சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வைதேகி | காண்க : வைதேவி ; திப்பிலி . |
வைதேயம் | அறிவின்மை . |
வைதேயன் | அறிவற்றவன் . |
வைதேவி | சீதாதேவி . |
வைந்தவம் | குதிரை ; சுத்தமாயை . |
வைந்நுதி | கூரியநுனி . |
வைப்பகம் | வங்கி ; நகை முதலானவற்றைக் காப்பாக வைக்குமிடம் . |
வைப்பாட்டி | கூத்தியாள் . |
வைப்பிடம் | பண்டம் முதலியன வைக்குமிடம் . |
வைப்பிருக்கை | பண்டசாலை . |
வைப்பு | வைக்கை ; பாதுகாப்பு நிதி ; புதையல் ; இடம் ; நிலப்பகுதி ; ஊர் ; உலகம் ; செயற்கையானது ; செயற்கைச் சரக்கு ; வைப்பாட்டி ; கலிப்பாவகையின் இறுதியுறுப்பு . |
வைப்புக்கட்டு | பொய்க்கதை . |
வைப்புச்சரக்கு | செயற்கை மருந்து . |
வைப்புச்செப்பு | பண்டங்கள் வைக்குமிடம் ; நகை , பாண்டம் முதலிய உடைமைகள் . |
வைப்புமுத்து | செயற்கை முத்து . |
வைப்புவைத்தல் | சூனியம் வைத்தல் ; வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல் . |
வைப்புழி | பொருள் முதலியன சேமித்து வைக்கும் இடம் . |
வைபவம் | பெருமை ; பெரியோர் வரலாறு . |
வைபோகம் | மகிழ்ச்சி ; அறிவுக்கூர்மை ; சிற்றின்பக் களிப்பு ; சீர்மை ; வயணம் . |
வைபோகி | விவேகி . |
வைமாத்திரேயன் | சக்களத்தி மகன் . |
வைமானிகர் | விமானத்திற் செல்லும் தேவர் . |
வையகம் | மண்ணுலகம் ; விலங்கு இழுக்கும் வண்டி ; கூடாரவண்டி ; சிவிகை ; ஊர்தி ; உரோகிணிநாள் . |
வையம் | பூமி ; குதிரை இழுக்கும் வண்டி ; தேர் ; ஊர்தி ; கூடாரவண்டி ; சிவிகை ; எருது ; உரோகிணிநாள் ; விளக்கு ; யாழ் . |
வையமகள் | நிலமகள் . |
வையாகரணன் | இலக்கணம்வல்லவன . |
வையாபுரி | பழனிமலை . |
வையாளி | குதிரை செல்லும் வழி ; குதிரையேற்றம் . |
வையாளிவீதி | குதிரை செல்லும் வீதி . |
வையை | மதுரையில் உள்ள ஆறு . |
வையைத்துறைவன் | பாண்டியன் . |
வைரக்கடுக்கன் | வயிரமணியிட்டமைந்த காதணி . |
வைரக்கல் | வயிரமணி . |
வைரம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று ; கடினமானது ; மரக்காழ் ; செற்றம் ; பகை ; வீரத்தின் தன்மை ; வாச்சியப்பொது . |
வைரவனூர்தி | நாய் . |
வைராக்கியஞ்சொல்லுதல் | தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துக்கொள்ளுதல் . |
வைராக்கியம் | விடாப்பிடி ; வெறுப்பு ; உலகப் பற்றின்மை ; மதவெறி ; பகை . |
வைராகம் | பற்றின்மை . |
வைராகி | மனவுறுதியுள்ளவன் ; துறவி . |
வைராவி | மனவுறுதியுள்ளவன் ; துறவி . |
வைரி | பகைவன் ; மனவுறுதியுள்ளவன் . |
வைரியம் | வீரியம் ; வெறுப்பு ; பகை . |
வைரியர் | கூத்தர் ; பாணர் . |
வைரோசனன் | விரோசனன் மகனாகிய மாவலி ; கதிரவன் ; வாலி . |
வைலட்சணம் | அழகற்றது . |
வைவு | ஏச்சு ; இகழ்வு ; சாபம் . |
வைனதேயன் | கருடன் . |
வைனன் | கருடன் . |
![]() |
![]() |