நா முதல் - நாகரிகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நா ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ) ; சொல் ; நடு ; மணி முதலியவற்றின் நாக்கு ; தீயின் சுடர் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; துலைநாக்கு ; அயல் ; பொலிவு .
நாக்கரளை நாவில் வரும் ஒரு நோய்வகை .
நாக்களாம்பூச்சி காண்க : நாக்குப்பூச்சி .
நாக்கறுத்தான்புல் தருப்பை .
நாக்கு நாக்கு என்னும் உறுப்பு ; சொல் ; நடு ; துலைநா ; மணியின் நாக்கு ; தீயின் சுடர் ; பூட்டின் தாள் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; அயல் ; தானியக்கதிர் ; படகு வலிக்கும் தண்டு .
நாக்குத்தவறுதல் சொல்தவறுதல் ; பொய்சொல்லுதல் .
நாக்குநரம்பற்றவன் தீயவை பேசுபவன் ; அளவு கடந்து பேசுபவன் .
நாக்குநீட்டுதல் அளவுகடந்து பேசுதல் .
நாக்குநீளுதல் விருப்பமிகுதல் ; கடுமையாய்ப் பேசுதல் .
நாக்குப்புண் நாவில் தோன்றும் நோய்வகை .
நாக்குப்புரட்டு பொய் .
நாக்குப்புரளுதல் சொல் தவறுதல் .
நாக்குப்புற்று நாவில் உண்டாகும் புண்வகை .
நாக்குப்பூச்சி மலப்பையில் வாழும் சிறு புழு ; வயிற்றில் உள்ள நீண்ட புழுவகை ; நாங்கூழ் .
நாக்குவழித்தல் நாவின் அழுக்கினை வழித்து நீக்குதல் .
நாக்குவளைத்தல் பழித்தல் .
நாக்குவாங்குதல் நாக்கை உள்ளிழுத்தல் ; களைத்துப்போதல் ; வில்லங்கப்படுத்துதல் ; களைக்கப்பண்ணுதல் .
நாக்குவிழுதல் பேச நாவெழாதிருத்தல் .
நாக்குழறுதல் நாத்தழுதழுத்தல் .
நாக்குறுதி சொல் தவறாமை .
நாக்கைப்பிடுங்கிக்கொள்ளுதல் தவறு நடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல் ; நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல் ; முயற்சியெடுத்துக்கொள்ளுதல் ; அதிகமாகப் பேசுதல் .
நாக்கொட்டுதல் நாவறளுகை .
நாகக்குவடு செம்புமலை .
நாககர்ணம் செவ்வாமணக்கஞ்செடி .
நாககற்பம் செவ்வீயம் .
நாககன்னிகை நாகலோகத்துப் பெண் .
நாக்கெந்தி நேர்வாளம் ; காண்க : வஞ்சிக்கொடி .
நாகசம் சிந்தூரம் ; ஈயம் .
நாகசரம் காண்க : நாகசுரம் .
நாகசாபம் நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை .
நாகசுரம் துளைக்கருவிவகை .
நாகசேதகன் மலைகளின் சிறகை அரிந்தோனாகிய இந்திரன் .
நாகணம் நறும்பண்டவகை ; நேர்வாளம் .
நாகணவாய் பூவைப் பறவை .
நாகணவாய்ச்சி பூவைப் பறவை .
நாகணவாய்ப்புள் பூவைப் பறவை .
நாகணை திருமாலின் பாம்புப் படுக்கை .
நாகணையினான் பாம்பபைப் படுக்கையாகக்கொண்ட திருமால் .
நாகத்திசை வடமேற்கு .
நாகதந்தம் யானைக்கொம்பு ; பாம்பின் பல் ; முளையாணி .
நாகதாளி காண்க : சப்பாத்துக்கள்ளி .
நாகதிசை மேற்கு .
நாகதீபம் ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு .
நாகதேவன் காண்க : ஆதிசேடன் .
நாகதேனி காண்க : பெருமருந்து
நாகதொனி மருதப் பண்களுள் ஒன்று .
நாகந்தி காண்க : நேர்வாளம் .
நாகநாடு துறக்கம் ; நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு ; பவணலோகம் .
நாகநாதன் துறக்கத்துக்கு இறைவனான தேவேந்திரன் ; காண்க : ஆதிசேடன் ; சிவன் .
நாகப்பகை பாம்பிற்குப் பகையான கருடன் .
நாகப்பச்சை பச்சைக்கல்வகை .
நாகப்பாம்பு நல்லபாம்பு ; வயிற்றுப்பூச்சி .
நாகப்பூ ஒரு மரவகை .
நாகப்பூச்சி காண்க : நாக்குப்பூச்சி .
நாகபடம் நல்லபாம்பின் படம் ; பாம்புப்படத்தின் உருவம்கொண்ட ஒரு காதணிவகை ; படமெடுத்த நாகத்தின் உருக்கொண்ட தோளணிவகை .
நாகபந்தம் ஒரு சித்திரகவிவகை .
நாகபந்து அரசமரம் .
நாகபாசம் பாம்புருவான ஒரு படைக்கலம் .
நாகம் வானம் ; துறக்கம் ; மேகம் ஒலி ; காண்க : நல்லபாம்பு ; நாகப்பச்சை ; நாவல் ; பாம்பு நஞ்சு ; நாகலோகம் ; யானை ; குரங்கு ; கருங்குரங்கு ; காரீயம் ; துத்தநாகம் ; நற்சீலை ; மலை ; புன்னைமரம் ; ஞாழல் ; சுகம் .
நாகம்மா பாம்புத் தேவதை .
நாகமணி நாகத்தின் தலையில் இருப்பதாகக் கருதப்படும் இரத்தினம் .
நாகமல்லி கொடிவகை .
நாகமாதா துளசி .
நாகமாபுரம் மதுரை .
நாகமுகன் யானைமுகத்தவனான கணபதி .
நாகர் தேவர் ; மகளிர் தலையணிவகை ; பாதி மக்கள் வடிவுமாய் அமைந்த நாகலோகவாசிகள் ; ஒரு பழைய சாதியார் .
நாகரகன் சித்திரகாரன் ; கள்வன் .
நாகரத்தினம் காண்க : நாகமணி .
நாகரம் காண்க : தேவநாகரி ; வடமொழி எழுத்து ; சுக்கு ; தேன்றொடை .
நாகரவண்டு பொன்வண்டு ; நத்தைவகை ; சிறுகுழந்தை .
நாகரன் நகரத்தான் ; சிறந்தோன் ; கணவன் ; உடன்பிறந்தான் .
நாகராகம் பெரும் பண்களுள் ஒன்று .
நாகராசன் காண்க : ஆதிசேடன் .
நாகரி குருக்கத்திக்கொடி .
நாகரிகம் நகரவொழுக்கம் ; காண்க : தேவநாகரி ; செப்பம் ; கண்ணோட்டம் ; மரியாதை ; பிலுக்கு .