சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மூழல் | மூடி ; கழற்சிக்காய் . |
மூழாக்கு | மூன்று உழக்கு . |
மூழி | அகப்பை ; மத்து ; கமண்டலம் ; நீர்நிலை ; சோறு ; வேள்விப்பாண்டம் . |
மூழிவாய் | பூக்கூடை . |
மூழை | அகப்பை ; சோறு ; மத்து ; குழிந்த இடம் . |
மூள்தல் | காண்க : மூளுதல் . |
மூளி | உறுப்புக்குறை ; உறுப்பறை ; தலைப்பகுதி பழுதுபட்டிருப்பது ; குறைவுற்றது ; வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதவர் ; வழக்கமாயுள்ள அணிகலன் இல்லாதது ; அழகற்றவள் . |
மூளியுதடு | பிளந்த உதடு . |
மூளூதல் | நெருப்பு முதலியன பற்றுதல் ; சினங்கிளம்புதல் ; ஊக்கத்துடன் முயலுதல் . |
மூளை | மண்டையின் உள்ளீடு ; மச்சை ; அறிவு . |
மூளைகெடுதல் | அறிவுகுறைதல் . |
மூளையதிர்ச்சி | தலையில் அடிபடுவதால் உண்டாகும் மூளைக்கலக்கம் . |
மூளையில்லாதவன் | மூடன் . |
மூற்றை | மும்மடங்கு . |
மூறுவா | ஒரு செடிவகை . |
மூன்றாங்கால் | திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு நடும் பந்தற்கால் ; மூன்றாந் தலைமுறை உறவு ; மூன்றாம் ஆண்குழந்தை . |
மூன்றாம்பாட்டன் | காண்க : முப்பாட்டன் . |
மூன்று | இரண்டுக்குமேல் அடுத்துள்ள எண் . |
மூன்றுதண்டர் | முக்கோல் பகவர் . |
மூன்றுநூல் | பூணூல் . |
மூனாயம் | குற்றம் . |
![]() |
![]() |