பொ முதல் - பொட்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பொ ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஒ) .
பொக்கணம் முடிச்சு ; பெருமருந்துக்கொ .
பொக்கணி குழியுரல் ; விரிந்த தொப்புள் ; ஒரு வகைப் பான ஏனம் .
பொக்கணை மரப்பொந்து ; கல்வளை ; குழியுரல் .
பொக்கம் பொய் ; வஞ்சகம் ; குற்றம் ; மிகுதி ; உயரம் ; பொலிவு ; அச்சம் .
பொக்கரணி கோயிலை அடுத்துள்ள குளம் .
பொக்கல் காண்க : பொக்கை .
பொக்கல்வாய் காண்க : பொக்கைவாய் .
பொக்கன் தோற்றப்பொலிவுள்ளவன் .
பொக்கிப்பயல் தறிதலை .
பொக்கிப்போதல் கொப்புளமுண்டாதல் ; புண்கட்டி உண்டாதல் .
பொக்கு மரப்பொந்து ; குற்றம் ; உள்ளீடு முற்றாத தானியம் ; தானிய நொறுங்கு ; பொருக்கு .
பொக்குதல் கொப்புளங்கொள்ளுதல் .
பொக்குப்பொக்கெனல் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; சுடர் விட்டுவிட்டு வீசுதற்குறிப்பு .
பொக்குவாய் காண்க : பொக்கைவாய் .
பொக்குள் கொப்பூழ் .
பொக்குளம் கொப்புளம் .
பொக்குளித்தல் கொப்புளம் கிளம்புதல் .
பொக்குளிப்பான் அம்மைவகை .
பொக்கெனல் விரைவுக்குறிப்பு .
பொக்கை சிறுதுளை ; மூளியாயிருக்கை ; நொய் முதலியவற்றின் நொறுங்கு ; குற்றம் .
பொக்கைப்பல் ஓட்டையான பல்வரிசை .
பொக்கைவாய் பல்லுப்போன வாய் .
பொகடி மகளிர் காதணிவகை .
பொகில் அரும்பு .
பொகுட்டு கலங்கல்நீரில் எழுங் குமிழி ; தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை ; மலை .
பொகுத்தல் ஓட்டை செய்தல் .
பொகுவல் பறவைவகை .
பொங்கடி யானை ; சிங்கம் .
பொங்கத்தம்பொங்கு போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் .
பொங்கத்தம்பொங்கோ போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அடைக்கலக் குரல் .
பொங்கம் மகிழ்ச்சி ; மிகுதி ; ஒழுங்கு ; நெற்றி ; நறுமணம் ; பொலிவு .
பொங்கர் மரக்கொம்பு ; மலை ; சோலை ; இலவமரம் ; வாடற்பூ .
பொங்கல் பொங்குதல் ; பெருங்கோபம் ; மிளகு , சீரகம் , உப்பு , நெய் முதலியன கலந்து இட்ட அன்னம் ; தைப்பொங்கல் திருவிழா ; பருமை ; மிகுதி ; பொலிவு ; கள் .
பொங்கல்வைத்தல் தெய்வத்துக்குப் பொங்கல் அன்னஞ் சமைத்தல் ; அழித்தல் .
பொங்கலாடுதல் பஞ்சுபோற் பறத்தல் .
பொங்கலிடுதல் காண்க : பொங்கல்வைத்தல் .
பொங்கலோபொங்கல் தைப்பொங்கலிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை ஓட்டிவிடும்போதும் மகிழச்சியுடன் கூறும் பேரொலி .
பொங்கழி தூற்றாத நெற்போலி .
பொங்கற்படி தைப்பொங்கல் நாளன்று கொடுக்கும் கொடை ; புது மணமக்களுக்குத் தைப்பொங்கலுக்காக அளிக்கும் சீர்வரிசை .
பொங்கற்பண்டிகை தைமாதம் முதல்நாள் அன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் படைக்கும் திருவிழா .
பொங்கற்பானை தைப்பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதுப்பானை ; வயிறுபெருத்தவன் .
பொங்காரம் பொங்குதல் ; பெருந்துயர் ; வளையலுப்பு .
பொங்கிவழிதல் சோறு முதலியன கொதித்துப் புறத்து வடிதல் ; செல்வம் பெருகுதல் .
பொங்கு செல்வச்செழிப்பு ; நற்பேறு .
பொங்குகாலம் செழிப்புக் காலம் .
பொங்குகிறவன் சமையற்காரன் .
பொங்குங்காலம் காண்க : பொங்குகாலம் .
பொங்குசனி வாழ்நாளில் இரண்டாம் முறைவரும் ஏழரையாண்டுச் சனி ; வளர்பிறைச் சனிக்கிழமை .
பொங்குதல் காய்ந்து கொதித்தல் ; கொந்தளித்தல் ; மிகுதல் ; பருத்தல் ; மேற்கிளர்தல் ; மகிழ்ச்சிகொள்ளுதல் ; கோபித்தல் ; செருக்குறுதல் ; நுரைத்தெழுதல் ; விளங்குதல் ; மயிர் சிலிர்த்தல் ; வீங்குதல் ; விரைதல் ; துள்ளுதல் ; கண் சூடுகொள்ளுதல் ; உயர்தல் ; செழித்தல் ; ஒலித்தல் ; சமைத்தல் .
பொச்சம் பொய் ; குற்றம் ; அவா ; தேங்காய் மட்டை ; உணவு .
பொச்சாத்தல் மறத்தல் ; இகழ்தல் .
பொச்சாப்பன் மறதியுள்ளவன் .
பொச்சாப்பு மறதி ; பொல்லாங்கு ; குற்றம் ; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை .
பொச்சு குற்றம் ; பழத்தில் கேடடைந்த பகுதி ; தேங்காய்மட்டை ; பெண்குறி ; பெண்குறிமயிர் ; மலத்துளை ; மயிர்க்கொத்து .
பொச்செரிப்பு பொறாமை .
பொச்சை காடு ; கரிகாடு ; சிறுமலை ; மலை ; புழுக்கூடு ; குற்றம் ; தொப்பைவயிறு .
பொசி கசிவது ; ஊன்நீர் ; துத்தம் .
பொசித்தல் காண்க : புசித்தல் .
பொசிதல் கசிதல் ; வடிதல் ; மனமுருகல் ; செய்தி வெளியாதல் .
பொசிவு நெகிழ்வு ; கசிவு .
பொசுக்குதல் சாம்பலாக எரித்தல் ; வெதுப்புதல் ; தீயில் வாட்டுதல் ; துன்பப்படுதல் ; குசுவிடுதல் .
பொசுக்கெனல் விரைவுக்குறிப்பு .
பொசுங்கல் கருகினது ; மந்தன் ; வலுவில்லான் ; சிறுதூற்றல் .
பொசுங்குதல் எரிக்கப்படுதல் ; காய்தல் ; வாட்டப்படுதல் ; அழிவுறுதல் ; இணங்குதல் .
பொசுபொசுத்தல் இரகசியம் பேசுதல் ; மெதுவாகக் கசிதல் ; எரிச்சல் உண்டாகும்படி அடிக்கடி பேசுதல் ; மழை துளித்தல் .
பொசுபொசெனல் வலியற்றுப்போதல் ; எளிதில் எரிதற்குறிப்பு ; இலேசாய்ப் பெய்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
பொஞ்சுதல் செழித்தல் ; இணங்குதல் .
பொட்ட விரைவாக ; முழுதும் .
பொட்டச்சி காண்க : பொட்டைச்சி .
பொட்டணம் சிறுமூட்டை ; ஒற்றடமிடும் சீலைப்பந்து .
பொட்டணி சிறுமூட்டை ; ஒற்றடமிடும் சீலைப்பந்து .
பொட்டல் பாழிடம் ; திறந்த வெளியிடம் ; தலைவழுக்கை .
பொட்டலம் சிறுமூட்டை ; கதவுகளில் அமைந்த வேலைவகை .
பொட்டி பெட்டி ; விலைமகள் .