முதல் - தகர்ப்பொறி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து .
தக்கடி வஞ்சனை ; துரோகம் ; கடுமை ; குதர்க்கம் ; பொய் ; துலாக்கோல் ; பத்துச் சேர் கொண்ட நிறையளவு .
தக்கடிவித்தை செப்படிவித்தை ; ஏமாற்று .
தக்கடை இரட்டைத் தட்டுள்ள நிறைகோல் .
தக்கடைக்கல் நிறைகல் .
தக்கணம் தெற்கு ; வலப்பக்கம் ; தக்கணநாடு ; தாளப்பிரமாணத்தின் உட்பிரிவு ; உடனே .
தக்கணன் காண்க : தக்கணாமூர்த்தித்தேவர் .
தக்கணாக்கினி வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று , தென்முக அங்கி .
தக்கணாதி குறிஞ்சி யாழ்த்திறங்களுள் ஒன்று .
தக்கணாமூர்த்தித்தேவர் தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தி .
தக்கணாயனம் ஆடி முதல் சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆறுமாத காலம் .
தக்கணை காண்க : தக்கிணை .
தக்கத்தடித்தல் மிகப் பருத்தல் .
தக்கது தகுதி ; தகுதியானது .
தக்கப்பண்ணுதல் நிலைக்கச்செய்தல் ; வயப்படுத்துதல் ; ஒருவனது தகுதியைக் காட்டுதல் .
தக்கம் நிலைபேறு ; பற்று ; பல்லாங்குழி விளையாட்டில் காய்கள் இல்லாதிருக்கும் குழி ; பாண்டத்தின் அடியில் தங்கிய உணவு ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; வாதம் ; முதல் .
தக்கர் சாடி .
தக்கரம் களவு ; வஞ்சகம் .
தக்கராகம் பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்று .
தக்கல் அடைப்பு .
தக்கவர் தகுதியுடையோர் .
தக்கன் பிரசாபதிகளுள் ஒருவன் ; எண்வகை நாகத்துள் ஒன்று ; கள்வன் .
தக்காங்கு தக்கபடி ; நடுவுநிலையாக .
தக்காணம் தெற்கு ; வலப்பக்கம் ; இந்தியாவின் தென்பகுதி .
தக்கார் மேன்மக்கள் ; நடுவுநிலைமையுடையோர் ; பெருமையிற் சிறந்தோர் ; உறவினர் .
தக்காரி வாதமடக்கி .
தக்காளி காண்க : மணித்தக்காளி ; சீமைத் தக்காளி .
தக்காளிப்பிள்ளை பிள்ளைப்பூச்சி .
தக்காற்போல தக்கபடி .
தக்கிணம் தெற்கு .
தக்கிணாக்கினி காண்க : தக்கணாக்கினி .
தக்கிணாமூர்த்தி காண்க : தக்கணாமூர்த்தித் தேவர் .
தக்கிணாயனம் காண்க : தக்கணாயனம் .
தக்கிணை குரு முதலியோர்க்குக் கொடுக்கும் பொருள் .
தக்கிப்போதல் நிலைபெறுதல் .
தக்கியா பக்கிரிகளின் இருப்பிடம் .
தக்கிரம் மோர் .
தக்கிருத்தல் தனக்குத் தக வொழுகுதல் .
தக்கு இசையின் தாழ்ந்த ஓசை ; தந்திரம் .
தக்குத்தக்கெனல் ஓர் அடுக்கொலிக்குறிப்பு .
தக்குத்தடவல் தடவி நடக்கை ; தடுமாறிப்படிக்கை .
தக்குதல் நிலைபெறுதல் ; பயன்படுதல் ; ஏற்றதாதல் ; அரக்குதல் ; எல்லைகட்டுதல் ; நயப்படல் .
தக்குவித்தல் ஆட்சிக்குட்படுத்தல் .
தக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
தக்கேசி மருதநிலப் பண்வகை .
தக்கை காதிலிடும் குதம்பை ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒரு பறைவகை ; பறை ; தெப்பம் ; நெட்டிவகை ; அடைப்பான் ; அடைப்பு ; தூண்டிலோடு சேர்த்து மிதக்கவிடும் சக்கைத்துண்டு ; பாலமாக இடும் பனையின் அடிமரம் ; சோளம் , ஆமணக்கு முதலியவற்றின் உலர்ந்த தட்டை ; கட்டி ; கிழிந்த சீலையில் தைக்கும் ஒட்டுத்துண்டு .
தக்கோர் தகுதிவாய்ந்தவர் ; அறிஞர் .
தக்கோர்மை தக்கவர் தன்மையான நியாயம் .
தக்கோலம் காண்க : வால்மிளகு ; தாம்பூலம் ; சிறுநாவற்பூ ; திப்பிலி ; திருவூறல் என்னும் தேவாரம் பெற்ற ஓர் ஊர் .
தக்கோலி அகில்வகை .
தக்தம் சுடப்பட்டது .
தகசு தவழ்கரடி என்னும் விலங்கு ; தகடு .
தகட்டுமுளை கொக்கிவகை .
தகட்டுவைரம் பட்டை தீட்டப்பெறாத வைரம் .
தகடி பீதாம்பரம் ; ஏமாற்றுகை ; நீர் .
தகடு மென்மையுந் தட்டையுமான வடிவு ; உலோகத் தட்டு ; வண்ணத் தகடு ; கம்மார் வெற்றிலை , கறுப்பு வெற்றிலை ; பூவின் புறவிதழ் ; மண்படை ; அடர்ச்சி ; வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு .
தகடுதைத்தல் மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டமடித்தல் .
தகண் தடை ; தழும்பு ; பழக்கம் ; கிழங்கு விழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு .
தகணிதம் துந்துபி ; உலோகமணல் .
தகணேறுதல் தழும்புபடுதல் ; பழக்கமாதல் ; முற்றுதுல் .
தகணை உலோகக்கட்டி .
தகத்து அரியணை ; சிறந்த இடம் ; பெருமை ; மணத்துக்குரிய அலங்காரத் தேர் .
தகதகவெனல் ஒளிவீசுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .
தகதகெனல் ஒளிவீசுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .
தகப்படுதல் மேன்மைதங்குதல் .
தகப்பன் தந்தை .
தகப்பன்சாமி தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள் ; அடங்காப் பையன் .
தகம் எரிவு ; சூடு .
தகமை காண்க : தகைமை .
தகர் பொடி ; தகர்ந்த துண்டு ; ஆட்டுப்பொது ; செம்மறியாட்டுக்கடா ; வெள்ளாடு ; யாளியின் ஆண் ; ஆண்யானை ; ஆண்சுறா ; மேட்டுநிலம் ; பூமி ; பலாசுமரம் .
தகர் (வி) தகாஎன் ஏவல் ; அழி ; குட்டுஎன் ஏவல் .
தகர்த்தல் நொறுக்குதல் ; புடைத்தல் ; உடைத்தல் ; சிதறடித்தல் ; குட்டுதல் ; அழித்தல் ; நெரித்தல் ; பரு முதலிய கட்டிகளைத் திறத்தல் ; மெச்சும்படி ஆற்றல் காட்டுதல் .
தகர்தல் நொறுங்குதல் ; உடைதல் ; நெரிதல் ; சிதறுதல் ; அழிதல் ; காய்ந்துபோதல் .
தகர்ப்பு உடைப்பு ; குட்டு .
தகர்ப்பொறி கோட்டைமதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடிவான எந்திரவகை .