மை முதல் - மைனிகன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மை ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ) ; கண்ணுக்கிடும் அஞ்சனம் ; மசி ; வண்டிமசகு ; கருநிறம் ; இருள் ; பசுமை ; களங்கம் ; கருமேகம் ; வானம் ; குற்றம் ; பாவம் ; அழுக்கு ; பிறவி ; மலடு ; மலடி ; மலட்டு எருமை ; மேடராசி ; ஆடு ; இளமை ; நீர் ; மந்திரவாதத்தில் பயன்படுத்தும் மை ; பண்புப்பெயர்விகுதி ; தொழிற்பெயர்விகுதி ; வினையெச்சவிகுதிகளுள் ஒன்று ; அறியாமை .
மைக்காநாள் மறுநாள் .
மைக்காப்பு எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுசுவடிக்கு மைதடவுகை .
மைக்காலிருட்டு காண்க : மையிருட்டு .
மைக்கூடு எழுதும் மைவைக்குங் கூடு ; காண்க : மைப்பரணி .
மைக்கூண்டு எழுதும் மைவைக்குங் கூடு ; காண்க : மைப்பரணி .
மைகூட்டுதல் மை தயாரித்தல் .
மைச்சாலி கருங்குறுவைநெல் .
மைஞ்சன் மைந்தன் .
மைஞ்சு அழகு ; அணிகலன் ; மேகம் ; பனி .
மைத்தல் கறுத்தல் ; ஒளிமழுங்குதல் .
மைத்திரம் நட்பு ; பகல் பதினைந்து முகூர்த்தங்களுள் மூன்றாவது .
மைத்திராவருணி அகத்தியமுனிவர் .
மைத்திரி நட்பு ; காண்க : மைத்திரீபாவனை .
மைத்திரீபாவனை எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிட்சு புரியும் தியானவகை .
மைத்துனத்தோழன் நகையாடி விளையாடும் முறைமையுடைய தோழன் .
மைத்துனமை மைத்துனமுறைமை .
மைத்துனர் மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான் ; மாமன் அல்லது அத்தையின் மகன் ; உடன்பிறந்தாளின் கணவன் .
மைத்துனன் மனைவி அல்லது கணவனுடன் பிறந்தான் ; மாமன் அல்லது அத்தையின் மகன் ; உடன்பிறந்தாளின் கணவன் .
மைத்துனி மனைவியின் உடன்பிறந்தாள் ; மாமன் அல்லதுஅத்தையின் மகள் ; உடன்பிறந்தான் மனைவி .
மைதா கள்மயக்கம் ; மாவுவகை .
மைதானம் திறந்தவெளியிடம் .
மைதிலி மிதிலையரசனின் மகளான சீதை .
மைதீட்டுதல் கண்ணுக்கு மைபூசுதல் .
மைதுனம் புணர்ச்சி ; திருமணம் .
மைந்தன் மகன் ; வலியவன் ; திண்ணியன் ; ஆண்மகன் ; மாணாக்கன் ; வீரன் ; கணவன் ; வலிமையுடையோன் ; இளைஞன் ; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி .
மைந்து அழகு ; வலிமை ; விருப்பம் ; காமமயக்கம் ; பித்து ; யானையின் மதம் ; அறியாமை .
மைந்நூறு அஞ்சனப்பொடி .
மைப்பரணி அஞ்சனம் வைக்குஞ் சிமிழ் .
மைப்பு கறுப்பு .
மைப்புயல் இருண்ட மேகம் .
மைப்போது காண்க : மைம்மலர் .
மைபோடுதல் வண்டியச்சுக்கு மசகு இடுதல் ; மயக்கித் தன்வயப்படுத்தல் ; ஓலைக்கு மை தடவுதல் .
மைம்மலர் கருங்குவளைப் பூ .
மைம்மா கரும்பன்றி .
மைம்மீன் சனி .
மைம்முகன் கருங்குரங்கு .
மைம்மை மலட்டு எருமை ; மலடி .
மைம்மைப்பு பார்வைக்குறைவு .
மைமல் மாலைநேரம் .
மைமை பூசை .
மையக்கட்டை வண்டியில் அச்சின்மேற் போடுங்கட்டை .
மையம் நடு ; நடுத்தரமானது ; ஐயமானது ; மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு .
மையம்பாய்தல் இருபக்கமுஞ் சாய்தலால் ஒவ்வாமல் நிற்றல் .
மையமண்டபம் தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்த மண்டபம் .
மையல் காண்க : மையன்மை ; செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு ; யானையின் மதம் ; காண்க : கருவூமத்தை .
மையலவர் பித்தர் .
மையலார் மாயவித்தைக்காரர் .
மையவாடி இடுகாடு ; முள்வேலியுள்ள இடம் .
மையன்மா யானை .
மையன்மை காமமயக்கம் ; பித்து .
மையனோக்கம் துயரப்பார்வை .
மையா மலட்டுப்பசு .
மையாடுதல் காண்க : மையோலைபிடித்தல் ; கருமையாதல் .
மையாத்தல் மயங்குதல் ; ஒளிமழுங்குதல் ; பொலிவழிதல் .
மையான் எருமை .
மையிடுதல் கண்ணுக்கு மைதீட்டுதல் ; மந்திரமை தடவுதல் .
மையிருட்டு காரிருள் .
மையிழுது கண்ணுக்கிடும் மை ; ஆட்டுநிணநெய் .
மையுடை காண்க : கருவேல் .
மையூட்டுதல் கண்ணுக்கு மையிடுதல் ; ஓலைக்கு மை தடவுதல் .
மையெழுதுதல் கண்ணுக்கு மையிடுதல் .
மையொற்றி எழுதுமையை ஒற்றும் தாள் .
மையோலைபிடித்தல் கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல் .
மைரேயம் ஒரு மதுவகை ; ஒரு மருந்துத் தைலவகை .
மைவாகனன் ஆட்டுவாகனமுடையோனான அக்கினிதேவன் .
மைவிடை ஆட்டுக்கடா .
மைவிளக்கு எரிவிளக்கு .
மைவைத்தல் அஞ்சனமிட்டு மயக்குதல் ; கண்ணுக்கு அஞ்சனந் தயாரித்தல் ; வெறி உண்டாகும்படி கட்குடித்தல் .
மைனம் மீன் .
மைனா காண்க : நாகணவாய்ப்புள் .
மைனிகன் கறையான் .