வடவைத்தீ முதல் - வண்டிப்பாரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வடவைத்தீ காண்க : வடந்தைத்தீ .
வடாது வடக்கிலுள்ளது ; வடக்கு .
வடாரகம் கயிறு .
வடி தேன் ; கள் ; நீளுகை ; வடித்தெடுக்கை ; கூர்மை ; வாரிமுடிக்கை ; ஆராய்ச்சி ; காண்க : வடிகயிறு ; மாவடு ; கயிறு ; நாய் ; மாம்பிஞ்சின் பிளவு ; காற்று ; உருவம் ; சிறுதடி .
வடிக்கண் வடுவகிர்போலும் கண் .
வடிக்கதிர் நூல்முறுக்குங் கருவி .
வடிகட்டுதல் வடித்தெடுத்தல் ; சாரத்தைத் திரட்டுதல் .
வடிகயிறு குதிரைவாய்க் கயிறு .
வடிகாது தொங்குந் துளைச்செவி .
வடிகால் நீரை வடியவிடுங் கால்வாய் .
வடிசம் தூண்டில் .
வடிசல் நீர் முதலியன வடிதல் ; வடிக்கை ; வடித்த சோறு ; நீளுகை .
வடிசாந்து நற்சாந்து .
வடித்தல் வடியச்செய்தல் ; வடிகட்டுதல் ; பிழிதல் ; தைலமிறக்குதல் ; திருத்தமாகச் செய்தல் ; சாரமான சொல்லால் அமைதல் ; வசமாக்குதல் ; பழக்குதல் ; பயிலுதல் ; சோறுசமைத்தல் ; கூராக்குதல் ; வாரிமுடித்தல் ; தகடாக்குதல் ; நீளமாக்குதல் ; யாழ்நரம்பை உருவுதல் ; அலங்கரித்தல் ; ஆராய்தல் ; ஆராய்ந்தெடுத்தல் ; கிள்ளியெடுத்தல் .
வடிதமிழ் தெளிந்த தமிழ் .
வடிதயிர் கட்டித்தயிர் .
வடிதல் நீர் முதலியன வற்றுதல் ; ஒழுகுதல் ; திருந்துதல் ; தெளிதல் ; அழகுபெறுதல் ; நீளுதல் .
வடிப்பம் வடிவழகு ; செப்பம் ; அழகு ; திறம் .
வடிப்போர் யானை முதலியன பயிற்றுவோர் .
வடிம்பிடுதல் கட்டாயப்படுத்தல் ; தேரை நிறுத்திக் கிளப்புதல் ; தூண்டுதல் ; பழிகூறுதல் .
வடிம்பு விளிம்பு ; கூரைச்சாய்வு ; தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம் ; தாங்குமரம் ; தழும்பு ; பழி .
வடிம்புக்கழி குறுக்குவிட்டம் .
வடிமணி தெளிந்த ஓசையுள்ள மணி .
வடியல் வடிதல் ; ஒன்றிலிருந்து நீக்கிய வடித்த நீர் முதலியன ; சமைக்கப்பட்டது .
வடியிடுதல் வடித்தெடுத்தல் .
வடிவணங்கு அழகிய பெண் .
வடிவம் உருவம் ; உடம்பு ; அழகு ; நிறம் ; ஒளி ; மெய்ச்சொல் .
வடிவவுவமம் உருவத்தை ஒப்பித்துக் கூறும் உவமை .
வடிவாளன் அழகுள்ளவன் .
வடிவிலாக்கூற்று அசரீரிவாக்கு , வானொலி .
வடிவு காண்க : வடிவம் ; அல்குல் ; வடிந்தது ; வடிந்த நீர் .
வடிவெழுத்து திருந்திய கையெழுத்து ; ஒலியின் குறியாக எழுதப்படும் எழுத்து .
வடிவேல் கூரிய வேல் ; முருகக்கடவுள் .
வடு தழும்பு ; மாம்பிஞ்சு ; இளங்காய் ; உடல் மச்சம் ; உளியாற் செதுக்கின உரு ; புண்வாய் ; குற்றம் ; பழி ; கேடு ; கருமணல் ; செம்பு ; வாள் ; வண்டு ; பிரமசாரி ; இளைஞன் ; வைரவன் ; புத்திசாலிப் பையன் .
வடுக்கொள்ளுதல் தழும்புபடுதல் ; புண் முதலியன ஆறத்தொடங்குதல் .
வடுகக்கடவுள் வைரவமூர்த்தி .
வடுகச்சி வடுகப்பெண் .
வடுகர் தெலுங்கர் ; தமிழகத்தில் வாழும் தெலுங்கு இனத்தவர் .
வடுகன் வைரவன் ; பிரமசாரி ; இளைஞன் ; மூடன் ; தெலுங்கநாட்டான் .
வடுகன்றாய் காளி .
வடுகி காளி .
வடுகு தமிழ்நாட்டின் வடவெல்லையிலுள்ள நாடு ; ஆந்திரமாநிலம் ; தெலுங்குமொழி ; தெலுங்கர் சாதி ; மருத யாழ்த்திறத்துள் ஒன்று ; இந்தளராகம் ; மெய்க்கூத்துவகை ; பூணூல் அணிவிக்குஞ் சடங்கு ; இரத்தினக் குற்றவகை .
வடுச்சொல் பழிமொழி .
வடுத்தல் பிஞ்சுவிடுதல் ; வெளிப்படுத்துதல் .
வடுமாங்காய் மாம்பிஞ்சு .
வடுவகிர் மாவடுவின் பிளவு .
வடுவரி வண்டு .
வடை உழுந்தாற் செய்யப்படும் ஒரு பலகாரவகை .
வடையம் பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு ; நெல்லிக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை .
வடையற்றது வீணானது .
வண்களமர் வேளாளர் .
வண்சிறை மதில் .
வண்டத்தனம் குறும்புத்தனம் ; அவையில் கூறத்தகாத சொல் .
வண்டம் குந்தப்படை .
வண்டயம் கழல் ; காண்க : வண்டவாளம் .
வண்டர் அரசனுக்கு நாழிகை யறிவிக்குங் கடிகையார் ; மங்கலப்பாடகர் ; வீரர் .
வண்டல் மகளிர் விளையாட்டுவகை ; மகளிர் கூட்டம் ; விளையாட்டாக இழைத்த சிற்றில் ; நீர் முதலியவற்றி னடியில் தங்கிய பொடிமண் முதலியன ; நீரொதுக்கிவிட்ட மண் ; பருக்கைக் கல் ; பொருக்கு ; நீர்ச்சுழி .
வண்டலடித்தல் வயலுக்கு உரமாக வண்டல் பரப்புதல் ; வயல் மண்மேடிடுதல் .
வண்டலம் சேறு .
வண்டலவர் விளையாட்டு மகளிர் .
வண்டலாயம் விளையாடுந் தோழியர் கூட்டம் .
வண்டலிழைத்தல் மணலால் சிற்றில் இழைத்து விளையாடுதல் .
வண்டவாளம் நிலைமை ; முதல் .
வண்டற்படுகை வண்டலிட்ட ஆற்றோரம் .
வண்டற்பாவை வண்டலாற் செய்த விளையாட்டுப் பாவை .
வண்டன் குள்ளன் ; திண்ணியன் ; தீயோன் ; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன் .
வண்டனான் முனிவன் .
வண்டாலம் குந்தாலி ; ஆயுதவகை ; சூரயுத்தம் .
வண்டானம் நாரைவகை .
வண்டி சகடம் ; வண்டிப்பாரம் ; வயிறு ; அடிமண்டி .
வண்டிக்காரன் வண்டியோட்டுபவன் ; வண்டிக்கு உரியவன் .
வண்டிகட்டுதல் மாட்டை வண்டியில் பூட்டுதல் ; யாத்திரை முதலியன தொடங்குதல் .
வண்டிச்சத்தம் வண்டிவாடகை .
வண்டித்தடம் வண்டிபோகும் வழி .
வண்டிப்பாரம் வண்டியிலேற்றுஞ் சுமை ; தானிய அளவுவகை .