வகைவைத்தல் முதல் - வசஞ்செய்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வகைவைத்தல் காரியமாகக் கொள்ளுதல் ; கணக்கில் வரவுவைத்தல் .
வங்கக்கல் சுக்கான்கல் .
வங்கசிந்தூரம் ஈயத்தின் சிந்தூரம் .
வங்கணத்தி உற்ற தோழி ; கொடியவள் .
வங்கணம் நட்பு ; காதல் ; தகுதி ; செடிவகை .
வங்கணன் உற்ற தோழன் ; கொடியவன் .
வங்கநீர் கடல் .
வங்கநீறு ஈயமணல் .
வங்கப்பாண்டி ஊர்திவகை .
வங்கப்பாவை மருந்துச்சரக்குவகை .
வங்கம் கப்பல் ; ஓர் ஊர்திவகை ; ஈயம் ; தகரம் ; துத்தநாகம் ; வெள்ளி ; ஒரு நாடு ; ஒரு மொழி ; அலை ; ஆற்றுவளைவு ; கருத்து ; வறுமை ; கத்தரிச்செடி .
வங்கர் நெய்தல்நில மக்கள் ; வங்கநாட்டார் .
வங்கன் சண்டாளன் ; வறிஞன் .
வங்கா பறவைவகை ; ஊதுகொம்புவகை .
வங்காரம் பொன் ; உலோகக்கட்டி ; செப்பம் .
வங்காளி வங்கநாட்டான் ; வங்கமொழி ; வாழை .
வங்கி தோளணிவகை ; வளைந்த ஆயுதவகை ; பாங்கி ; சம்பாநெல்வகை ; கொடிவேலி .
வங்கிசம் வமிசம் ; காண்க : வங்கியம் .
வங்கியம் இசைக்குழல் ; மூங்கில் .
வங்கு கல் முதலியவற்றின் அளை ; எலிவளை ; மலைக்குகை ; மரப்பொந்து ; கப்பலின் விலாச் சட்டம் ; பாய்மரக்குழி ; நாய்ச்சொறி ; கழுதைப்புலி ; தாழம்பூவின் மகரந்தம் .
வங்குக்கால் கப்பலின் விலாப்பலகைகளைத் தைக்குஞ் சட்டம் .
வங்கூழ் காற்று ; வாதம் .
வங்கை பகை ; குறும்பு .
வச்சகம் மலைமல்லிகைச்செடி ; வெட்பாலை .
வச்சணத்தி அன்பு .
வச்சநாபி பச்சநாவி ; நச்சுச்செடிவகை .
வச்சநாவி பச்சநாவி ; நச்சுச்செடிவகை .
வச்சம் கன்று ; ஒரு நாடு .
வச்சயம் கலைமான் ; கருநிறமுள்ள மான்வகை .
வச்சரி வேம்பு .
வச்சலமணி கோரோசனை .
வச்சனி மஞ்சள் .
வச்சி காயாமரம் .
வச்சிரக்கட்டு பலமான அமைப்பு .
வச்சிரக்கபாய் உறுதியான காப்புச்சட்டை .
வச்சிரக்கல் வைரமணி .
வச்சிரகங்கடம் மிக்க உறுதியுள்ள சட்டைவகை .
வச்சிரகங்கடன் அனுமான் .
வச்சிரகாயம் காண்க : வச்சிரயாக்கை .
வச்சிரசரீரம் காண்க : வச்சிரயாக்கை .
வச்சிரதரன் வச்சிரப்படையுடைய இந்திரன் .
வச்சிரதுண்டம் கருடன் ; கொக்கு ; வலியான் .
வச்சிரநிம்பம் கருவேம்புமரம் .
வச்சிரப்படை இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம் ; கோபுரத்தின் அடிநிலைக் கட்டடம் .
வச்சிரப்படையோன் காண்க : வச்சிரதரன் .
வச்சிரபாணி காண்க : வச்சிரதரன் .
வச்சிரபாதம் இடியேறு .
வச்சிரபீசம் கெட்டியான விதையுடைய கழற்சிக்காய் .
வச்சிரம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; மிகவும் உறுதியானது ; வைரமணி ; மரத்தின் காழ் ; சதுரக்கள்ளி ; மல்லர் கருவிவகை ; ஒரு பசைவகை ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; வச்சிரநாடு .
வச்சிரமணி வைரக்கல் .
வச்சிரமாலை இந்திரர் முதலிய தேவர் தோளிலணியும் மாலை .
வச்சிரயாக்கை உறுதியான உடல் .
வச்சிரயாப்பு மரங்களை வச்சிரப்பசையினாற் சேர்க்கை ; வச்சிரப்படையால் எழுதியது போன்று என்றும் அழியாவெழுத்து .
வச்சிரரேகை பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் இரேகைவகை .
வச்சிரலேபம் ஒன்றாக இணைக்கும் பசைவகை .
வச்சிரவண்ணன் குபேரன் .
வச்சிரவணன் குபேரன் .
வச்சிரவல்லி பிரண்டைக்கொடி ; சூரியகாந்தி .
வச்சிரன் இந்திரன் .
வச்சிராங்கம் சதுரக்கள்ளிமரம் .
வச்சிராங்கி உறுதியான கவசம் ; வைரம்பதித்த கவசம் .
வச்சிராசனி இந்திரனது வச்சிரப்படை ; இந்திரனின் கொடி .
வச்சிராட்சி பிரண்டைக்கொடி .
வச்சிராயுதம் இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; இந்திரனின் ஆயுதம் .
வச்சிராவர்த்தம் இராமன் வில் .
வச்சிரி காண்க : வச்சிரதரன் .
வச்சை வாஞ்சை ; இவறல் ; பழிப்பு .
வச்சைமாக்கள் உலுத்தர் , இவறலர் .
வச்சையம் கலைமான் .
வச்சையன் உலுத்தன் .
வசக்கட்டு வாணிகக் கூட்டாளியிடம் கொடுத்த தொகை ; ஒப்படைத்த பொருள் ; செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம் ; ஆட்சி .
வசக்குதல் வளையப்பண்ணுதல் ; நிலத்தைத் திருத்துதல் ; வயப்படுத்துதல் .
வசங்கண்டவன் உண்மையறிந்தவன் ; பட்டறிவுள்ளவன் ; ஒரு பழக்கத்தில் விழுந்தவன் .
வசங்கெட்டவன் விருப்பமில்லாதவன் ; நலமில்லாதவன் ; நிலைமைகெட்டவன் ; மனமின்றி வேலைசெய்பவன் ; கட்டினின்று விடுபட்டவன் ; ஒழுங்கீனன் ; நட்பற்றவன் .
வசஞ்செய்தல் வயப்படுத்துதல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் .