பெ முதல் - பெண்பிறந்தார் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பெ ஒர் உயிர்மெய்யெழுத்து (ப் + எ) .
பெகுலம் மிகுதி .
பெங்கு தீயொழுக்கம் ; ஒரு கள்வகை .
பெட்டகம் பெட்டி ; வரிசைப்பெட்டி .
பெட்டல் விருப்பம் .
பெட்டன் பொய்யன் .
பெட்டார் நண்பர் ; விரும்பியவர் .
பெட்டி பண்டங்கள் வைக்கும் கலம் ; கூடை ; தொடர்வண்டி முதலியவற்றின் அறை ; வண்டியோட்டி உட்காருமிடம் ; சாட்சிக் கூண்டு ; நெல்வகை .
பெட்டிக்கோரை கோரைவகை .
பெட்டிலிக்குழல் நீளமான குழல் .
பெட்டிவரிசை ஆதிதிராவிடரில் மணப்பெண் புக்ககம் செல்லும்போது எடுத்துச் செல்லும் வரிசை .
பெட்டு பொய் ; மயக்குச் சொல் ; சிறப்பு ; மதிப்பு .
பெட்டெனல் விரைவுக்குறிப்பு .
பெட்டை விலங்கு , பறவை இவற்றின் பெண்பால் ; பெண் ; குருடு ; குறைவு .
பெட்டைக்கட்டு தளர்ந்த முடிச்சு .
பெட்டைக்கண் ஊனமுள்ள கண் ; சாய்ந்த கண் ; சிறு கண் ; தேங்காயின் சிரட்டையிலுள்ள துளையில்லாக் கண்கள் .
பெட்டையன் ஆண்மையற்றவன் .
பெட்ப மிக .
பெட்பு பெருமை ; விருப்பம் ; அன்பு ; தன்மை ; பேணுகை ; பாதுகாப்பு .
பெடம் காண்க : பெகுலம் .
பெடை பறவைகளின் பெண் .
பெண் மகள் ; சிறுமி ; மணமகள் ; மனைவி ; பதுமினி , சித்தினி , சங்கினி , அத்தினி என நால்வகைப்படும் பெண் ; விலங்கு தாவரங்களின் பெடை ; காண்க : கற்றாழை .
பெண்கட்டுதல் பெண்ணைத் திருமணம் செய்தல் .
பெண்கரு கருவுக்குக் காரணமான பெண்ணின் சுரோணிதம் .
பெண்கலை வண்ணப்பாவின் பிற்பகுதி .
பெண்குறி அல்குல் , பிறப்புறுப்பு .
பெண்கேட்டல் திருமணம் செய்துகொடுக்கும்படி பெண்ணைப் பெற்றோரிடம் கேட்டல் .
பெண்கோலம் மகளிர் பூணுங் கோலம் ; பெண் வேடம் .
பெண்கோள் பெண்ணை மணம்புரிந்து சம்பந்தஞ் செய்துகொள்கை ; சந்திர சுக்கிரர்களாகிய பெண்பாற் கோள்கள் .
பெண்சரக்கு படிக்காரம் , காடி முதலிய புளிப்புள்ள சரக்குகள் .
பெண்சனம் மகளிர் கூட்டம் .
பெண்சாதி பெண்பாலர் ; மனைவி .
பெண்டகம் அலி .
பெண்டகன் அலி .
பெண்டகை பெண்மைக்குணம் .
பெண்டகைமை பெண்மைக்குணம் .
பெண்டன் காண்க : பெண்டகம்(ன்) .
பெண்டாட்டி மனைவி ; பெண் ; வேலைக்காரி .
பெண்டு மனைவி ; பெண் .
பெண்டுகம் கழற்சிக்கொடி .
பெண்டுபிள்ளை மனைவி குழந்தைகள் அடங்கிய குடும்பம் .
பெண்டுருவன் மோகினி உருக்கொண்டவனாகிய திருமால் .
பெண்ணடி பெண்வழி .
பெண்ணரசி அழகிற் சிறந்தவள் ; இராணி .
பெண்ணரசு காண்க : பெண்ணரசி ; குடும்பத்தில் பெண் நடத்தும் ஆட்சி .
பெண்ணருங்கலம் பெண்களிற் சிறந்தவள் .
பெண்ணலம் பெண்மைக்குணம் ; பெண்ணின் அழகு முதலியன ; பெண்ணின்பம் .
பெண்ணலி பெண்தன்மை மிக்க அலி .
பெண்ணழைத்தல் திருமணத்திற்கு மணமகளை மணமகன் வீட்டிற்கு அழைத்தல் ; திருமணம் செய்தல் .
பெண்ணன் வீரமில்லாதவன் .
பெண்ணாசை பெண்மீது வைக்கும் பற்று .
பெண்ணாயகம் பெண்களுக்குள் அரசி .
பெண்ணாள் நடவு முதலிய பயிர்வேலை செய்யும் உழத்தி ; பெண்நட்சத்திரம் .
பெண்ணாறு கிழக்குநோக்கி ஓடும் ஆறு ; ஓர் ஆற்றின் பெயர் .
பெண்ணிராசி இடபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் என்னும் ஆறு இரட்டை ராசிகள் .
பெண்ணீர்மை பெண்மைக்குணம் .
பெண்ணீலி கொடியவள் ; பெண்பேய் .
பெண்ணுறுப்பு பெண்ணுக்குரிய அங்கங்கள் ; பெண்குறி .
பெண்ணெடுத்தல் திருமணம் செய்தல் .
பெண்ணெழுத்து உயிர்மெய் ; ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ என்னும் நெட்டெழுத்துகள் .
பெண்ணை பனைமரம் ; பெண்ணையாறு ; அனுடநாள் ; காண்க : நீர்முள்ளி ; பெண்மரம் .
பெண்தானையான் பெண்படையையுடைய காமன் .
பெண்பருவம் காண்க : மகளிர்பருவம் .
பெண்பழி பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி ; பெண்ணை வருத்தல் அல்லது வலாற்காரம் செய்தலால் நேரும் பழி .
பெண்பனை காய்க்கும் பனை .
பெண்பாகன் சிவபிரான் .
பெண்பாடு பெண்பிள்ளையின் உழைப்பு .
பெண்பார்த்தல் திருமணத்திற்கு மணமகளைத் தேர்ந்தெடுத்தல் .
பெண்பால் ஐம்பால்களுள் ஒன்று ; மகளிர் இனம் .
பெண்பாலெழுத்து நெட்டெழுத்து .
பெண்பாவம் பெண்பழி .
பெண்பாற்பருவம் காண்க : மகளிர்பருவம் .
பெண்பிள்ளை பெண்குழந்தை ; பெண்மனைவி .
பெண்பிறத்தல் பெண்பிறவி எடுத்தல் .
பெண்பிறந்தார் பெண்டிர் .