சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வாய்ச்சொல் | வாயினின்று வருஞ்சொல் ; வெறுஞ்சொல் ; துணைச்சொல் . |
வாய்சலித்தல் | பேசி வாய் அயர்தல் . |
வாய்சோர்தல் | வாய் பிதற்றுதல் ; பேசி வாய் அயர்தல் ; வாய் தடுமாறுதல் ; பேசுவதில் பிழைபடுதல் . |
வாய்த்தல் | சித்தித்தல் ; உறுதியாய் நிகழ்தல் ; ஏற்றதாதல் ; சிறத்தல் ; நன்கமைதல் ; செழித்தல் ; மதர்த்தல் ; சேர்தல் ; திரட்டுதல் . |
வாய்த்தலை | வாய்க்காலின் தலைப்பு ; தொடங்குமிடம் . |
வாய்த்தீர்த்தம் | காண்க : வாய் நீர் . |
வாய்த்துடுக்கு | பேச்சிற்காட்டும் ஆத்திரம் ; செருக்கு . |
வாய்தடுமாறுதல் | வாய் பதறுதல் ; பேசுவதிற் பிழைபடுதல் . |
வாய்தல் | காண்க : வாய்த்தல் . |
வாய்தற்படி | கதவின் நிலைப்படி . |
வாய்தா | தவணை ; கெடு ; கெடுவைத் தள்ளிப் போடுகை ; வரி . |
வாய்திறத்தல் | வாயை அகலவிரித்தல் ; மலர்தல் ; புண்கட்டி உடைதல் ; வெள்ளம் கரையை உடைத்தல் ; மலர்த்துதல் ; பேசுதல் . |
வாய்தீட்டுதல் | ஆயுதம் முதலியவற்றின் முனை தீட்டுதல் . |
வாய்ந்துகொள்ளுதல் | வென்று கைப்பற்றுதல் . |
வாய்நாற்றம் | வாயின் மணம் ; வாயிலிருந்து தோன்றுந் தீநாற்றம் . |
வாய்நீர் | உமிழ்நீர் . |
வாய்நீளம் | குறைகூறுந் தன்மை . |
வாய்நெகிழ்தல் | பூ மலர்தல் . |
வாய்நேர்தல் | பேச்சால் உடன்படுதல் ; நேர்த்திக் கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் ; தருவதாக வாக்களித்தல் . |
வாய்ப்பக்காட்டுதல் | விளங்கவுணர்த்துதல் . |
வாய்ப்பட்சி | காக்கை . |
வாய்ப்பட்டி | வாய்க்கு வந்தபடி பேசுவோர் ; கண்டதைத் தின்பவர் . |
வாய்ப்படுதல் | வழிப்படுதல் ; சுவைபடுதல் . |
வாய்ப்பந்தல் | பயனற்ற பேச்சு . |
வாய்ப்பலி | காண்க : வாய்க்கரிசி . |
வாய்ப்பறையறைதல் | பலரும் அறிய வெளியிடுதல் . |
வாய்ப்பாட்டு | வாயினால் பாடும் பாட்டு . |
வாய்ப்பாடம் | ஏடு பாராமற் சொல்லும் பாடம் ; புத்தகமின்றிக் கேள்வியாற் படித்த பாடம் . |
வாய்ப்பிணி | வாயிலுண்டாகும் நோய் . |
வாய்ப்பிறப்பு | வாயிலிருந்துவரும் மொழி . |
வாய்ப்பு | ஆதாயம் ; கைகூடுநிலை ; நேர்பாடு ; நன்கமைந்தது ; பொருத்தம் ; அழகு ; சிறப்பு ; செழிப்பு ; பேறு . |
வாய்ப்புண் | உள் வாயில் தோன்றும் புண் ; நாக்குப் புண் ; வைதலால் உண்டாகும் மனநோவு . |
வாய்ப்புள் | நற்சொல்லாகிய நிமித்தம் . |
வாய்ப்புற்று | வாயிலுண்டாகும் நோய்வகை . |
வாய்ப்புறம் | உதடு . |
வாய்ப்பூச்சு | வாயை நீரால் துடைக்கை ; காண்க : ஆசமனம் ; வார்த்தையால் மழுப்புகை . |
வாய்ப்பூட்டு | தாடையெலும்பின் பொருத்து ; விலங்கின் வாயின்மேல் இடும் கூடு ; பேசாமல் தடுக்கை ; வாயில் சுழியுள்ள மாட்டுக்குற்றவகை ; இலஞ்சம் . |
வாய்ப்பூட்டுச்சட்டம் | பொதுக்கூட்டங்களில் பேசுவதைத் தடுக்கும் சட்டம் . |
வாய்ப்பெய்தல் | வாயிலிட்டுத் தின்னுதல் . |
வாய்ப்பேச்சு | வாயினாற் பேசுகை ; வெறும் பேச்சு . |
வாய்ப்பை | கடன் . |
வாய்ப்பொய் | மெய்ம்மையின்பாற்படும் பொய் . |
வாய்ப்பொன் | கடிவாளத்தின் ஓர் உறுப்பு . |
வாய்பாடு | குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு . |
வாய்பாறுதல் | அலப்புதல் ; பிதற்றுதல் . |
வாய்பிதற்றுதல் | நாக்குழறிப்பேசுதல் . |
வாய்பிளத்தல் | அங்காத்தல் ; திகைத்தல் ; முடியாதென்று கைவிடுதல் ; இறத்தல் . |
வாய்பினற்றுதல் | காண்க : வாய்பிதற்றுதல் . |
வாய்புதைத்தல் | வாய்மூடுதல் . |
வாய்புலற்றுதல் | பலகாற் சொல்லுதல் ; காண்க : வாய்பிதற்றுதல் . |
வாய்பூசுதல் | வாய்கழுவுதல் ; இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சம் கொடுத்தல் ; புகழ்ந்துபேசுதல் . |
வாய்பேசுதல் | தற்பெருமைபடப் பேசுதல் . |
வாய்பொத்துதல் | காண்க : வாய்புதைத்தல் . |
வாய்போக்குதல் | எளிதில் வாக்குக்கொடுத்தல் . |
வாய்மடிதல் | கூர்மழுங்குதல் . |
வாய்மடுத்தல் | வாயினுட் கொள்ளுதல் . |
வாய்மடை | செய்வரம்பில் நீர்பாயும் வழி . |
வாய்மண்போடுதல் | பிழைப்பைக் கெடுத்தல் ; கொடுமைசெய்தல் . |
வாய்மணியம் | வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம் ; செல்வாக்கு . |
வாய்மதம் | மதியாது பேசுகை . |
வாய்மலர்தல் | பேசுதல் . |
வாய்முத்தம் | முத்தம் ; பல் . |
வாய்முத்து | முத்தம் ; பல் . |
வாய்மூடுதல் | வாய்பொத்தல் ; பேச்சு , அழுகை முதலியன நிறுத்துதல் ; குவிதல் . |
வாய்மூப்பன் | பேச்சிற் சிறந்தவன் ; பிறர்வழக்கையெடுத்து வாதாடுவோன் . |
வாய்மூழ்த்தல் | வாய்மூடுதல் . |
வாய்மை | உண்மை ; சொல் ; தவறாச்சொல் ; பௌத்தசமய உண்மைகள் ; வலி . |
வாய்மொழி | சொல் ; உண்மையான மொழி ; வாயினாற் சொல்வது ; வேதம் ; காண்க : திருவாய்மொழி . |
வாய்மொழிதல் | கூறுதல் ; மந்திரத்தால் ஆற்றலுண்டாக்கல் . |
வாய்வடம் | குதிரையின் வாய்க்கயிறு . |
வாய்வது | உண்மை ; கிட்டுவது . |
வாய்வலம் | சொல்வன்மை . |
வாய்வலி | காண்க : வாய்வலம் ; அம்பு முதலிய ஆயுதங்களின் முனை உறுதி . |
வாய்வழங்குதல் | உண்ணுதல் ; பேசுதல் . |
வாய்வாயெனல் | அச்சுறுத்தற்குறிப்பு ; அளவுக்கு மிஞ்சிப் பேசுதல் . |
![]() |
![]() |
![]() |