பா முதல் - பாங்கானவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பா ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஆ) ; பாட்டு ; பரப்பு ; தேர்த்தட்டு ; கைம்மரம் ; நெசவுப்பா ; பஞ்சிநூல் ; நிழல் ; கடிகாரவூசி ; காப்பு ; பருகுதல் ; தூய்மை ; அழகு ; பாம்பு ; பூனைக்காலிக் கொடி .
பாக்கட்டுதல் நெசவுப்பாவில் அறுந்த இழையை இணைத்தல் .
பாக்கம் நெய்தல்நிலத்தூர் ; ஊர் ; அரசன் இருப்பிடம் ; சிறு மூட்டை .
பாக்கல் பாவுகல் .
பாக்கழி மருத யாழ்த்திறத்துள் ஒன்று .
பாக்கன் பூனை ; காட்டுப்பூனை .
பாக்கானூல் நெசவுப்பாவில் நெய்தபின் அச்சில் மிஞ்சிய நூல் .
பாக்கி நிலுவை ; மிச்சம் .
பாக்கியசாலி நல்வினையாளர் .
பாக்கியதானம் பிறந்த இலக்கினத்துக்கு ஒன்பதாமிடம் .
பாக்கியம் செல்வம் ; நல்வினை ; விதி ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் பதினைந்தாவது ; காண்க : பாக்கியதானம் ; கழாயம் .
பாக்கியலட்சுமி தனலட்சுமி .
பாக்கியவதி செல்வமுள்ளவள் .
பாக்கியவந்தன் செல்வமுள்ளவன் .
பாக்கியவாளன் செல்வமுள்ளவன் .
பாக்கியவான் செல்வமுள்ளவன் .
பாக்கியாதிபதி பாக்கியத்தானமாகிய ஒன்பதாம் வீட்டுக்குடையவன் .
பாக்கிலை பாக்குவெற்றிலை .
பாக்கு அடைக்காய் ; கமுகு ; எதிர்காலங்காட்டும் வினையெச்ச விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; பாக்குக்குப் பதிலாகப் பயன்படும் பட்டையையுடைய ஒரு செடிவகை .
பாக்குச்சீவல் பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத் துண்டு .
பாக்குச்செதில் பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத் துண்டு .
பாக்குப்பாளை பாக்குமரத்தில் பூவை உள்ளடக்கி இருக்கும் மடல் .
பாக்குப்பிடித்தல் பிறனுக்குத் தீங்குண்டாகும்படி சூழ்ச்சிசெய்தல் ; குறைத்துவிடுதல் .
பாக்குப்பிளவு பாக்குத்துண்டு ; பாதியாக வெட்டப்பட்ட பாக்கு .
பாக்குப்பை தாம்பூலமிடும் பை .
பாக்குமட்டை பாக்குமரத்தில் உண்டாகும் மட்டை ; கமுகமட்டையின் விரிந்த அடிப்பாகம் .
பாக்குரல் வெற்றிலைபாக்கை இட்டு இடிக்கும் கையுரல் .
பாக்குவெட்டி பாக்குச் சீவுங் கருவி .
பாக்குவெற்றிலை தாம்பூலம் .
பாக்குவைத்தல் தாம்பூலம் வைத்தல் ; பாக்கு வைத்து மணத்திற்கு அழைத்தல் ; பிறருக்குத் தீங்கு உண்டாகும்படி சூழ்ச்சிசெய்தல் .
பாக்கை நெய்தல்நிலத்தூர் ; ஊர் .
பாகசாதனன் இந்திரன் .
பாகசாதனி இந்திரன் மகனான சயந்தன் ; அருச்சுனன் .
பாகசாலை மடைப்பள்ளி .
பாகடை காண்க : பாக்குவெற்றிலை .
பாகண்டன் வெளிவேடக்காரன் .
பாகதம் பிராகிருதமொழி .
பாகதாரி காண்க : பாகுவன் .
பாகப்படுத்துதல் சமைத்தல் ; பக்குவப்படுத்தல் .
பாகப்படுதல் பக்குவப்படுதல் ; பதப்படுதல் .
பாகபத்திரம் சொத்துப் பிரிவினை குறிக்கும் சீட்டு .
பாகபுடி குயவன் சூளை .
பாகம் பகுக்கை ; கூறு ; பாதி ; பாகை ; பக்கம் ; பங்கம் ; பிச்சை ; பறைவகை ; சமையல் ; சூடு படுத்தல் ; பக்குவம் ; மூவகைச் செய்யுள் நடை ; மனநிலை ; புயம் ; நான்கு முழம் கொண்ட நீட்டலளவை ; இடம் .
பாகமாதல் உணவு முதலியன தயாராதல் ; மருந்து முதலியன பதமாதல் ; பங்கு பிரிக்கப்படுதல் .
பாகர் யானை , குதிரை முதலியவற்றை நடத்துவோர் ; தேரின் மேல்தட்டைச் சுற்றியுள்ள மரக் கைப்பிடிச் சுவர் ; தேர் .
பாகரபிரபை சூரிய ஒளி .
பாகல் பாகற்கொடி ; பலாமரம் .
பாகலம் யானைக்கு வரும் சுரநோய்வகை .
பாகலன் உன்மத்தன் ; மயக்கமுடையவன் .
பாகவதநடனம் வைணவ அடியார்கள் செய்யும் நடனம் .
பாகவதர் திருமாலடியவர் ; இசையுடன் சமயக்கதைகள் சொல்வோர் ; பாடகர் .
பாகன் யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; புதன் ; பக்குவம் பெற்றவன் ; பக்கத்தில் கொண்டவன் ; செயலில் துணை செய்வோன் ; சுங்கம் வாங்கி .
பாகாரம் வகுத்தல் .
பாகாரி இந்திரன் .
பாகி தகுதியானவன் ; சாரதிவேலை செய்யும் பெண் ; நாய் .
பாகிடுதல் பிச்சையிடுதல் ; பங்கிடுதல் .
பாகித்தல் பங்கிடுதல் .
பாகியம் புறம்பானது ; மலங்கழிக்கை .
பாகினேயன் உடன்பிறந்தாள் மகன் .
பாகீடு பங்கிடுதல் .
பாகீரதி கங்கை .
பாகு குழம்பான உணவு ; இளகிய வெல்லம் ; சருக்கரை ; கற்கண்டு ; பால் ; பாக்கு ; பரணி நாள் ; பகுதி ; பிச்சை ; கரை ; உமை ; அழகு ; யானைப்பாகன் ; தேர் முதலியன நடத்துவோன் ; ஆளுந்திறன் ; கை ; தலைப்பாகை ; அழகு .
பாகுடம் அரசிறை ; கையுறை .
பாகுடி மிகத் தொலைவு .
பாகுபடுதல் பிரிவுபடுதல் .
பாகுபாடு பிரிவுபடுகை ; பகுப்பு .
பாகுலம் கார்த்திகைமாதம் .
பாகுவலயம் தோள்வளை .
பாகுவன் சமையற்காரன் .
பாகுளி புரட்டாசி மாதத்து முழுமதிநாள் .
பாகை ஊர் ; பகுதி ; வட்டத்தில் 1/360 பங்கு ; ஒரு காலஅளவு ; தலைப்பாகை ; யானையின் உடலில் மதநீர் ஊறும் இடம் .
பாங்கர் இடம் ; பக்கம் ; தோழர் ; கணவர் ; பாங்கர்க்கொடி ; உகாமரம் .
பாங்கற்கூட்டம் தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக்கூடுகை .
பாங்கன் தோழன் ; கணவன் .
பாங்கானவன் மரியாதை உள்ளவன் .