பை முதல் - பைவருதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பை ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ) ; நிறம் ; அழகு ; பசுமை ; இளமை ; உடல்வலி ; துணி , தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம் ; பாம்புப்படம் ; குடல் , மூத்திரப்பை முதலிய உடல் உறுப்பு ; நாணயவகை .
பை (வி) கோபி ; விரி .
பைக்கம் பிச்சை .
பைக்கலம் பச்சைக்குப்பி .
பைகிரி நாய் .
பைங்கண் குளிர்ந்த கண் ; பசிய உடம்பு ; சினத்தால் பசிய கண் : பசுமையால் உள்ள இடம் .
பைங்கிளி பச்சைக்கிளி ; அழகிய இளம்பெண் .
பைங்குழி கருத்தங்கும் இடம் .
பைங்கூழ் இளம்பயிர் ; விளைநிலம் ; நோய் .
பைங்கொடி பச்சிலைக்கொடிவகை .
பைசந்தி காண்க : பைங்குழி ; வாக்கு நான்கனுள் ஒன்றாயும் நாதரூபமாயுள்ள ஒலிவடிவெழுத்து .
பைசல் பையன் ; தீர்ப்பு ; வழக்கு முதலியவற்றின் தீர்மானம் ; இறப்பு .
பைசா ரூபாவில் நூறில் ஒரு பகுதி ; சில்லறை .
பைசாசசத்துவம் பெண்டிரது பத்துச் சத்துவங்களுள் ஒன்று .
பைசாசநிலை ஒரு காலில் நின்று பிறிதொரு காலை முடக்கி நிற்றல் .
பைசாசம் பேய் ; வில்லோர் நிலை நால்வகையுள் ஒருகாலை நிலையாக ஊன்றி ஒரு காலை முடக்கி நிற்கும் நிலை ; எண்வகை மணங்களுள் துயின்றாள் ; களித்தாள் ; மூத்தாள் ; இழிந்தாள் முதலிய மகளிரைச் சேரும் மணம் ; இரும்பு .
பைசாசி பெண்பிசாசு ; காண்க : சடாமாஞ்சில் , பிராகிருத மொழிகளுள் ஒன்று .
பைசுனம் இவறல் ; புறங்கூறுகை .
பைஞ்சாய் கோரைப்புல் .
பைஞ்சேறு சாணம் .
பைஞ்ஞிணம் புதிய இறைச்சி .
பைஞ்ஞிலம் மக்கள் தொகுதி .
பைஞ்ஞீல் மக்கள் தொகுதி .
பைஞ்ஞீலம் மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை .
பைஞ்ஞீலி மக்கள்தொகுதி ; பசிய நிலம் ; வாழைவகை .
பைத்தல் பசுமையாதல் ; ஒளிர்தல் ; பாம்பு படம் விரித்தல் ; கோபித்தல் ; பொங்குதல் ; மிகுதல் .
பைத்தியக்காரன் பித்துப்பிடித்தவன் .
பைத்தியம் கிறுக்கு ; மூடத்தனம் .
பைத்து பசுமை .
பைதல் இளையது ; சிறுவன் ; குளிர் ; துன்பம் .
பைதிரம் நாடு .
பைதிருகம் தந்தைக்குரியது ; தந்தை வழியாக வந்த பொருள் ; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் நான்காவது .
பைது பசுமை ; ஈரம் .
பைந்தார் செவ்விமாலை .
பைந்தினை ஒரு தினைவகை ; தினை .
பைந்து பந்து .
பைந்தொடி பொன்வளையல் ; பெண் .
பைந்நாகம் நாகப்பாம்பு ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .
பைப்பய மெல்லமெல்ல .
பைபீலம் எறும்பு .
பைபீலவாதம் எறும்புகளின் பேச்சறிதல் ; அணுப்பரிணாம வாதம் .
பைபீலிகை காண்க : பைபீலம் .
பைம்பூண் பசுமையான பொன்னாற் செய்யப்பட்ட அணிகலன் .
பைம்பொன் பசும்பொன் ; மேருமலை .
பைம்மறித்தல் காண்க : பைமறி ; பையின் வாயை மூடுதல் .
பைம்மை பசுமை ; அருகதவப்பெண் .
பைமறி பையின் உட்புறத்தை வெளிப்புறமாகத் திருப்புதல் .
பைமை காண்க : பைம்மை .
பைய மெல்ல .
பையப்பைய மெல்லமெல்ல ; கொஞ்சங்கொஞ்சமாக .
பையம் கூடை ; காண்க : கோரை .
பையர நாகம் .
பையரவு நாகம் .
பையல் காண்க : பொடியன் .
பையன் சிறுவன் ; மகன் .
பையாத்தல் வருந்துதல் ; அச்சந்தோன்றுதல் .
பையாப்பு துன்பம் .
பையுள் சிறுமை ; துன்பம் ; நோய் ; மயக்கம் .
பையெனல் மெதுவாதற்குறிப்பு ; ஒளி மழுங்குதற்குறிப்பு ; வருந்தற்குறிப்பு .
பையோடதி பச்சைக்கொடி .
பையோலை பச்சோலை .
பைரவம் அச்சம் ; பயங்கரம் ; சைவசமயவகை ; செவ்வழி யாழ்த்திறங்களுள் ஒன்று .
பைரவர் துர்க்கையின் படையினரான கணங்கள் .
பைரவன் சிவமூர்த்தங்களுள் ஒருவரான வைரவக்கடவுள் .
பைரவி துர்க்கை ; ஒரு பண்வகை .
பைவர் துன்பமுடையவர் .
பைவருதல் துயருறுதல் .