மே முதல் - மேதகவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மே ஓர் உயிர்மெய்யெழுத்து (ம்+ஏ) ; மேம்பாடு ; அன்பு .
மேக்கடித்தல் வஞ்சித்தல் ; ஆப்பறைதல் .
மேக்கு மேலிடம் ; மேலான தன்மை ; மேற்கு ; ஆப்பு ; மர ஆணி .
மேகக்கல் ஆட்டுரோசனை .
மேககர்ச்சனை மேகங்களினூடே உண்டாகும் ஒலி .
மேககர்ச்சிதம் மேகங்களினூடே உண்டாகும் ஒலி .
மேககாலம் கார்காலம் .
மேகச்சிரங்கு கெட்டநீரால் தோன்றும் சிரங்கு வகை .
மேகச்சிலை மாக்கல் ; சுக்கான்கல் .
மேகசஞ்சாரம் மேகநோய் படருகை ; மழை முகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு .
மேகசம் முத்து .
மேகசாரம் கருப்பூரம் .
மேகசாலம் முகிற்கூட்டம் ; ஒரு மணிவகை .
மேகதனு இந்திரவில் .
மேகதாரி மயிலிறகு .
மேகதீபம் மின்னல் .
மேகநாதம் மேகமுழக்கம் ; சிறுகீரை ; பலாசமரம் ; பச்சிலை .
மேகநாதன் இராவணனின் மகனான இந்திரசித்து ; வருணன் ; நவச்சாரம் .
மேகநீர் வெட்டைநோய் ; கெட்டநீர் .
மேகப்படை தோலின்மேல் உண்டாகும் சொறிவகை .
மேகப்புள் வானம்பாடி .
மேகபடலம் ஒரு கண்ணோய்வகை ; மேகத்தொகுதி ; மேகநோயாற் படரும் புண்வகை .
மேகபந்தி மேகக்கூட்டம் .
மேகம் முகில் ; எழுவகை மேகம் ; நீர் ; குயில் ; காண்க : முத்தக்காசு ; தீநீர் ; தீநடத்தை , மூத்திரக்கோளாறு என்பவற்றால் உண்டாகும் நோய் ; வெள்ளைநோய் .
மேகமண்டலம் மேகம் திரியும் வானவெளி .
மேகமூட்டம் மேகம் பரந்துநிற்கை .
மேகமூர்ந்தோன் இந்திரன் .
மேகயோனி புகை .
மேகரணம் பறங்கிப்புண் ; குட்டம் .
மேகராகக்குறிஞ்சி குறிஞ்சித்திறத்தின் ஒன்று .
மேகராகம் பாலையாழ்த்திறவகை .
மேகராடி மயிலடிக் குருந்துமரம் .
மேகலாபதம் இடை .
மேகலை அரைஞாண் ; பிரமசாரி தன் இடையிலணிவதற்கு உரிய நாணலாலியன்ற முப்புரிக்கயிறு ; மகளிர் இடையிலணியும் ஏழு கோவையுள்ள அணிவகை ; ஆடை ; புடைவை ; கோயில்விமானத்தின் வெளிப்புறத்திற் செய்யப்பட்ட எழுதகவேலை ; தூணைச் சுற்றியுள்ள வளையம் ; ஓமகுண்டத்தைச் சுற்றி இடுங்கோலம் ; மலைச்சரிவு ; மேருமலையின் சிகரத்தொடர் ; குதிரையின் கொப்பூழுக்கு மேலே காணப்படும் நற்சுழி .
மேகவண்ணக்குறிஞ்சி மேகவண்ணப் பூவுள்ள செடிவகை .
மேகவண்ணன் மேகம்போன்ற கருநிறமுள்ள திருமால் .
மேகவர்ணம் கருநீலம் ; பலபடியாக மாறித்தோன்றும் நிறம் .
மேகவருணை அவுரி .
மேகவாகனன் இந்திரன் ; சிவன் ; கருங்கல .
மேகவாய் தயிர் .
மேகவாயு மேகநோய் வெப்பத்தாலுண்டாகும் வாயு ; வாதநோய்வகை .
மேகவிடுதூது காதலரிடம் மேகத்தைத் தூது விடுவதாகக் கூறும் நூல்வகை .
மேகவிநாசம் மழைமேகம் கலைகை .
மேகவியாதி கெட்டநீரால் உண்டாகும் நோய்வகை .
மேகவூறல் கெட்டநீர் பரவுகை ; காண்க : மேகப்படை .
மேகவெட்டை வெட்டைநோய்வகை .
மேகனம் ஆண்குறி .
மேகாந்தகாரம் மழைக்காலிருட்டு .
மேகாநந்தி மயில் .
மேகாரம் மயில் .
மேகாரி காண்க : அறுகு ; அவரை .
மேகை இறைச்சி .
மேங்காவற்காரன் நாட்டில் களவு முதலியன நேராமல் காப்பவன் .
மேசகம் இருள் ; கருமை ; புகை ; முகில் ; விரிந்த மயில்தோகை ; குதிரையின் பிடரிமயிர் .
மேசை காலுள்ள பலகை ; சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப்பணம் .
மேட்டி அகந்தை ; மேன்மை ; தலைவன் ; உதவி வேலைக்காரன் ; ஊர்த்தலைவனுக்கு விடப்பட்ட மானியம் .
மேட்டிமை அகந்தை ; மேன்மை ; தலைமை .
மேட்டுநிலம் உயர்வான பூமி .
மேட்டுப்பாய்ச்சல் நீர் ஏறிப் பாயவேண்டியதான மேட்டுநிலம் ; மேட்டில் நீரிறைத்துப் பாய்ச்சுகை ; அரும்பணி .
மேடகம் ஆடு ; இராசிமண்டலத்தின் முதற்பகுதி .
மேடம் காண்க : மேடகம் சித்திரைமாதம் ; காப்புச்சட்டை .
மேடமதி சித்திரைமாதம் .
மேடமாதம் சித்திரைமாதம் .
மேடவீதி இடபம் , மிதுனம் ; கடகம் ; சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி .
மேடன் மேடராசிக்கு உடையவனான செவ்வாய் .
மேடாயனம் மேடராசியில் சூரியன் புகுங்காலம் ; காண்க : மேடவீதி .
மேடு உயரம் ; சிறுதிடர் ; பெருமை ; வயிறு ; மேலிடம் .
மேடூகம் சுவர .
மேடை செய்குன்று ; மாடி ; தளமுயர்ந்த இடப்பகுதி .
மேண்டம் ஆடு .
மேத்தியம் தூய்மை ; சீரகம் .
மேத்தியாசம் வசம்பு .
மேத்திரம் ஆட்டுக்கட .
மேதகம் கோமேதகம் ; மதிப்பு ; மேன்மை ; பாடாணவகை .
மேதகவு மேன்மை , மதிப்பு .