பி முதல் - பிசிர்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பி ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+இ) ; பிறவினை விகுதி .
பிக்கம் யானைக்கன்று ; இருவேலி .
பிக்கல்பிடுங்கல் தொல்லை .
பிக்காரி வறிஞன் .
பிக்கு சிக்கு ; பிசகு ; குழப்பம் ; ஒவ்வாமை ; பௌத்தத்துறவி .
பிக்குணி பௌத்தப் பெண்துறவி .
பிகபந்து குயிலின் நண்பனான மாமரம் .
பிகம் குயில் .
பிகவல்லபம் காண்க : பிகபந்து .
பிகி பெண்குயில் .
பிகு இறுக்கம் ; பலம் ; செருக்கு ; எடுத்த குரல் .
பிகுபண்ணுதல் தன்னை அருமைப்படுத்திக் கொள்ளல் .
பிகுவு இறுக்கம் ; பலம் ; செருக்கு ; ஓரளவு கொண்ட அவுரிக்கட்டு .
பிகுவேற்றுதல் இறுகச்செய்தல் ; வளைத்தல் .
பிங்கதிருட்டி பிங்கநிறக் கண்ணுடைய சிங்கம் .
பிங்கம் பொன்மை கலந்த சிவப்பு .
பிங்கலம் பொன் ; பொன்மைநிறம் ; வடக்கு ; அரிதாரநிறம் ; பிங்கல நிகண்டு ; எச்சில் உமிழும் படிக்கம் .
பிங்கலன் குபேரன் ; சிவன் ; சூரியன் ; தீ ; பிங்கல நிகண்டு செய்த ஆசிரியன் .
பிங்கலாதனம் யோகாசனவகை .
பிங்கலை பத்து நாடியுள் ஒன்று ; வலமூக்கு வழியாக வரும் மூச்சு ; ஆந்தைவகை ; எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; பார்வதி .
பிங்கள அறுபதாண்டுக்கணக்கில் ஐம்பத்தோராம் ஆண்டு .
பிங்களம் பொன்னிறம் ; அரிதாரநிறம் ; வஞ்சகம் ; களிம்பு ; வேறுபாடு .
பிங்களித்தல் அருவருத்தல் ; பின்வாங்குதல் .
பிங்களை எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; வாழ்நாளுள் மூன்று பகுதியுள் இரண்டாவது .
பிங்காசம் ஒரு பொன்வகை .
பிங்காசி காண்க : அவுரி .
பிங்காளம் பாண்டவகை .
பிங்கி வன்னிமரம் .
பிங்குசம் தலைக்கோலம் .
பிச்சடம் ஈயம் ; துத்தநாகம் .
பிச்சப்பழம் சருக்கரைக்கொம்மட்டிப் பழம் .
பிச்சம் இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) .
பிச்சன் பைத்தியக்காரன் ; மருண்டவன் ; சிவன் .
பிச்சாடனம் பிச்சையெடுத்தல் .
பிச்சாடனன் காண்க : பிட்சாடனன் .
பிச்சாபாத்திரம் இரப்போர் கலம் .
பிச்சி காண்க : சாதிமல்லிகை . முல்லை ; சிறு செண்பகம் ; பித்துப்பிடித்தவள் ; சைவ தவப்பெண் ; ஒரு பெண்பேய் ; பைத்தியம் பிடித்தவர் ; சருக்கரைக்கொம்மட்டி .
பிச்சியார் சைவ தவப்பெண் ; கலம்பக உறுப்பு வகையுள் ஒன்று .
பிச்சிலம் ஈரம் ; குழம்பு ; கஞ்சி .
பிச்சு பித்தநீர் ; பைத்தியம் .
பிச்சுவா கையீட்டி ; நுனியில் கூருடைய கத்தி .
பிச்சை தருமம் ; இரப்போர்க்கிடும் உணவு ; வாழைமரம் ; நூக்கமரம் ; மரகதம் ; படிகம் ; சருக்கரைக்கொம்மட்டி .
பிச்சைக்காரன் இரவலன் .
பிச்சைச்சோறு இரந்து பெற்ற அன்னம் ; பிடியன்னம் .
பிச்சைத்தனம் இரக்குங்குணம் ; இழிகுணம் ; வறுமை .
பிச்சைத்தேவன் சிவபிரான் .
பிச்சைப்படி சிறு படிவகை .
பிசக்கு தவறு ; ஒவ்வாமை .
பிசக்குதல் அழுக்காக்குதல் ; கசக்குதல் .
பிசகு தவறு ; ஒவ்வாமை ; இடையூறு ; தடை .
பிசகுசொல்லுதல் குற்றங்கூறுதல் ; தடை நிகழ்த்துதல் .
பிசகுதல் தவறுதல் ; உறுப்புப் பிறழ்தல் ; வழுக்கி விழுதல் ; தடைப்படுதல் ; மந்தமாதல் .
பிசகுநாறுதல் கேடுறுதல் .
பிசங்கம் காண்க : பிங்கம் .
பிசங்கல் அழுக்கடைந்த ஆடை .
பிசங்குதல் அழுக்காதல் .
பிசண்டம் வயிறு ; விலங்கின் முதுகு .
பிசம் இறகு ; தாமரைத்தண்டு .
பிசல் தோள் ; பிடர் ; எருது முதலியவற்றின் திமில் .
பிசறுதல் கலத்தல் .
பிசனம் காண்க : செஞ்சந்தனம் .
பிசாசக்கை இணையா வினைக்கைவகை .
பிசாசம் பேய் ; காண்க : பிசாசக்கை .
பிசாசன் பேய்பிடித்தவன் ; தீக்குணமுள்ளவன் .
பிசாசாடுதல் பேய்பிடித்தாடுதல் .
பிசாசு பேய் .
பிசாசுபிடித்தல் பேய்க்கோட்படுகை ; பேய்க்கு இருப்பிடமாகை .
பிசாத்து புன்மை .
பிசான் பிசுபிசுப்பு .
பிசானம் ஒரு நெல்வகை ; தை மாசி மாதங்களாகிய அறுவடைக் காலம் .
பிசி பொய் ; சோறு ; உவமேயத்தை உவமானப் பொருளால் குறிப்பித்துக் கூறுவது .
பிசிதம் ஊன் ; காண்க : வேம்பு ; மலைவேம்பு .
பிசிதாசனர் ஊன் தின்னும் இராக்கதர் .
பிசிர் நீர்த்துளி ; ஊற்றுநீர் ; சிம்பு .
பிசிர்தல் துளியாகச் சிதறுதல் .