தை முதல் - தைனியம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தை ஓர் உயிர்மெய்யெழுத்து (த்+ஐ) ; ஒரு மாதம் ; பூசநாள் ; மகரராசி ; நாய்க்கடுகு செடி ; தையல் ; தாளக் குறிப்பினுள் ஒன்று ; அலங்காரம் ; மரக்கன்று .
தைஇ (வி) கோத்து ; தொடுத்து .
தைஇய (வி) இழைத்த ; கோலஞ்செய்த ; தொடுத்த .
தைச்சங்கிராந்தி சூரியன் மகரராசியில் புகும் தைமாத முதல்நாள் .
தைசதம் இராசதகுணம் மேலிட்ட அகங்காரம் ; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணம் மேலிட்டது ; பலம் ; நெய் ; ஒளி சம்பந்தமானது ; மகரராசி .
தைசதன் நுண்ணுடலை யான் என்று கருதும் சீவன் .
தைசம் பூசநாள் .
தைத்தல் தையலிடுதல் ; ஆணி முதலியன அடித்தல் ; பொருத்துதல் ; இணைத்தல் ; படைத்தல் ; இடுதல் ; வலைபின்னுதல் ; தொடுத்தல் ; இடுதல் ; வலைபின்னுதல் ; தொடுத்தல் ; கோத்தல் ; அலங்கரித்தல் ; சித்தரித்தல் ; பதித்தல் ; அடைத்தல் ; உடுத்தல் ; உட்புகுதல் ; ஊடுருவுதல் .
தைத்தியகுரு அசுரர் குருவான சுக்கிரன் .
தைத்தியபுரோகிதன் அசுரர் குருவான சுக்கிரன் .
தைத்தியமந்திரி அசுரர் குருவான சுக்கிரன் .
தைத்தியர் திதி என்பவளின் மைந்தரும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர் .
தைத்தியாரி தைத்தியர்களுக்குப் பகைவனான திருமால் .
தைத்திரம் காண்க : மீன்கொத்தி .
தைத்திரீயம் எசுர்வேத சாகைகளுள் ஒன்று ; உபநிடதம் பத்தனுள் ஒன்று .
தைதம் விரல்நுனி .
தைதிலம் காண்டாமிருகம் ; கரணம் பதினொன்றனுள் ஒன்று .
தைதேயர் அரக்கர் .
தைந்நீராடல் தை மாதத்தில் கன்னிப்பெண்கள் காலையில் நீராடும் சடங்கு .
தைப்பான் ஊசி ; தையற்காரன் .
தைப்பூசம் தை மாதத்துப் பூசத்திருநாள் .
தைப்பை சட்டை .
தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் பொங்கலிட்டு வழிபடும் பெருநாள் .
தையல் தைப்பு ; தையல்வேலை ; அலங்காரத்துணி ; புனையப்படுவது ; கட்டழகு ; பெண் ; மேகம் .
தையற்காரன் தைப்போன் ; பின்னல்வேலை செய்வோன் .
தையெனல் இசைக்குறிப்பு .
தைரியசாலி மனத்துணிவுள்ளவன் .
தைரியஞ்சொல்லுதல் ஊக்கங்கொடுத்தல் .
தைரியம் மனத்துணிவு ; குதிரையின் பெருமித நடை .
தைரியலட்சமி துணிவுதரும் தேவதை .
தைலக்காப்பு கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு எண்ணெய் சாத்துகை ; எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை .
தைலசௌரிகை வௌவால் ; கரப்பான்பூச்சி .
தைலபிபீலிகை செவ்வெறும்புவகை .
தைபீதம் அத்திப்பிசின் .
தைலம் எண்ணெய் ; நல்லெண்ணெய் ; மரச்சத்து ; மணப்பண்டங்களுள் ஒன்று ; கூட்டெண்ணெய் ; ஆமணக்கெண்ணெய் .
தைலமாட்டுதல் எண்ணெய்க் காப்பிடுதல் ; பிணத்தைத் தைலத்தால் கெடாமல் பாதுகாத்தல் .
தைலமிறக்குதல் எண்ணெய் வடித்தல் ; சத்தியை வாங்கிடுதல் .
தைலமெடுத்தல் எண்ணெய் வடித்தல் ; சத்தியை வாங்கிடுதல் .
தைலா மரப்பெட்டி .
தைலாங்குருவி காண்க : தகைவிலாங்(ன்)குருவி .
தைலி பணப்பை ; காண்க : தைலிகன் .
தைலிகன் எண்ணெய் வாணிகன் ; மருத்துவன் .
தைவகருமம் தீயிலிடும் பலி .
தைவதம் தெய்வம் ; தெய்வாராதணை ; ஏழுசுரத்துள் ஒன்று .
தைவதீபம் தெய்வம் அருளிய விளக்கான கண்கள்
தைவம் கடவுள் ; தெய்வத்தின் வடிவு ; பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது .
தைவரல் வருடல் ; தடவல் ; அலங்கரித்தல் ; கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி ஏற்றுகை .
தைவருதல் வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் .
தைவாதல் வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் .
தைவிகம் பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது ; தெய்வத்தன்மை உடையது .
தைவிளை நாய்க்கடுகுசெடி .
தைவேளை நாய்க்கடுகுசெடி .
தைனியம் எளிமை ; கீழ்மை ; பொருளாசை .