மூ முதல் - மூச்சை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மூ ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஊ) ; மூப்பு ; மூன்று .
மூக்கடைப்பான் காண்க : மூக்கடைப்பு ; மாட்டு நோய்வகை .
மூக்கடைப்பு நீர்க்கோள் அடைப்பு ; மூக்குநோய் வகை .
மூக்கணாங்கயிறு மாட்டிற்கு மூக்கிலிடுங்கயிறு .
மூக்கணை காண்க : மூக்கணாங்கயிறு ; வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம் .
மூக்கணைமரம் வண்டியின் ஏர்க்கால்மரம் .
மூக்கம் சீற்றம் .
மூக்கர் கீழ்மக்கள் .
மூக்கரிகத்தி வெற்றிலையின் காம்பரிகருவி .
மூக்கறுத்தல் மூக்கையறுத்தல் ; இழிவுபடுத்தல் ; அவமானஞ்செய்தல் .
மூக்கறுப்பு இழிவு ; அவமானம் .
மூக்கறை குறைமூக்குள்ளவர் ; குறை மூக்குள்ளது .
மூக்கறைச்சி குறைமூக்குள்ளவள் ; செடிவகை ; அரிதாரம் .
மூக்கன் எடுப்பான மூக்குள்ளவன் ; மீன் கொத்தி ; கீழ்மகன் ; கடுஞ்சினம் .
மூக்காங்கொழுந்து மூக்குமுனை .
மூக்காந்தண்டு மூக்கின் எலும்புள்ள மேற்பாகம் .
மூக்காலழுதல் சிணுங்குதல் .
மூக்கிரட்டை ஒரு கொடிவகை .
மூக்கில் வசம்பு .
மூக்கில்வேர்த்தல் இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை உண்டாதல் ; முன்னடையாளம் தெரிதல் .
மூக்கிலழகி காண்க : நிலக்குமிழ் .
மூக்கிலி காண்க : மூக்கறை ; பசலைவகை .
மூக்கு நாசி ; பறவையலகு ; யானைத்துதிக்கை ; பாண்டத்தின் வாயிலுள்ள மூக்குப்போன்ற உறுப்பு ; வண்டிப்பாரின் தலைப்பகுதி ; முளைதோன்றும் வித்தின் முனை ; இலைக்காம்பு ; குறுநொய் ; முரட்டுப்பேச்சு .
மூக்குக்கண்ணாடி பார்வை நன்கு தெரியுமாறு மூக்கின்மேல் அணியும் கண்ணாடி .
மூக்குக்குத்துதல் சிறுமிகளின் மூக்கில் துளையிடுதல் .
மூக்குச்சளி மூக்கினின்று வெளிப்படுஞ் சளி .
மூக்குச்சிந்துதல் மூக்குச்சளியை வெளிப்படுத்துதல் .
மூக்குத்தி மகளிர் மூக்கணி ; மூக்குவாளி ; கொடிவகை .
மூக்குத்தூள் மூக்கால் உறிஞ்சப்படும் புகையிலைப் பொடி .
மூக்குப்பிடிக்கவுண்ணுதல் நிரம்பவுண்ணுதல் .
மூக்குப்பீனசம் மூக்கிற் சதைவளரும் நோய் ; பீனசநோய் .
மூக்குயர்த்தல் பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாம லிருப்பதற்காக இழுத்து விடுதல் .
மூக்குறிஞ்சுதல் ஓசையுண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல் .
மூக்கூளை காண்க : மூக்குச்சளி .
மூக்கை மொட்டு .
மூக்கைச்சொறிதல் எளிமைகாட்டுதல் .
மூக்கொலி மூக்கின்வழிப் பிறக்கும் ஓசை .
மூக்கொலியன் சங்கு .
மூகம் மோனம் ; ஊமை ; வறுமை ; பைசாசவகை ; ஒரு மீன்வகை .
மூகன் ஓர் அசுரன் ; ஊமையன் ; வறிஞன் .
மூகாத்தல் வாய்பேசாதிருத்தல் .
மூகி கேழ்வரகு .
மூகை ஊமை ; ஈரற்குலை ; படைக்கூட்டம் ; சங்கஞ்செடி .
மூகைமை ஊமையாயிருக்குந் தன்மை .
மூங்கர் ஊமையர் .
மூங்கா கீரிப்பிள்ளை ; ஆந்தை .
மூங்கி பாசிப்பயறு .
மூங்கில் புறக்காழுள்ள பெரும்புல்வகை ; புனர் பூசநாள் .
மூங்கிலரிசி மூங்கிலினின்று உண்டாகும் விதை .
மூங்கிலாடை மூங்கிலின் உட்புறத்தில் மெல்லிதாகவுள்ள தாள .
மூங்கிலுப்பு நோய்கொண்ட மூங்கிற் கணுக்களினின்று வடியும் பிசின் .
மூங்கிற்குழல் புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் .
மூங்கிற்குழாய் புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் .
மூங்கிற்கோல் காண்க : மூங்கிற்றண்டு .
மூங்கிற்பண்ணை அடர்த்தியான மூங்கிற்காடு .
மூங்கிற்பத்தை நீளவாக்கிற் பிளந்த மூங்கில் துண்டு , பிளாச்சு .
மூங்கிற்புதர் நெருங்கி வளர்ந்த மூங்கில் தொகுதி .
மூங்கிற்றண்டு மூஙங்கிற்கழி .
மூங்கு காண்க ; மூங்கி .
மூங்கை ஊமை .
மூங்கையான் ஊமையன் .
மூச்சடக்குதல் மூச்சை உள்ளடக்குதல் .
மூச்சடைத்தல் மூச்சுத் திணறச்செய்தல் .
மூச்சடைப்பு மூச்சுவாங்குகை ; முட்டுமூச்சு வாங்குகை .
மூச்சு உயிர்ப்பு ; ஆண்மை ; பலம் ; முயற்சி .
மூச்சுக்காட்டுதல் ஆண்மை காட்டுதல் ; ஆள் அரவஞ்செய்தல் .
மூச்சுப்பறிதல் சுவாசம் வெளியே செல்லல் ; பலவீனப்படுகை .
மூச்சுப்பிடித்தல் மூச்சை உள்ளடக்குதல் ; மூச்சுத் திணறுதல் ; இடுப்பில் சுளுக்கிக்கொள்ளுதல் ; கடுமையாக முயலுதல் .
மூச்சுப்பிடிப்பு ஒரு மூச்சுநோய்வகை ; மூச்சை உள்ளே அடக்குகை ; இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு .
மூச்சுப்பேச்சு பேசுகை ; உயிரிருக்கும் குறி .
மூச்சுவாங்குதல் காண்க : மூச்சடக்குதல் ; பெருமூச்சு விடுதல் ; வெடிப்புக் காணுதல் ; இளைப்பினால் பெருமூச்சு வருகை ; இறுதிக்காலத்தில் நெடுமூச்சு விடுகை .
மூச்சுவிடாமல் வாய்திறவாமல் ; இடைவிடாமல் .
மூச்சுவிடுதல் உட்கொண்ட காற்றை வெளியிற் போக்குதல் ; வெடிப்புக் காணுதல் .
மூச்செறிதல் காண்க : மூச்சுவிடுதல் .
மூச்சை காண்க : மூர்ச்சை .