தெ முதல் - தெய்வக்கல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தெ ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+எ) .
தெக்கணம் தெற்கு ; வலப்பக்கம் .
தெக்கணை தட்சிணை , குரு முதலியோருக்குக் கொடுக்கும் நன்கொடை .
தெக்கு தெற்கு .
தெக்குதல் கொள்ளுதல் .
தெகிட்டு தெவிட்டுகை ; வாந்திவருகை .
தெகிடி சூது விளையாட்டுவகை ; புரட்டு .
தெகிழ்தல் விளங்குதல் ; வாய்விடுதல் ; நிறைதல் .
தெகிள் கொடிப்புன்கு .
தெகுட்டி தேட்கொடுக்கிச்செடி .
தெகுட்டிகை தேட்கொடுக்கிச்செடி .
தெகுட்டுதல் தெவிட்டுதல் .
தெகுடாடுதல் திண்டாடுதல் .
தெகுள்தல் நிறைதல் ; பெருகுதல் .
தெகுளம் நிறைவு ; பெருக்கம் .
தெங்கங்காய் தேங்காய் .
தெங்கம் தென்னைமரம் .
தெங்கம்பழம் தேங்காய்நெற்று .
தெங்கு தென்னைமரம் ; தித்திப்பு ; போர்ச்சேவலின் தன்மை குறிக்கும் குழூஉக்குறியுள் ஒன்று ; ஏழு தீவுகளுள் ஒன்று .
தெசலம் மாமரம் .
தெட்சகன் இரட்சகன் ; எட்டு நாகத்துள் ஒன்று .
தெட்சணதேசம் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு .
தெட்சணம் தெற்கு ; வலப்பக்கம் ; காளாமுகம் .
தெட்சணாவிருத்தம் வலம்புரிச்சங்கு .
தெட்சணை காண்க : தட்சிணை .
தெட்சிணம் காண்க : தட்சணம் .
தெட்ட முற்றிய ; தெளிவான .
தெட்டத்தெளிய மிகத் தெளிவாய் .
தெட்டத்தெறித்தல் இரண்டாய் முரிதல் .
தெட்டரசர் வென்று கீழ்ப்படுத்தப்பட்ட அரசர் .
தெட்டல் ஏமாற்றுதல் ; பறித்தல் .
தெட்டவர் தெளிந்தவர் .
தெட்டி வஞ்சிப்பவன் ; யானை ; வாணிகன் .
தெட்டி வஞ்சிப்பவள் ; யானை ; வாணிகன் .
தெட்டு வஞ்சனை ; பறிக்கை ; யானைக்கணையம் .
தெட்டுண்ணுதல் கவர்ந்து உண்ணுதல் .
தெட்டுதல் காண்க : தெட்டல் .
தெட்பம் தெளிவு ; மனத்தேற்றம் ; முதிர்ச்சி ; மூதறிவு .
தெடாரி தடாரிப் பறை .
தெண் தெளிவு .
தெண்டகை நெருக்கடி ; தேவை .
தெண்டன் கோல் ; வணக்கம் .
தெண்டிரை கடல் .
தெண்டு கோல் ; கற்றை ; ஓணான் .
தெண்டுதடி கனமுள்ள பொருள்களை மேலே கிளப்பும் கருவி , நெம்புகோல் .
தெண்டுதல் கிளப்புதல் ; மிண்டுதல் ; நரம்பு வலித்தல் ; இரத்தல் .
தெண்டை காண்க : தெண்டகை .
தெண்ணர் அறிவில்லாதவர் .
தெண்ணீர் தெளிந்த நீர் .
தெண்மை தெளிவு ; அறிவின் தெளிவு .
தெத்து மூலை ; வேலியடைப்பு ; ஏமாற்று .
தெத்துமாற்று வஞ்சகம் .
தெந்தனம் கவலையற்ற தன்மை ; சோம்பல் ; தாமதம் .
தெந்தனமடித்தல் வீணே திரிதல் ; வேலையை உழப்புதல் .
தெந்தனா தாளச் சொற்கட்டு .
தெந்தி நேர்வாளமரம் .
தெப்பக்கட்டை மிதவை ; வண்டியச்சுக் கோத்த மரம் ; கிணற்றடியில் வைத்துக் கட்டப்படும் மரச்சட்டம் ; ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்ட உதவும் மரக்கட்டை .
தெப்பத்திருநாள் கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா .
தெப்பத்திருவிழா கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா .
தெப்பம் மிதவை ; புணை .
தெப்பமண்டபம் தெப்பத்திருவிழா நடைபெறும் குளத்தில் நடுவில் உள்ள மண்டபம் .
தெப்பலங்கெட்டவன் உடல்வலியற்றவன் .
தெப்பை காண்க : தெப்பம் .
தெம்பல் சேறு ; மழையால் வயல் இறுகுகை .
தெம்பாங்கு ஒரு சந்தனவகை ; காண்க : தெம்மாங்கு .
தெம்பு உடல் வலிமை ; ஊக்கம் ; துணிவு ; செருக்கு .
தெம்மாங்கு நாட்டுப்புற இசைப்பாடல்வகை .
தெம்மாடி ஒன்றுக்கும் உதவாத அறிவீனன் .
தெம்முனை போர்க்களம் .
தெய் கொலை ; தெய்வம் .
தெய்நெய் தாளக்குறிப்பு .
தெய்தெய்யெனல் கோபத்தால் குதித்தாடும் குறிப்பு ; மாடுகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு .
தெய்ய ஓர் அசைநிலை .
தெய்வக்கண்ணோர் கேவலஞானமுடையவர் .
தெய்வக்கல் தெய்வ உரு அமைத்தற்குரிய கல் .