சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மின்மினிப்பூச்சி | ஒளிவீசும் ஒரு பூச்சிவகை . |
மின்மினிபறத்தல் | ஒளிமிகுதியால் கண்ணொளி மழுங்குதல் . |
மின்விளக்கு | மின்னாற்றலால் ஒளிதரும் விளக்கு . |
மின்வெட்டு | மின்னல் பாய்கை . |
மின்னல் | மழைமேகத்தில் தோன்றும் மின்னொளி ; ஒளிமிக்க நாணயம் . |
மின்னற்கொடி | மின்னலின் ஒளிவீச்சு . |
மின்னார் | அழகிய பெண்டிர் . |
மின்னி | நீர்ப்பயறு ; கருங்காக்கணம் . |
மின்னுக்கொடி | காண்க : மின்னற்கொடி . |
மின்னுதல் | மின்னல் ; ஒளிவீசுதல் . |
மின்னெறிதல் | மின்னல் ; ஒளிவீசுதல் . |
மினுக்கம் | காண்க : மினுக்கு . |
மினுக்கி | தன்னை அழகுபடுத்துபவள் , பகட்டுபவள் . |
மினுக்கு | ஒளி , சிறப்பு ; பகட்டு . |
மினுக்குதல் | பளபளப்புண்டாக்குதல் ; பகட்டுதல் ; அரிசி தீட்டுதல் . |
மினுக்குமினுக்கெனல் | விட்டுவிட்டு ஒளிவீசல் . |
மினுக்கெண்ணெய் | உடலுக்குப் பளபளப்புண்டாக்கும் தைலவகை ; மரப்பொருள்களுக்குரிய பூச்செண்ணெய் . |
மினுங்குதல் | ஒளிவீசுதல் ; விளக்கமாய்த் தோன்றுதல் . |
மினுமினுத்தல் | ஒளிவீசல் ; ஒளிகுன்றுதல் . |
மினுமினுப்பு | ஒளி . |
![]() |
![]() |