கை முதல் - கைச்சுத்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கைகாட்டுதல் சைகை காட்டுதல் ; கையாற் குறிப்புக் காட்டல் ; சிறிது அறம் செய்தல் ; படையல் செய்தல் ; கொடியசைத்து அடையாளங் காட்டுதல் ; இலஞ்சம் கொடுத்தல் .
கைகாணுதல் அனுபவத்தில் அறிதல் ; அத்தாட்சிப்படுதல் ; நிறைவேறுதல் .
கைகாய்த்துதல் எரியச்செய்தல் .
கைகாரன் செல்வன் ; திறமையுடையவன் ; இராசியுள்ளவன் .
கைகாவல் சமயத்தில் உதவுவது .
கைகுவித்தல் கொம்மைகொட்டுதல் ; கும்பிடல் ; வணங்கல் .
கைகூசுதல் அச்சத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல் ; கடும்பற்றுள்ளம் கொள்ளுதல் .
கைகூடுதல் சித்தியாதல் ; கிட்டுதல் .
கைகூப்புதல் கைகூப்பி வணங்குதல் .
கைகொட்டுதல் கொம்மைகொட்டுதல் ; கைகளைத் தட்டுதல் .
கைகொடுத்தல் உதவிசெய்தல் ; உடல்வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் ; கைகுலுக்குதல் ; கையடித்து உறுதிகூறுதல் .
கைகோத்தல் தோளோடு தோள்பின்னுதல் ; கைபிணைதல் ; நட்புச்செய்தல் ; சண்டை பிடித்தல் .
கைகோத்தாடல் குரவையாடல் .
கைகோலுதல் முயலுதல் ; தொடங்குதல் ; சங்கற்பித்தல் ; கைகூப்புதல் .
கைகோள் தலைவன் தலைவியரின் களவு கற்பு ஒழுக்கங்கள் .
கைங்கரன் அடிமை .
கைங்கரியம் பணிவடை , தொண்டு .
கைச்சட்டம் கூரையின் குறுக்குச்சட்டம் .
கைச்சட்டை அரைச்சட்டை ; கைக்கவசம் .
கைச்சரக்கு கற்பனையாகக் கூறுஞ்சொல் .
கைச்சரசம் இன்பவிளையாட்டு ; கைச்சேட்டை .
கைச்சரி மகளிர் கையணிவகை .
கைச்சவளம் கையீட்டி .
கைச்சாடு காண்க : கைக்கவசம் .
கைச்சாத்து கையெழுத்து ; பொருட்பட்டி ; ரசீது .
கைச்சி கமுகு .
கைச்சிமிட்டு இரகசியமாகக் கைகாட்டுங் குறிப்பு ; கைலாவகம் .
கைச்சிறை கைவசமானது .
கைச்சீட்டு கையால் எழுதிய குறிப்புச்சீட்டு .
கைச்சீப்பு தோட்பட்டை எலும்பு .
கைச்சுத்தம் திருடாமை ; இலஞ்சம் வாங்காமை ; திருத்தமான கைத்தொழில் .
கை ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஐ) ; கரம் ; யானைத்துதிக்கை ; கதிர் ; செங்கல் முதலியவற்றை எண்ணும் ஒரளவு ; அபிநயக்கை ; பக்கம் ; கட்சி ; கைமரம் ; இரயில் கைகாட்டி ; சட்டையின் கை ; கைப்பிடி ; விசிறிக்காம்பு ; சிறகு ; படையுறுப்பு ; சேனை ; இடம் ; கைப்பொருள் ; செய்யத்தக்கது ; ஒப்பனை ; ஆற்றல் ; கையளவு ; ஆள் ; சிறுமை ; உலகவொழுக்கம் ; ஒழுங்கு ; தங்கை ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு தமிழ் முன்னொட்டு ; குற்றம் .
கைக்கட்டி கைக்கவசம் ; அக்குள் புண் .
கைக்கட்டு கைகளுக்குக் கட்டுப்போடுதல் ; மகளிர் கையணிவகை .
கைக்கடன் கைமாற்றுக்கடன் ; கடப்பாடு .
கைக்கடனாற்றல் உதவிபுரிதலாகிய வேளாண்மாந்தர் இயல்பு .
கைக்கணிசம் கைமதிப்பு .
கைக்கவசம் கையுறை .
கைக்காணி காணிக்கை .
கைக்காப்பு கையிலணியும் காப்பு .
கைக்காறை ஒருவகைக் கையணி .
கைக்கிளவன் காண்க : கைக்கோளன் .
கைக்கிளை ஒருதலைக் காமம் ; ஐந்து விருத்தச் செய்யுளால் ஒருதலைக் காமத்தைப்பற்றிக் கூறும் நூல்வகை ; ஏழிசையில் மூன்றாவதாகிய காந்தார சுரம் ; மருட்பா .
கைக்கிளைத் திணை கைக்கிளையைப்பற்றிக் கூறும் திணை .
கைக்கீறல் தற்குறிக்கீற்று ; கையெழுத்தின் குறிப்பு .
கைக்குட்டை கையிற் பிடிக்கும் சிறு துணித்துண்டு .
கைக்குடை சிறுகுடை .
கைக்குத்து கைமுட்டியால் தாக்குகை .
கைக்குதவுதல் சமயத்திற்கு உதவுதல் .
கைக்குவருதல் கையிற் கிட்டுதல் .
கைக்குழந்தை இடுக்குப்பிள்ளை , சிறு குழந்தை .
கைக்குழவி சிறுகுழந்தை ; சிறிய அம்மிக்குழவி .
கைக்குற்றம் கைத்தவறு ; சிறுபிழை .
கைக்குறி வாழ்வின் போக்கினைக் குறிப்பாகக் கருதும் கைரேகை ; கையளவு .
கைக்குறிப்பு நினைவுக்குறிப்பு .
கைக்கூட்டம் அணிவகுப்புக் கூட்டம் .
கைக்கூட்டன் காவற்காரன் .
கைக்கூலி நாட்கூலி ; இலஞ்சம் ; பரிதானம் ; கையிலே கொடுக்கும் விலைப்பொருள் ; மணமகனுக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் தொகை .
கைக்கொள்ளுதல் கையில் எடுத்துக்கொள்ளுதல் ; பேணிக்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அங்கீகரித்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; வளைந்துகொள்ளுதல் .
கைக்கொளவன் காண்க : கைக்கோளன் .
கைக்கோல் ஊன்றுகோல் ; பற்றுக்கொடிறு .
கைக்கோல் இளையர் கையில் தண்டம் பிடித்துக் காவல்தொழில் புரிவோர் .
கைக்கோளப்படை சோழர் படையிலிருந்த காலாட்படையில் ஒரு பிரிவு , காண்க : வேளைக்காரர் .
கைக்கோளன் செங்குந்தன் , நெசவுத்தொழில் செய்யும் ஒரு சாதியான் .
கைகட்டிநிற்றல் கைகளைக் கட்டிக்கொண்டு வணங்கி நிற்றல் .
கைகட்டுதல் கையை மடக்கிக்கொண்டு வணக்கங் காட்டுதல் .
கைகடத்தல் வசப்படாமல் மீறுதல் ; கையை விட்டுப் போதல் ; கைக்கு எட்டாமற்போதல் , நீங்கல் .
கைகண்ட அனுபவசித்தமான .
கைகண்டயோகம் அனுபவசித்தமான மருந்து .
கைகயன் கேகய நாட்டரசன் ; கேகய நாட்டைச் சேர்ந்தவன் .
கைகரத்தல் ஒளித்தல் .
கைகலத்தல் நெருங்கிப் போரிடுதல் ; கூடுதல் .
கைகழிதல் எல்லை கடத்தல் .
கைகழுவுதல் விட்டுவிடுதல் ; பொறுப்பை நீக்கிக் கொள்ளுதல் ; கையலம்புதல் .
கைகாட்டு கைச்சைகை .