சொல்
|
அருஞ்சொற்பொருள் |
முசிறு | காண்க : முசுறு ; கருங்குரங்குவகை . |
முசு | கருங்குரங்கு ; திமில் . |
முசுக்கட்டை | பட்டுப்பூச்சி வாழும் மரம் ; கம்பளிப்பூச்சி ; மரவகை . |
முசுக்கட்டைப்பூச்சி | கம்பளிப்பூச்சிவகை . |
முசுட்டை | ஒரு கொடிவகை . |
முசுடர் | காண்க : முசுண்டர் . |
முசுடி | நொடி ; கோபக்காரி . |
முசுடு | காண்க : முசிறு . |
முசுண்டர் | கீழ்மக்கள் . |
முசுண்டி | ஆயுதவகை . |
முசுண்டை | ஒரு கொடிவகை . |
முசுப்பதி | போர்வீரர் உறையுமிடம் . |
முசுப்பு | திமில் . |
முசுமுசுக்கை | ஒரு மருந்துக்கொடிவகை . |
முசுமுசுத்தல் | குறட்டைவிடல் ; நீர் முதலியன கொதித்தல் ; தினவெடுத்தல் ; உறிஞ்சுதல் . |
முசுமுசெனல் | தினவுக்குறிப்பு ; நீர் முதலியன கொதித்தற்குறிப்பு . |
முசுறு | செந்நிற எறும்பு ; கடுகடுப்புள்ளவர் . |
முஞ்சகேசன் | திருமால் . |
முஞ்சகேசி | திருமால் . |
முஞ்சம் | குழந்தைகளின் தலையணிவகை . |
முஞ்சரம் | தாமரைக்கிழங்கு . |
முஞ்சி | நாணற்புல் ; பார்ப்பனப் பிரமசாரிகள் அரையிற் கட்டும் நாணற்கயிறு . |
முஞ்சுதல் | சாதல் ; முடிதல் . |
முஞ்ஞை | மரவகை . |
முஞல் | கொசு . |
முட்கரம் | ஓர் ஆயுதவகை . |
முட்கீரை | ஒரு கீரைவகை . |
முட்கோல் | குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல் . |
முட்சங்கு | முள்ளுள்ள சங்குவகை ; சங்கஞ்செடி . |
முட்செவ்வந்தி | ரோசா , நிலத்தாமரை . |
முட்ட | முழுதும் ; மிகவும் . |
முட்டடி | அண்மை ; நெருக்கம் . |
முட்டத்தட்டுதல் | முழுதும் பறித்தல் ; முழுதும் இல்லையாதல் . |
முட்டத்தனம் | மூடத்தன்மை . |
முட்டம் | ஊர் ; பக்கம் ; காக்கை ; காண்க : முட்டான் ; ஒரு திருமால் தலம் . |
முட்டமுடிய | காண்க : முட்ட . |
முட்டாக்கிடுதல் | முகத்தைப் போர்த்தல் ; உள்ளடக்குதல் . |
முட்டாக்கு | தலைமூடுசீலை ; போர்வை . |
முட்டாட்டம் | முட்டுகை ; முட்டாள்தன்மை ; செருக்கு . |
முட்டாள் | மூடன் ; கொத்துவேலைச் சிற்றாள் ; ஊர்தியின் அடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பதுமை . |
முட்டாள்வேலை | மூடச்செயல் . |
முட்டாறு | காண்க : முட்கோல் . |
முட்டான் | அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம் ; திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை . |
முட்டி | விரல் முடக்கிய கை ; கைக்குத்து ; அபிநயவகை ; கைப்பிடியளவு ; பிச்சை ; ஆயுதம் பிடிக்கும்வகை ; அறுபத்துநான்கு கலைகளுள்கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் வித்தை ; ஒரு பலம் அளவு ; சிறுபானை ; பலிச்சோறு ; வெல்லம் ; செங்கலின் துண்டு ; சிற்றாமுட்டி பேராமுட்டிகள் ; காண்க : பேய்க்கொம்மட்டி ; சிப்பிவகை ; வரிவகை ; நஞ்சு தீர்க்கும் மந்திர சிகிச்சைவகை . |
முட்டிக்கால் | முழங்காற்சிப்பி ; முட்டிக்காற்பின்னல் . |
முட்டிக்காலன் | முட்டுக்கால் தட்டும்படி நடப்பவன் . |
முட்டிக்கொள்ளுதல் | சினம் , துயரம் , முதலியவற்றால் தலையை மோதிக்கொள்ளுதல் ; பெருமுயற்சி எடுத்தல் . |
முட்டிகன் | தட்டான் . |
முட்டிகை | தட்டார் சிறுசுத்தி . |
முட்டிடை | நெருக்கடி ; நெருக்கம் . |
முட்டிமுரண்டுதல் | பெருமுயற்சி எடுத்தல் . |
முட்டியடித்தல் | திண்டாடுதல் . |
முட்டியுத்தம் | கைக்குத்துச்சண்டை . |
முட்டு | விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை ; தடை ; தட்டுப்பாடு ; சங்கடம் ; குறைவு ; உட்சென்று கடத்தலருமை ; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் ; மாதவிடாய் ; கருவி : சில்லறைப் பொருள்கள் ; பற்றுக்கோடு ; முழங்கால் , முழங்கை , விரல்கள் இவற்றின் பொருத்து ; மேடு ; குவியல் . |
முட்டுக்கட்டியாடுதல் | பொய்க்கால்களில் நின்று நடத்தல் . |
முட்டுக்கட்டுதல் | கட்டை முதலியன ஆதரவாகக் கொடுத்தல் ; வழியை அடைத்தல் ; வயல் முதலியவற்றுக்கு எல்லை கட்டுதல் ; முழந்தாளைக் கைகளால் கட்டுதல் . |
முட்டுக்கட்டை | தாங்குகம்பம் ; தடைசெய்பவர் ; தடைசெய்வது . |
முட்டுக்கால் | தாங்குகால் ; காண்க : முட்டிக்கால் . |
முட்டுக்கொடுத்தல் | ஆதாரக்கால் நிறுத்துதல் ; இடையூறு செய்தல் . |
முட்டுக்கோல் | கிட்டி . |
முட்டுச்சட்டம் | உதைமானச் சட்டம் . |
முட்டுச்சுவர் | உதைமானச் சுவர் . |
முட்டுதல் | மோதுதல் ; தடுத்தல் ; எதிர்த்தல் ; எதிர்ப்படுதல் ; பிடித்தல் ; தேடுதல் ; குன்றுதல் ; நிறைதல் ; முடிதல் ; தடைப்படுதல் ; பொருதல் ; வழுவுதல் . |
முட்டுப்படுதல் | துன்புறுதல் ; தடைப்படுதல் . |
முட்டுப்பாடு | இடையூறு ; நெருக்கிடை ; சங்கடம் ; தட்டுப்பாடு ; ஆயுதவகை ; தீமை . |
முட்டுவீக்கம் | முட்டுக்காலில் வீங்குகை . |
முட்டுற்றவன் | அறிவில்லாதவன் ; குறைவுள்ளவன் . |
முட்டை | அண்டம் ; அண்டகோளம் ; உடம்பு ; சாணங்கொண்டு தட்டிய வறட்டி ; தவிடு ; சிறுகரண்டி . |
முட்டைக்கண் | உருண்டை விழி . |
முட்டைக்கோசு | ஒரு செடிவகை . |
முட்டைவடிவு | நீண்ட உருண்டை வடிவம் . |
முட்டொறடு | இறைச்சி தொங்கவிடும் முள் . |
முட்பன்றி | காண்க : முள்ளம்பன்றி . |
முட்புறக்கனி | பலாப்பழம் . |
முடக்கடி | தடை ; தொல்லை . |
![]() |
![]() |
![]() |