சொல்
|
அருஞ்சொற்பொருள் |
யானைபாய்ச்சுதல் | யானையை மதம்படுமாறு செய்தல் . |
யானைமதம் | யானையினின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர் . |
யானைமறம் | அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை . |
யானைமால் | காண்க : யானைத்தொழு . |
யானைமுகவற்கிளையோன் | முருகன் ; வீரபத்திரக் கடவுள் . |
யானைமுகவன் | விநாயகன் . |
யானையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி ; நேர்வழி ; பெரிய வட்டமாயுள்ளது ; செடிவகை . |
யானையுண்குருகு | ஆனையிறாஞ்சிப்புள் ; காண்க : யானைக்குருகு . |
யானையுரித்தோன் | யானையின் தோலை உரித்தவனாகிய சிவபிரான் . |
யானையேற்றம் | யானைமீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை . |
யானைவணங்கி | காண்க : தேட்கொடுக்கி ; யானைநெருஞ்சி . |
யானைவாரி | காண்க : யானைத்தொழு ; யானை பிடிக்குமிடம் . |
யானைவீரர் | எண்பெருந் துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் . |
யானைவென்றி | ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றிபெறுதலைக் கூறும் புறத்துறை . |
யானைவேட்டுவன் | யானைவேட்டையாடுவோன் . |
![]() |
![]() |