முதல் - அக்கிராசனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) .
அஆ விட்டிசைச்சொல் ; வியப்புக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு .
அஃகம் தானியம் ; விலைப்பொருள் ; ஊறுநீர் ; முறைமை .
அஃகரம் வெள்ளெருக்கு .
அஃகல் காண்க : அஃகுதல் .
அஃகாமை குறையாமை ; சுருங்காமை .
அஃகான் 'அ ' என்னும் முதல் எழுத்து ( அ - கான் , கான் எழுத்துச்சாரியை ) .
அஃகு ஊறுநீர் .
அஃகுதல் குறைதல் ; சுருங்குதல் ; நுணுகுதல் ; குவிதல் ; நெருங்குதல் ; வற்றுதல் ; கழிதல் .
அஃகுல்லி உக்காரி என்னும் சிற்றுண்டி ; பிட்டு .
அஃகுள் காண்க : அக்குள் .
அஃகேனம் ஆய்த எழுத்து , மூன்று புள்ளி ( ஃ ) வடிவினது , முள்ளில்லாப் பன்றி .
அஃதான்று ( அஃது - அன்று ) அதுவுமன்றி .
அஃது அஃறிணை ஒருமைச்சுட்டு ; அது ; அப்படி .
அஃதை அகதி , கதியிலி , திக்கற்றவர் , ஆதரவில்லாதவர் .
அஃபோதம் நிலாமுகிப்புள் , சகோரம் ; புறா .
அஃறிணை ( அல் - திணை ) உயர்திணையல்லாதவை ; பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் ; மக்கள் , தேவர் , நரகர் அல்லாத மற்றப் பொருள்கள் .
அக்கக்காய் துண்டுதுண்டாய் .
அக்கச்சி அக்காள் , தமக்கை .
அக்கசாலை கம்மியர் தொழிற்சாலை , உலோகவேலை செய்யும் களம் , அணிகலன் ஆக்குமிடம் ; கம்பட்டசாலை , நாணயச்சாலை .
அக்கசாலையர் கம்மியர் , தட்டார் .
அக்கட அவ்விடம் .
அக்கடா ஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல் ; எதுபற்றியும் கவலையில்லாமை ; வியப்புக்குறிப்பு .
அக்கடி அலைவு ; பயணத்தொல்லை .
அக்கணா தான்றிமரம் .
அக்கதம் காண்க : அட்சதை .
அக்கதை காண்க : அட்சதை .
அக்கந்து தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர் .
அக்கப்பறை அலைந்து திரிகை .
அக்கப்பாடு நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு .
அக்கப்போர் அலப்புதல் ; வம்புப்பேச்சு ; கலகம் .
அக்கம் தானியம் ; பொன் ; கண் ; உருத்திராக்கம் ; பாம்பு ; கயிறு ; பக்கம் .
அக்கம்பக்கம் அண்டைஅயல் ; முன்னும் பின்னும் ; அண்மைச் சூழல் .
அக்கமணி உருத்திராக்கமணி .
அக்கமாலை உருத்திராக்கமாலை , செபமாலை .
அக்கவடம் உருத்திராக்கமாலை , செபமாலை .
அக்கரகாரம் மருந்துவேர் , மருந்துப்பூண்டு .
அக்கராகாரம் மருந்துவேர் , மருந்துப்பூண்டு .
அக்கரம் எழுத்து ; அழியாதது ; மாமரம் ; வெள்ளெருக்கு ; வாய்நோய் .
அக்கரன் அழிவில்லாதவன் ; எங்கும் நிறை பொருள் , கடவுள் .
அக்கரை எதிர்க்கரை , நீர்நிலையின் மறுகரை .
அக்கரைச்சீமை கடல் கடந்த நாடு .
அக்கரைப்பச்சை பொய்த்தோற்றம் .
அக்களிப்பு அகக்களிப்பு , மனமகிழ்ச்சி .
அக்கறை ஈடுபாடு ; கருத்து , கவனம் .
அக்கன் தமக்கை ; கருடன் ; பிறவிக்குருடன் ; நாய் .
அக்கா தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி .
அக்காள் தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி .
அக்காணி பருவுடல் .
அக்காத்தான் தான்றிமரம் .
அக்காரடலை சருக்கரைப் பொங்கல்வகை .
அக்காரவடிசில் சருக்கரைப் பொங்கல்வகை .
அக்காரம் சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் .
அக்காரை ஒருவகைச் சிற்றுண்டி .
அக்கானி பதநீர் .
அக்கி அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் .
அக்கிக்கல் மாணிக்கத்துள் ஒன்று ; படிகவகையுள் ஒன்று .
அக்கிச்சூர் கண்நோய் .
அக்கிப்படலம் கண்நோய் .
அக்கியாதம் காண்க : அஞ்ஞாதம் .
அக்கியாதவாசம் காண்க : அஞ்ஞாதவாசம் .
அக்கியானம் காண்க : அஞ்ஞானம் .
அக்கியெழுதுதல் அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல் .
அக்கிரகண்ணியன் அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன் .
அக்கிரகாரம் பார்ப்பனர் கூடிவாழும் இடம் .
அக்கிரசந்தானி உயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு .
அக்கிரசம்பாவனை முதல் மரியாதை ; முதல் வரவேற்பு .
அக்கிரதாம்பூலம் முதல் தாம்பூலம் .
அக்கிரபூசனை முதலில செய்யும் வழிபாடு .
அக்கிரபூசை முதலில செய்யும் வழிபாடு .
அக்கிரசன் முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் .
அக்கிரசன்மன் முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் .
அக்கிரம் நுனி ; உச்சி ; முதன்மை ; தொடக்கம் .
அக்கிரமம் முறையின்மை , வரம்புமீறிய செய்கை ; ஒழுங்கின்மை ; கொடுமை .
அக்கிராசனம் அவைத்தலைமை .