கொ முதல் - கொட்டணம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கொட்டடி சமையல் அறை ; மாட்டுக்கொட்டில் ; சிறைச்சாலை அறை ; சேலைவகை .
கொட்டணக்காரி கூலிக்கு நெற்குற்றுபவள் .
கொட்டணம் நெற்குற்றுகை ; பஞ்சு கொட்டுகை .
கொக்கைச்சால் உழவுபடாத தரை .
கொக்கோவெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கொங்கணம் ஒரு நாடு ; ஒரு மொழி .
கொங்கணர் கொங்கண நாட்டார் ; பண்டைத் தமிழ்ச்சித்தருள் ஒருவர் .
கொங்கணி கொங்குநாட்டான் ; மழையைத் தாங்க உடலில் கவிக்கும் சம்பங்கூடை .
கொங்கரி ஏல அரிசி .
கொங்கன் கொங்கநாட்டான் ; சேரன் .
கொங்காணி காண்க : கொங்கணி .
கொங்காரம் குங்குமமரம் .
கொங்காளன் ஒரு குதிரைவகை .
கொங்கு கோயமுத்தூர் , சேலம் , நீலகிரி , தருமபுரி , பெரியார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் கருநாடக மாநிலத்தின் ஒரு பகுதியும் இணைந்த ஒரு பழந்தமிழ்நாட்டுப் பகுதி ; பூந்தாது ; மணம் ; தேன் ; கள் ; கருஞ் சுரைக்கொடி ; புறத்தோல் .
கொங்கை முலை ; மரக்கணு ; கம்புத் தானியத்தின் உமி .
கொச்சகக்கயிறு தெங்கின் கதம்பை நாராற் செய்யப்படுங் கயிறு .
கொச்சகக்கலிப்பா தரவு , தரவிணை , சிஃறாழிசை , பஃறாழிசை , மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை .
கொச்சகம் கொச்சகக்கலிப்பா ; ஆடையுள் ஒரு வழிக் கொய்தடக்கிக் கட்டுவது ; அம்போதரங்க உறுப்புகளுள் ஒன்று ; இழிவு .
கொச்சம் காண்க : கொச்சகக்கயிறு .
கொச்சன் சிறுபையன் .
கொச்சி ஓர் ஊர் ; சேரநாட்டிலுள்ள ஒரு நகரம் ; விளாம்பழத்தின் உள்ளீடு ; ஊசிமிளகாய் ; நெருப்பு ; இளங்கொட்டாங்கச்சி .
கொச்சிக்குழந்தை வைப்பரிதாரம் .
கொச்சிமிளகாய் ஊசிமிளகாய் .
கொச்சு குஞ்சம் ; கத்தரிக்காய் முதலிய காய்கறிகள் சேர்ந்த குழம்புவகை ; சிறிய .
கொச்சை இழிவு ; இழிந்தவன் ; சீகாழி ; திருந்தாத சொல் ; ஆடு ; வெள்ளாடு ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் .
கொச்சைச்சொல் திருந்தாப் பேச்சு ; இழிசொல் .
கொச்சைநாற்றம் ஆட்டுப்பால் நாற்றம் ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் .
கொச்சையர் இடையர் ; இளைஞர் .
கொச்சைவயம் சீகாழி என்னும் ஊர் .
கொசமசக்கு குழப்பம் ; செயற்சிக்கல் .
கொசவம் கொய்சகம் , ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை .
கொசுவம் கொய்சகம் , ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை .
கொசிகம் ஆடை .
கொசு சிறுகொதுகு ; பெருங்கொதுகு ; கச்சம் .
கொசுகு சிறுகொதுகு ; பெருங்கொதுகு ;
கொசுத்தேன் சிறு கொசு இனங்கள் சேர்த்து வைக்குந்தேன் .
கொசுமூட்டம் கொசுக்களைப் போக்குவதற்கு மூட்டும் புகை .
கொசுவுதல் ஆடையைக் கொய்து அடுக்குதல் .
கொசுறு பிசுக்கு , கொசுர் .
கொஞ்சங்கொஞ்சமாய் சிறிதுசிறிதாய் .
கொஞ்சத்தனம் எளிமை .
கொஞ்சநஞ்சம் சிறிதளவு .
கொஞ்சப்படுத்துதல் இழிவுபடுத்துதல் ;
கொஞ்சப்பேர் சிலர் ; இகழ் .
கொஞ்சம் சிறிது .
கொஞ்சல் மழலைச்சொல் ; சரசப்பேச்சு ; செல்லமாகப் பேசுதல் .
கொஞ்சன் அற்பன் .
கொஞ்சி காட்டுக்கொஞ்சி , சீமைக்கொஞ்சி ; பூவைமரம் .
கொஞ்சுதல் மழலை பேசுதல் ; இன்பமாய்ப் பேசுதல் ; செல்லங்கொஞ்சுதல் ; இனிதாய் ஒலித்தல் ; முத்தமிடல் .
கொஞ்சுநடை மெதுவான நடை .
கொக்கைக்கல் ஆட்டுக்காற்கல் .
கொட்குதல் சுழலுதல் ; சூழவருதல் ; திரிதல் ; வெளிப்படுதல் .
கொட்டகம் காண்க : கொட்டகை .
கொட்டகாரம் பண்டம் வைக்கும் அறை .
கொட்டகை தொழுவம் , மாட்டுக்கொட்டில் , பந்தல்வகை , சிற்றில் .
கொட்டங்காய் தேங்காய் .
கொ ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஒ) .
கொக்கட்டி குறுகி வளைந்த பனங்கிழங்கு .
கொக்கரி முழக்கம் ; வாத்தியவகை .
கொக்கரித்தல் ஆரவாரித்தல் ; கோழி முதலியன கூவுதல் .
கொக்கரை வளைவு ; வைக்கோல் எடுக்கும் கருவி ; வலம்புரிச்சங்கு ; வாத்தியவகை ; வில் ; வலை ; பரம்பு ; தாளம் ; பனை ; தெங்கு முதலியவற்றின் இளமடல் .
கொக்கறை பனை , தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல் .
கொக்காட்டல் சீராட்டுவகை .
கொக்காம்பாளை ஒரு செடிவகை .
கொக்கான் ஏழாங்காய் விளையாட்டுவகை .
கொக்கி கொளுவி ; துறட்டிநுனியிற் செருகும் இருப்புக்கருவி .
கொக்கிப்பூட்டு அணியிலுள்ள பூட்டு .
கொக்கில் கொக்கி .
கொக்கிறகு காண்க : கொக்குமந்தாரை .
கொக்கிறகுமந்தாரை காண்க : கொக்குமந்தாரை .
கொக்கு ஒரு பறவைவகை ; மூலநாள் ; மாமரம் ; செந்நாய் ; குதிரை .
கொக்குக்கல் காண்க : சிலமான்கல் , மாந்தளிர்க்கல் .
கொக்குமந்தாரை வெள்ளைமந்தாரை ; ஒரு பூமரம் ; காட்டாத்தி மரம் ; புடைவைவகை .
கொக்குவாய் கொக்கி , அணிகலனிலுள்ள கொக்கி .
கொக்கை கொக்கி .