தீ முதல் - தீட்டலரிசி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தீ ஒர் உயிர்மெய்யெழுத்து (த் + ஈ) ; பஞ்ச பூதத்துள் ஒன்றாகிய நெருப்பு ; வேள்வித் தீ ; கோபம் ; அறிவு ; தீமை ; நஞ்சு ; நரகம் ; விளக்கு ; உணவைச் செரிக்கச்செய்யும் வயிற்றுத் தீ ; வழிவகை .
தீக்கஞ்சி நெருப்புக்கு அஞ்சுவதான ஆரத்திக் கருப்பூரம் .
தீக்கடவுள் அக்கினிதேவன் .
தீக்கடன் இறுதிச்சடங்கு ; அக்கினிகாரியம் .
தீக்கடைகோல் கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிறு கட்டை .
தீக்கடைதல் கடைந்து நெருப்புண்டாக்குதல் .
தீக்கணம் செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் .
தீக்கதி கொடிய உலகமாகிய நரகம் ; கொடிய விதி .
தீக்கதிர் உலையாணிக்கோல் .
தீக்கரண்டி நெருப்பு எடுக்கும் கருவி .
தீக்கரும்பு விறகு .
தீக்கருமம் தீய செயல் ; தீக்கடன் , ஈமக்கிரியை .
தீக்கரரை காண்க : முள்ளுமுருங்கை .
தீக்கல் தீத்தட்டிக் கல் ; இரும்புச் சத்துள்ள கல் .
தீக்கலம் காண்க : தீச்சட்டி ; ஈமப்பள்ளி .
தீக்கனா தீமை விளைவிக்கும் கனவு .
தீக்காய்தல் குளிர்காய்தல் .
தீக்காரியம் காண்க : தீக்கருமம் .
தீக்காலி தன் வரவால் குடிகேடு விளைப்பவள் ; ஓர் அசுரன் .
தீக்காற்று நெருப்புக்காற்று , அனற்காற்று .
தீக்கித்தல் நோன்புகொள்ளல் .
தீக்கிதர் காண்க : தீட்சிதர் .
தீக்குச்சி தீ உண்டாக்கும் குச்சி ; தீங்கு விளைவிப்போன் .
தீக்குண்டம் ஓமகுண்டம் .
தீக்குணம் கெட்ட குணம் ; வெப்பம் .
தீக்குணர் கீழ்மக்கள் ; தீயர் .
தீக்குதித்தல் ஆவேசம் முதலியவற்றால் வேண்டுதலுக்காகத் தீக்குழியில் இறங்கி நடத்தல் ; தீப்பாய்தல் .
தீக்குருவி காண்க : தீக்கோழி .
தீக்குளித்தல் நெருப்பில் பாய்ந்து இறத்தல் .
தீக்குறி கெடுவது காட்டுங் குறி ; தீநிமித்தம் .
தீக்கூர்மை இந்துப்பு ; திலசாரம் என்னும் உப்பு .
தீக்கை காண்க : தீட்சை .
தீக்கொள்ளி நெருப்பிடுவோன் ; கலக மூட்டுபவன் .
தீக்கொளுத்தி நெருப்பிடுவோன் ; கலக மூட்டுபவன் .
தீக்கோழி நெருப்புக்கோழி .
தீக்கோள் கேடுதரும் கிரகம் .
தீகுறுதல் தீயினால் அழிதல் .
தீங்கனி இனிய பழம் .
தீங்கு தீமை ; குற்றம் ; துன்பம் .
தீச்சகுனம் தீநிமித்தம்
தீச்சட்டி வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி ; கணப்புச்சட்டி .
தீச்சடம் சிறுநீர் .
தீச்சலம் ஒரு பணிகாரவகை ; ஒருவகைக் கடல் மீன் ஓடு .
தீச்சனகம் காண்க : இலுப்பை .
தீச்சனம் காண்க : மிளகு .
தீச்சார்பு தீயோர் தொடர்பு , கெட்டவர் சேர்க்கை .
தீச்சுடர் தீக்கொழுந்து ; வெடியுப்பு .
தீச்சொல் பழிச்சொல் .
தீசகன் ஆலோசனையுள்ளவன் ; ஆசிரியன் .
தீசல் சமையலில் கருகியது ; தீக்குணமுள்ளவர் ; தீக்குணமுள்ளது .
தீஞ்சுபோதல் எரிந்துபோதல் ; பயிர்முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; சீற்றம் கொள்ளுதல் ; அழிதல் .
தீஞ்சுவை இன்சுவை .
தீஞ்சேறு இனிய பாகு .
தீஞ்சொல் இனிய மொழி .
தீட்சணகண்டகம் முள்நாவல் .
தீட்சணகந்தகம் வெங்காயம் .
தீட்சணகம் காண்க : வெண்கடுகு .
தீட்சணசாரம் காண்க : இலுப்பை .
தீட்சணதண்டுலம் திப்பிலி .
தீட்சணபத்திரம் அலரி .
தீட்சணபுட்பம் இலவங்கம் .
தீட்சணம் உறைப்பு ; கடுமை ; கூர்மை ; ஆயுதம் ; மிளகு ; கஞ்சாங்கோரை ; இரும்பு ; கொள்ளை நோய் ; இறப்பு .
தீட்சணரோகம் கொடிய நோய் .
தீட்சணியம் உறைப்பு ; கடுமை ; கூர்மை .
தீட்சாகுரு ஒருவனுக்குத் தீட்சைச் சடங்கு செய்யும் ஆசாரியன் .
தீட்சித்தல் நோக்கம் , தொடுகை , உபதேசம் முதலியவற்றால் அருளுடன் குரு தீட்சை செய்வித்தல் ; பேரூக்கம் காட்டுதல் ; விரதநியமம் கொள்ளுதல் .
தீட்சிதர் யாகம் செய்தோர் ; தில்லை மூவாயிரவர் ; வேள்வி செய்த பார்ப்பனர் தரிக்கும் பட்டப்பெயர் ; சங்கற்பம் கொண்டவர் ; சமயதீட்சை பெற்றோர் .
தீட்சை அறிவுரை ; நோன்பு ; சங்கற்பம் ; குருவின் அருளுரை ; ஞானபோதனை ; அறிவுரை கேட்டல் ; பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல் ; சமயதீட்சை , விசேடதீட்சை , நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு ; நயனதீட்சை , பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள் ; குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை .
தீட்சைகேட்டல் குருவினிடமிருந்து உபதேசம் பெறுகை .
தீட்சைபண்ணுதல் உபதேசந்தரல் .
தீட்டணசாரம் காண்க : இலுப்பை .
தீட்டணம் காண்க : கஞ்சாங்கோரை .
தீட்டம் மலம் ; தீண்டுகை ; மகப்பேறு , இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகக் கருத்ப்படும் தீட்டு ; மாதவிடாய் .
தீட்டரிசி தவிடு நீக்கிய அரிசி .
தீட்டலரிசி தவிடு நீக்கிய அரிசி .