இடாரேற்றுதல் முதல் - இடுகுறிப்பெயர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இடியாப்பம் சிற்றுண்டிவகை .
இடியம்பு காண்க : இடிகொம்பு .
இடியல் பிட்டு .
இடியேறு பேரிடி .
இடிவு அழிவு ; இடிந்து விழுகை .
இடுக்கடி துன்பம் .
இடுக்கண் மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம்பட வரும் இரக்கம் ; துன்பம் ; வறுமை .
இடுக்கணழியாமை துன்பக் காலத்து மனங்கலங்காமை .
இடுக்கணி இடுக்கான இடம் .
இடுக்கம் ஒடுக்கம் ; துன்பம் ; நெருக்கம் ; வறுமை .
இடுக்கல் சந்து .
இடுக்காஞ்சட்டி விளக்குத் தகழி .
இடுக்கி குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு .
இடுக்கிச்சட்டம் கம்பிச்சட்டம் .
இடுக்கிடை நெருக்கம் .
இடுக்கு முடுக்கு : மூலை ; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம் ; கவ்வும் உறுப்பு ; சங்கடம் ; இவறல் .
இடுக்குத்தடி கள்ளூறும்படி பாளையை நெருக்கிப் பிடிக்கவைக்கும் இரட்டைத் தடி .
இடுக்குத் திருத்துழாய் திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி .
இடுக்குதல் கவ்வுதல் ; அணைத்தல் ; நெருக்குதல் .
இடுக்குப்பனை கள்ளும் பதநீரும் உண்டாக்கும் பனை .
இடுக்குப்பிள்ளை கைக்குழந்தை .
இடுக்குப்பொட்டணி கக்கப்பாளம் , கக்கத்தில் இடுக்கிச் செல்லத்தக்க பொருள் .
இடுக்குமரம் கடவை மரம் , வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம் ; செக்குவகை .
இடுக்குமுடுக்கு மூலைமுடுக்கு ; முட்டுச்சந்து ; சங்கடம் .
இடுக்குவழி சந்து வழி , மிகக் குறுகலான பாதை .
இடுக்குவாசல் சிறு நுழைவாசல் , திட்டிவாசல் .
இடுக்குவார் கைப்பிள்ளை காண்க : எடுப்பார் கைப்பிள்ளை .
இடுகடை பிச்சையிடும் வீட்டுவாயில் .
இடுகளி அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம் .
இடுகறல் விறகு .
இடுகாடு பிணம் புதைக்கும் இடம் ; சுடுகாடு ,
இடுகால் பீர்க்கு .
இடுகிடை சிற்றிடை ; சிறுவழி .
இடுகு ஒடுக்கம் .
இடுகுதல் ஒடுங்குதல் ; சிறுகுதல் ; சுருங்குதல் .
இடுகுறி இடுகுறிப்பெயர் ; பெற்றோர் இடும் பெயர் ; முற்காலத்தில் நெல்லைச் சேமித்துவைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் .
இடுகுறிப்பெயர் காரணம் பற்றாது வழங்கி வரும் பெயர் .
இடாரேற்றுதல் எலிப்பொறியைத் தயார் செய்து வைத்தல் .
இடால் கத்தி .
இடாவு காணக : இடைகலை .
இடாவேணி அளவிடப்படாத எல்லை .
இடி தாக்குகை ; மா ; சிற்றுண்டி ; பொடி ; இடியேறு ; பேரொலி கழறுஞ்சொல் ; குத்து நோவு ; அக்கினி ; உறுதிச்சொல் ; ஆட்டுக்கடா .
இடிக்கடை காண்க : இடுக்கடி .
இடிக்கொடியோன் இடியைக் கொடியாகவுடைய இந்திரன் .
இடிக்கொள்ளு காட்டுக்கொள் .
இடிகம் காண்க : பெருமருந்து .
இடிகரை ஆறு முதலியவற்றின் அழிந்த கரை .
இடிகொம்பு கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய் .
இடிச்சக்கை பலாப்பிஞ்சு .
இடிச்சொல் உறுதிச்சொல் .
இடிசல் நொறுங்கின தானியம் ; அழிவு ; நொய்யரிசி .
இடிசாந்து இடித்துத் துவைத்த சுண்ணாம்பு .
இடிசாபம் கெடுகாலம் ; நிந்தை .
இடிசாமம் கெடுகாலம் ; நிந்தை .
இடிஞ்சில் காண்க : இடுக்காஞ்சட்டி .
இடித்தடு பிட்டு .
இடித்தல் முழங்குதல் ; இடியிடித்தல் ; நோதல் ; தாக்கிப்படுதல் ; மோதுதல் ; கோபித்தல் ; தூளாக்குதல் ; தகர்த்தல் ; நசுக்குதல் ; தாக்குதல் ; முட்டுதல் ; கழறிச் சொல்லுதல் ; கொல்லுதல் ; தோண்டுதல் ; கெடுத்தல் .
இடித்துக்கூறல் உறுதிச் சொல்லுரைத்தல் .
இடித்துரை கழறிக் கூறுஞ்சொல் , உறுதிச் சொல் .
இடிதல் தகர்தல் ; உடைதல் ; சரிதல் ; கரையழிதல் ; திகைத்தல் ; முனை முரிதல் ; வருந்துதல் .
இடிதலைநோய் நோய்வகை .
இடிதாங்கி கட்டடத்தின்மீது இடி விழாதபடி காக்கவைக்கும் காந்தக்கம்பி .
இடிப்பணி குறிப்புரை .
இடிப்பு இடி ; ஒலி ; வீரமுழக்கம் .
இடிபடுதல் நெருக்கப்படுதல் ; தாக்கப்படுதல் ; நொறுங்குதல் ; வெடிபடுதல் ; துன்பப்படுதல் .
இடிபூரா வெள்ளைச் சருக்கரை .
இடிம்பம் கைக்குழந்தை ; பெருந்துன்பம் ; மண்ணீரல் ; பறவை முட்டை ; ஆமணக்கு .
இடிம்பு அவமதிப்பு ; இழிவு .
இடிமரம் உலக்கை ; அவல் இடிக்கும் ஏற்றவுலக்கை .
இடிமருந்து சூரணமருந்து .
இடிமாந்தம் பொய்யான குற்றச்சாட்டு .
இடிமீன் மீன்வகை .
இடிமுழக்கம் இடியொலி .
இடிமேலிடி மாட்டுக்குற்றம் ; துன்பத்திற்கு மேல் துன்பம் .
இடியப்பம் சிற்றுண்டிவகை .