கோ முதல் - கோட்சொல்லி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோகுகட்டுதல் காண்க : கோகுதட்டுதல் .
கோகுத்தம் மல்லிகை .
கோகுதட்டுதுல் தோள்தட்டி ஆரவாரஞ் செய்தல் .
கோகுலம் கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி ; குயில் ; குரங்கு ; துளை ; கோயில் ; கொட்டில் ; பசுக்கூட்டம் .
கோகோவேனல் பேரொலிசெய்தற் குறிப்பு .
கோங்கந்தட்டம் கோங்கம்பூ .
கோங்கம் நெல்லிமரம் ; ஒரு மரவகை .
கோங்கலர் முற்காலத்தில் வழங்கிய ஒரு துகில் வகை .
கோங்கிலவு ஒரு மரவகை .
கோங்கு கோங்குவகை ; நீர்க்கோங்கு ; முள்ளிலவு ; மரவகை .
கோசக்கம் குழப்பம் .
கோசகாரம் பட்டுப்பூச்சி .
கோசங்கம் வைகறை .
கோசணை பேரொலி .
கோசம் முட்டை ; உறை ; கவசம் ; ஐந்து கோசம் ; மதிலுறுப்பு ; ஆண்குறி ; கருப்பை ; கருவூலம் ; கருவூல அறை ; அகரமுதலி முதலிய புத்தகம் ; பட்டா ; அபிநயத்துக்குரிய அலிக்கை வகை ; தொகுதி ; சாதிக்காய் ; வீதி ; அடங்கல் கணக்கு .
கோசம்பி கௌசாம்பி என்னும் நகரம் .
கோசமதம் ஆண்யானையின் குறியிலிருந்து வரும் மதநீர் .
கோசமம் பீர்க்கங்கொடி .
கோசமாற்றுதல் பட்டா முதலியவற்றிற் பேர் மாற்றுதல் .
கோசர் பழைய மறக்கடியினருள் ஒருசாரார் .
கோசரபலம் சன்ம ராசியிலிருந்து தற்காலத்தில் கோள்கள் இருக்கும் நிலையின் பலன் .
கோசரம் ஐம்பொறி , மனம் இவற்றுக்கு ஆதாரமானது ; பொறியுணர்வு ; ஊர் ; குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை ; கோசார பலன் ; கோத்திரம் ; பூந்தாது ; மகிழமரம் .
கோசரித்தல் அறிவுக்குப் புலனாதல் .
கோசலம் பசுமூத்திரம் ; கோசலநாடு ; பதினெண் மொழியுள் ஒன்று .
கோசலை கோசலைநாடு ; இராமனின் தாய் .
கோசவதி காண்க : கோசமம் .
கோசன் சீர்பந்த பாடாணம் .
கோசனை கோரோசனை ; பேரொலி .
கோசா அலி ; அன்னிய ஆடவர் காணாதபடி திரையிட்டு வாழும் பெண்கள் .
கோசாங்கம் நாணற்புல் .
கோசாரம் குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை .
கோசாரி காண்க : கோசமம் .
கோசாலை ஓரங்கொய்து சுருக்கப்பட்ட ஆடை ; பசுக்கொட்டில் .
கோசாவித்திரி பசுவைத் துதிக்கும் மந்திரம் .
கோசிகம் பட்டாடை ; ஒரு பண்வகை ; சாமவேதம் ; கூகை .
கோசிகன் குசிகர் மரபில் வந்தவனான விசுவாமித்திரன் .
கோசிகை பட்டுச்சீலை .
கோசிலேபிடித்துவருதல் காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் .
கோசிலேவருதல் காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் .
கோசு கூப்பிடு ; தொலைவு ; வீதி ; தோணிப் பாயின் முன்புறக் கயிறு ; தடவை ; தோல்வி ; செயல் ; முட்டைக்கோசு .
கோசப்பாய் கப்பலின் பின்புறப் பாய் .
கோசுபோதல் தாழ்ச்சியாதல் ; தோல்வியுறுதல் .
கோசுமந்தில் படகின் பின்பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை .
கோட்காரன் கோட்சொல்லுவோன் .
கோட்கூறு இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை ; கிரகக்கோளாறு .
கோட்சொல்லி குறளை சொல்லுவோன் .
கோகு புயம் ; கபடம் ; அடைவுகேடு ; கழுதை .
கோ ஒர் உயிர்மெய்யெழுத்து (க்+ஓ) ; இறைவன் ; பேரரசன் ; அரசன் ; தந்தை ; தலைமை ; மலை ; குயவன் ; பசு ; எருது ; தேவலோகம் ; வானம் ; பூமி ; திசை ; கதிர் ; சூரியன் ; சந்திரன் ; வச்சிரப்படை ; அம்பு ; கண் ; சொல் ; மேன்மை ; நீர் ; இரசம் ; இலந்தைமரம் ; இரங்கற்குறிப்பு .
கோக்கதவு பெரிய கதவு
கோக்கலம் வெண்கலப் பாத்திரம் .
கோக்காமரம் கடலிற் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று ; தூக்குமரம் .
கோக்காலி பாத்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் சடடம் ; நெட்டையானவள் ; போரிலிருந்து வைக்கோலைத் கோத்தெடுக்கும் கருவி .
கோக்குஞ்சம் அம்பறாத் தூணி .
கோகடம் முயல்வகை .
கோகண்டம் நெருஞ்சிற்பூண்டு .
கோகத்தி பசுக்கொலையாகிய பாவம் .
கோகம் சக்கரவாகப்புள் ; செந்நாய் ; தவளை ; உலர்ந்த பூ .
கோகயம் தாமரை .
கோகரணம் பசுப்போல் காதசைக்கும் வித்தை ; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் .
கோகருணி பெருங்குரும்பை .
கோகலி கடப்பமரம் .
கோகழி திருவாவடுதுறை என்னும் சிவதலம் .
கோகன்னம் மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் ; யோகாசனவகை .
கோகனகத்தி திருமகள் ; கலைமகள் .
கோகனகம் செந்தாமரை .
கோகனகத்தோன் தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் .
கோகனகன் தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் .
கோகனதம் காண்க : கோகனகம் .
கோகனதன் நான்முகன் , பிரமன் .
கோகனதை தாமரையில் இருப்பவளாகிய திருமகள் .
கோகனம் கரிசலாங்கண்ணி ; நிலக்கடம்புப்பூடு ; நிலவேம்பு .
கோகிலம் குயில் ; பல்லி ; குரங்கு ; துளை ; சிறு குறிஞ்சாக்கொடி ; கலப்பை ; உலக்கை .
கோகிலவாசம் குயிலுக்கு இருப்பிடமாகிய மாமரம் .
கோகிலாட்சம் நீர்முள்ளிச்செடி ; கொம்மட்டி மாதுளை மரம் .
கோகிலோற்சவம் குயிலுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் மாமரம் .