலதிபலம் | சாதிக்காய் . |
மாலம் | குங்குமமரம் ; பேய் . |
மாலமாயம் | பேயின் தந்திரம் . |
மாலயம் | சந்தனமரம் ; காண்க : மாளயம் . |
மாலர் | கவசம் ; வேடர் ; புலையர் . |
மாலவன் | புதன் ; திருமால் . |
மாலி | மாலையணிந்தவன் ; சூரியன் ; ஓர் அரக்கன் ; கள் ; தோட்டக்காரன் . |
மாலிகன் | பூ விற்போன் . |
மாலிகை | மாலை ; வரிசை ; சீமைச்சணல் . |
மாலிமி | இளமைப் பருவத்திற் செய்யும் நட்பு ; காண்க : மாலுமி . |
மாலியம் | கடவுளுக்குப் படைக்கும் மலர் ; பூ . |
மாலிருஞ்சோலை | மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்மலை . |
மாலினி | பார்வதி ; துர்க்கை . |
மாலுக்கிளையாள் | துர்க்கை . |
மாலுகம் | காண்க : மாலகம் . |
மாலுதல் | மயங்குதல் ; மாட்சிமைப்படுதல் ; எழுதகம் அமைத்தல் . |
மாலுதானம் | காண்க : பச்சைப்பாம்பு . |
மாலுதானன் | காண்க : பச்சைப்பாம்பு . |
மாலுந்திவந்தோன் | திருமாலின் கொப்பூழில் உதித்தவனான பிரமன் . |
மாலுமி | கப்பலோட்டி . |
மாலூர்தி | திருமாலின் ஊர்தியான கருடன் . |
மாலூரம் | வில்வமரம் ; மாவிலிங்கமரவகை . |
மாலை | அந்திப்பொழுது ; இரவு ; இருள் ; சமயம் ; குற்றம் ; மரகதக்குற்றவகை ; இயல்பு ; குணம் ; தொடுக்கப்பட்டது ; தொடுத்த பூந்தொடை ; மாதரணிவடம் ; நூல்வகை ; வரிசை ; பாசம் ; விறலி ; பெண் . |
மாலைக்கண் | இரவில் கண் தெரியாமை ; பார்வைக்குறைவு . |
மாலைக்கண்ணண் | இராக்குருடன் ; பார்வைக் குறைவுள்ளவன் . |
மாலைக்காரன் | மாலை தொடுப்போன் . |
மாலைக்குளியல் | அந்திநேரத்துக் குளிக்கை . |
மாலைக்குளியன் | மாலையிற் குளித்து அலங்கரித்துக்கொள்ளும் பகட்டன் . |
மாலைகட்டி | கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன் . |
மாலைசாத்துதல் | மாலையால் அலங்கரித்தல் . |
மாலைசூட்டு | காண்க : சுயம்வரம் . |
மாலைசூட்டுதல் | மாலை சூட்டி மணத்தல் . |
மாலைநிலை | இறந்த கணவனுடைய சிதையில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்ற நிலை கூறும் புறத்துறை . |
![]() |
![]() |
![]() |