ஞெகிழ்தல் முதல் - ஞெறித்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஞெகிழ்தல் கழலுதல் ; தளர்தல் ; மனமிளகுதல் ; மலர்தல் ; உருகுதல் ; மெலிதல் ; சோம்புதல் .
ஞெகிழம் சிலம்பு .
ஞெகிழி கொள்ளிக்கட்டை ; தீக்கடைகோல் ; தீ ; காண்க : கொடிவேலி ; சிலம்பு .
ஞெண்டு காண்க : ஞண்டு .
ஞெண்டுகம் காண்க : பெருவாகை .
ஞெண்டுதல் கிண்டுதல் .
ஞெப்தி நினைவு ; அறிவு .
ஞெமர்தல் பரத்தல் ; நிறைதல் .
ஞெமல் சருகு .
ஞெமவ்தல் திரிதல் .
ஞெமலுதல் திரிதல் .
ஞெமலி மகநாள் .
ஞெமன்கோல் துலாக்கோல் .
ஞெமிடுதல் கசக்குதல் .
ஞெமிதல் நெரிதல் .
ஞெமிர்த்தல் ஒடித்தல் ; நெரித்தல் ; அழுத்தல் ; பரப்புதல் .
ஞெமிர்தல் பரத்தல் ; முற்றுதல் ; தங்குதல் ; ஒடிதல் ; நெரிதல் .
ஞெமுக்கம் அழுந்துகை ; அமுக்கம் .
ஞெமுக்குதல் நெருக்கி வருத்துதல் .
ஞெமுங்குதல் அழுந்துதல் ; செறிதல் .
ஞெமை ஒரு மரவகை .
ஞெரல் ஒலி ; விரைவு .
ஞெரி முரிந்த துண்டு .
ஞெரிதல் முரிதல் .
ஞெரேரெனல் அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .
ஞெரேலெனல் அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .
ஞெலி தீக்கடைகோல் .
ஞெலிகோல் தீக்கடைகோல் .
ஞெலிதல் குடைதல் ; தீக்கடைதல் .
ஞெலுவல் காண்க : செத்தல் .
ஞெலுவன் தோழன் .
ஞெள்ளல் உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் ; பூசல் ; விரைவு ; சோர்வு ; பள்ளம் ; மிகுதி ; மேன்மை ; குற்றம் ; வீதி .
ஞெள்தல் உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் .
ஞெள்ளுதல் உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் .
ஞெள்ளெனல் ஒலிக்குறிப்பு .
ஞெள்ளை நாய் .
ஞெளிதல் காண்க : நெளிதல் .
ஞெளிர் யாழ்முதலியவற்றின் உள்ளோசை ; ஒலி .
ஞெளிர்தல் எடுத்தலோசையுடன் ஒலித்தல் .
ஞெறித்தல் புறவிதழ் ஒடித்தல் ; நெரித்தல் .